ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கனகராஜ்க்கு கொரோனா! மாநகரம், கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்தை கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் வலிமையுடன் திரும்பி வருவேன் என்று அவர் கூறியுள்ளார்....
அ.தி.மு.க. வேட்பாளரின் டிரைவர் வீட்டில் ரூ.1 கோடி!

அ.தி.மு.க. வேட்பாளரின் டிரைவர் வீட்டில் ரூ.1 கோடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேட்பாளர்களும் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஆங்காங்கே கோடிக்கணக்கில் பணத்தை இடமாற்றம் செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறையும் களமிறங்கியுள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் அரசியல் கட்சியினரின் நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு ஆ...
போராடி மீட்ட சரக்கு கப்பல்!

போராடி மீட்ட சரக்கு கப்பல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்கு கப்பல் போராடி மீட்பு! ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகையில் சூயஸ் கால்வாய் உருவாக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை 20 ஆயிரம் டன் பெட்டகங்களுடன் சென்ற ஜப்பானின் ‘எவர்கிவன்’ என்ற கப்பல் சூயஸ் கால்வாயில் சென்ற போது தரை தட்டி நின்றது. இந்த கப்பல் கால்வாய் முழுவதையும் அடைத்துக் கொள்ளும் வகையில் திரும்பி நின்றதால் சூயஸ் கால்வாயில் கப்பல் போக்கு வரத்து முழுமையாக தடைபட்டது. உலகின் 15 சதவீத கப்பல் போக்குவரத்து இங்கு நடைபெறுகிறது. இதனால் சூயஸ் கால்வாய் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. கச்சா எண்ணை, கால்நடைகள் மற்றும் பல்வேறு சரக்குகளுடன் வந்த நூற்றுக்கணக்கான கப்பல்கள் சூயஸ் கால்வாயில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்த கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டதால் ஆசிய நாடுகளுக்கு...
ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு!

ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு! ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகியோர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டுகள், அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீதிக்கு வந்து போராடியதால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய 2 மந்திரிகளையும் அமைச்சரவையில் இருந்து நீக்கி பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார். உள்துறை மந்திரி பீட்டர் தட்டனுக்கு பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்து. அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெண்களுக்கான தொடர்ச்சியான பதவி உயர்வுகளையும் பிரதமர் அறிவித்தார். ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களுக்கு அதிக பிரதிந...
பிரச்சாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை கட்டிப்பிடித்த பெண்.. உணர்ச்சி சம்பவம்!

பிரச்சாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை கட்டிப்பிடித்த பெண்.. உணர்ச்சி சம்பவம்!

NEWS
ராயபுரம் தொகுதியில் ஏழாவது முறையாக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தலை சந்திக்கிறார்.ஏற்கனவே நடந்து முடிந்த ஆறு தேர்தலில் ஐந்து முறை அதே தொகுதியில் வெற்றி பெற்று மக்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் காலை தொடங்கி இரவு வரையிலும் வீதி தோறும், வீடுகள் தோறும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.நேற்று பஜனை தெருவில் அவர் பிரச்சாரத்திற்காக வந்தபோது உள்ள கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெண்மணி அவர் அருகே வந்து அவள் கையை பிடித்து, "எங்க தெய்வம் நீதானய்யா நீதானய்யா கொரோனா காலத்துல எல்லா உதவியும் செஞ்சு எங்கள காப்பாத்துன தெய்வம் நீ தான நீ ஜெயிக்கணும்ய்யா என்று சொல்லி ஜெயக்குமாரின் கைகளை பற்றிக் கொண்டார். அங்கிருந்த அனைவரும் இந்த காட்சியை பார்த்து உறைந்து போனார்கள் அத்தோடு நிறுத்திக் கொள்ளாத அந்தப் பெ...
ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா!  

ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா!  

