அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 128-பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கும் உருவப்படத்திற்கும் அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் சரித்திர நாயகன், ஜனநாயக இந்தியாவின் அடிநாதமான சட்டத்தை இயற்றிவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து அயராமல் குரல் கொடுத்து வந்தவர், சமத்துவத்தை போற்றிய டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது சிலைக்கும், உருவ படத்திற்கும் இந்தியா முழுவதும் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதேபோல் பிரதமர் மோடியும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செல...









