அடேய் யார் பார்த்த வேலை இது… கும்பகோணம் கூப்பன் சீட்டிங்!
அடேய் யார் பார்த்த வேலை இது... கூப்பன் சீட்டிங்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரிய கடைத்தெரு பாட்ராச்சாரியார் தெருவில் அமைந்துள்ள பிரியம் மளிகை ஏஜென்சி என்ற கடையில் பொதுமக்கள் சிலர் அந்தக் கடையின் பெயர் பொறித்து ரூ.2000 என குறிப்பிடப்பட்டிருந்த டோக்கனை கொண்டு வந்து அரசியல் கட்சியினர் பணத்திற்கு பதிலாக தங்கள் கடையில் இலவசமாக மளிகை பொருட்கள் வாங்கி கொள்ள டோக்கன் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.
டோக்கனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் சேக் முகமது நான் யாருக்கும் டோக்கனிற்கு மளிகை பொருட்கள் வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கவில்லை, தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறியுள்ளார். அப்போதுதான் அவர்களுக்கு இது போலி டோக்கன் என்பது தெரியவந்துள்ளது .ஆனால் தொடர்ந்து கூட்டம் அதிகரிக்கவே அவர் மளிகை கடையை பூட்டிவிட்டு, கடையின் கதவில் வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனிற்க்கும் எங்களுக்கும் எந்த சம்பந...