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா! பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அரசியலில் இருந்து ஒதுக்குவதாக அறிவித்தார். அதன்பின் அவர் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். அதன்படி நேற்று ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சசிகலா தஞ்சாவூரில் இருந்து கார் மூலம் வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையில் அ.ம.மு.க. வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலை 6 மணிக்கு சசிகலா திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு வந்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கார் மூலம் ராமேசுவரத்திற்கு சென்றார். இரவு அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சசிகலா வந்தார். அவருக்கு நுழைவு வாயிலில் கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற் பளிக்கப்ப...
சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல் மிதக்கத் தொடங்கியது!

சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல் மிதக்கத் தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics
சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல் மிதக்கத் தொடங்கியது சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிவன் என்ற சரக்கு கப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக்கொண்டது. மணல் மற்றும் சகதியில் சிக்கியதால் கப்பலை நகர்த்த முடியவில்லை. இதனால் அந்த வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 450-க்கும் அதிகமான கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கின்றன. இந்த சம்பவத்தால், சர்வதேச வர்த்தகம், பெரிதும் பாதிக்கப்பட்டது. கப்பலின் இடது பக்கத்தில் இருக்கும் மணல் மற்றும் சகதியை நீக்கி, கப்பலை மீண்டும் நீரில் மிதக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பல்வேறு இழுவைப் படகுகளும், இரண்டு அகழ்வு எந்த...
தமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமியாக அதிமுக ஆட்சி நடக்கிறது- கனிமொழி பேச்சு!

தமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமியாக அதிமுக ஆட்சி நடக்கிறது- கனிமொழி பேச்சு!

HOME SLIDER, NEWS
தமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமியாக அதிமுக ஆட்சி நடக்கிறது- கனிமொழி பேச்சு! ]திருவாரூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கே.கலைவாணனை ஆதரித்து மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. திருவாரூர் வாளவாய்க்கால் ரவுண்டானா அருகில் வேனில் பிரசாரம் செய்தார். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. மொழி, சமூகநீதிக்கு எதிரான ஆட்சி. விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனியில் மத்திய அரசு அடகு வைத்தால் அதனை ஏற்றுக்கொள்ளுகின்ற ஆட்சி நடக்கிறது. தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்து பா.ஜனதாவின் பினாமி ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை தேர்தலின்போது முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள், கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். விவசாயிகளின் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும். நெல் குவிண்டாலுக...
பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக- ராகுல்காந்தி பேச்சு!

பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக- ராகுல்காந்தி பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக- ராகுல்காந்தி பேச்சு! தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சேலம்-உளூந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மதன்லால் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது, பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக. இது பழைய அதிமுக என்று யாரும் நினைக்க வேண்டாம் தற்போது இருப்பது மாஸ்க் அணிந்த அதிமுக. அதிமுகவின் முகக் கவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ் பாஜகதான் தெரியும். பழைய அதிமுக போய்விட்டது. தற்போது ஆர்எஸ்எஸ் பாஜகவினால் இயக்கப்படும் அதிமுக உள்ளது. அமித்ஷா மோகன் பகவத் காலில் விழ ஒரு தமிழர் கூட விரும்ப மாட்டார்கள், ஆனார் அதிமுகவினர் செய்கின்றனர். புலனாய்வுத் துறை மத்திய...
தமிழகத்தில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது- திருமாவளவன்!

தமிழகத்தில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது- திருமாவளவன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது- திருமாவளவன்! சேலம் சீலநாயக்கன்பட்டியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது, 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று புதிய வரலாற்றை படைக்க வேண்டும். எதிரணியில் இருப்பவர்கள் கொள்கை அடிப்படையில் இணைந்தவர்கள் அல்ல, அதிமுக தலைமையிலான கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். அதிமுக மீது சவாரி செய்து தமிழகத்தில் வலிமை பெறலாம் என பாஜக பார்க்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லை என்ற நிலையை பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை. தமிழகத்தை பாஜகவிடம் அடகு வைத்திருக்கிற அதிமுகவிடம் இருந்து மீட்க வேண்டும். சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார்கள். அதிமுக, பாமக என யார் வெற்றி பெற்றாலும் அவர்...