செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது – அமைச்சர் ஆர் பி உதயகுமார்
இரவு 9 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் காரணமாக 2 நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை இன்று எட்டியது. இதனால் இன்று மதியம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல் கட்டமாக ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 1000 கன அடியில் இருந்து 3000 கன அடியாக நீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் திருநீர்மலை, அனகாபுத்தூர், திருமுடிவாக்கம், கவுல் பஜார் பகுதிகளில் ...









