ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

குமரி மாவட்டத்தில் 4-வது நாளாக மழை: வெள்ளம் பாதித்த பகுதிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

குமரி மாவட்டத்தில் 4-வது நாளாக மழை: வெள்ளம் பாதித்த பகுதிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
குமரி மாவட்டத்தில் 4-வது நாளாக மழை: வெள்ளம் பாதித்த பகுதிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு! தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை  பரவலாக பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாகவே மழை பெய்துவந்தது. 12-ந் தேதி முதல் மிக கனத்த மழை கொட்டியது. அன்று முதல் தொடர்ந்து பெய்த மழையால் நேற்று முன் தினம் மாவட்டமே வெள்ளக்காடானது. 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டது. சுமார் 50 ஆயிரம் வீடுகளில் மழை நீர் புகுந்தது. மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கால்வாய் எது? சாலை எது? என்று தெரியாத அளவுக்கு வெள்ளம் ஓடியது. குழித்துறை, தோவாளை, தேரேகால்புதூர், தக்கலை, குமாரபுரம், நித்திரவிளை, கோதையாறு, குற்றியாறு, மோதிரமலை பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்தது. இதுபோல பல பாசன குளங்கள் உடைப்பெடுத்தன. அந்த தண்ணீரும் அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர் நிலங்க...
டெல்லியில் காற்று மாசை குறைக்க மாதத்தில் ஒரு நாளாவது இதை செய்யுங்கள்… துணை முதல்வர் வேண்டுகோள்!

டெல்லியில் காற்று மாசை குறைக்க மாதத்தில் ஒரு நாளாவது இதை செய்யுங்கள்… துணை முதல்வர் வேண்டுகோள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் காற்று மாசை குறைக்க மாதத்தில் ஒரு நாளாவது இதை செய்யுங்கள்... துணை முதல்வர் வேண்டுகோள்! டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து  காற்று மாசை கட்டுப்படுத்த அரசு புதிய திட்டங்களை வகுத்துள்ளது. பள்ளிகள் அனைத்தும் திங்கட்கிழமை முதல் ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தவேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால்  உத்தரவிட்டார். மேலும், அரசு ஊழியர்கள் 7 நாட்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றவேண்டும், கட்டுமான பணிகள் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதிக்கப்படமாட்டாது என்றும் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, போக்குவரத்து சி...
கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு! கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது. இதனால் மாநிலங்களில் தலைநகரங்களில் உள்ள மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதி இருந்தது. ஆனால், கிராம புற மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத நிலையில் இருந்தனர். இதனால் நாடு முழுவதும் மாதந்தோறும் பல கோடி ரூபாய் வீணாகி வருகிறது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பொதுமக்கள் கிழிந்த, மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அவற்றின் கிளை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் வங்கிகள், ரிசர்வ் வங்கியின் வ...
200 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

200 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
200 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாத மழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தேங்கிக் கிடக்கும் மழைநீரில் பாம்பு, பல்லி, தவளை, தேள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் இறந்த நிலையில் மிதக்கின்றன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கிய தண்ணீரில் கொசு அதிகம் உற்பத்தி யாகும் என்பதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 200 வார்டுகளிலும் இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைக்கப்பட்டு...
குருமூர்த்தி சர்ச்சை “பெயர் அரசியல்” செய்யாதீங்க – அன்புமணிக்கு சூர்யா ஹாட் பதில்

குருமூர்த்தி சர்ச்சை “பெயர் அரசியல்” செய்யாதீங்க – அன்புமணிக்கு சூர்யா ஹாட் பதில்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  அன்புமணிக்கு சூர்யா பதில்.. * மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி. நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், ‘அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது’ என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம். கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறீவிர்கள் என நினை...
சென்னையில் பலத்த காற்று: மரங்கள் முறிவு, மின்சாரம் துண்டிப்பு!

சென்னையில் பலத்த காற்று: மரங்கள் முறிவு, மின்சாரம் துண்டிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் பலத்த காற்று: மரங்கள் முறிவு, மின்சாரம் துண்டிப்பு! சென்னையில் கடந்த சனிக்கிழமையில் இருந்து மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று மாலையில் இருந்து இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தரைக்காற்று 40 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசும் என எச்சரித்தது. தற்போது சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகிறது. கிண்டி ஆளுநர் மாளிகை அருகே இன்று காலை மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. இதற்கிடையே பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை...
கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா- வட தமிழகம் இடையே சென்னை அருகில் கரையை கடக்கும் என வானிமை மையம் தெரிவித்திருந்தது. 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர்  4 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. சென்னையில் இருநது 80 கி.மீட்டர் தொலைவில் உள்ளது என வானிலை மையம் அறிவித்திருந்தது. சற்று நேரம் சென்ற பின்னர், கடந்த 6 மணி நேரத்தில் 16 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்றாலும், கனமழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்....
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நாளை ஆளுநர்கள் மாநாடு!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நாளை ஆளுநர்கள் மாநாடு!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நாளை ஆளுநர்கள் மாநாடு! மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுக்கான மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு 50-வது மாநாடு நடந்தது. அதன்பின், கொரோனா பரவலால் கடந்த ஆண்டு இந்த மாநாடு நடக்கவில்லை. இந்தியாவில் கடந்த சில மாதமாக கொரோனா தொற்று குறைந்து வருவதால் இந்த மாநாடு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுக்கான 51-வது மாநாடு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நாளை நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். அவரது தலைமையில் நடைபெறும் 4-வது மாநாடு இது....
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பெட்ரோல் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இதையடுத்து, சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூப...
வருகிற 15-ந்தேதிக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்த பெங்களூரு மாநகராட்சி கெடு!

வருகிற 15-ந்தேதிக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்த பெங்களூரு மாநகராட்சி கெடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வருகிற 15-ந்தேதிக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்த பெங்களூரு மாநகராட்சி கெடு! பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டு ஆய்வின்படி 80 ஆயிரம் வளர்ப்பு நாய்கள் இருப்பது தெரியவந்தது. கட்டாயம் உரிமம் பெற்றப் பின்னரே வளர்ப்பு நாய்களை வளர்க்க வேண்டும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டது. தற்போது வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் அவற்றுக்கு உடல் நலக்குறைவு அல்லது வயது முதிர்ச்சி ஆனால் அவற்றை வீதிகளில் விட்டு விடுகின்றனர். இதனால், சாலைகளில் வளர்ப்பு நாய்கள் இறந்து கிடப்பதை காண முடிகிறது. நடைபயிற்சி என்ற பெயரில் சாலை ஓரங்களில் நடைபாதைகளில் நாய்களை அழைத்துச் செல்வோர் அவைகளை இயற்கை உபாதை கழிக்க வைக்கின்றனர். இதனால், நடைபாதைகளில் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இது...