ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

அடேய் யார் பார்த்த வேலை இது… கும்பகோணம் கூப்பன் சீட்டிங்!

அடேய் யார் பார்த்த வேலை இது… கும்பகோணம் கூப்பன் சீட்டிங்!

HOME SLIDER, NEWS
அடேய் யார் பார்த்த வேலை இது... கூப்பன் சீட்டிங்! தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரிய கடைத்தெரு பாட்ராச்சாரியார் தெருவில் அமைந்துள்ள பிரியம் மளிகை ஏஜென்சி என்ற கடையில் பொதுமக்கள் சிலர் அந்தக் கடையின் பெயர் பொறித்து ரூ.2000 என குறிப்பிடப்பட்டிருந்த டோக்கனை கொண்டு வந்து அரசியல் கட்சியினர் பணத்திற்கு பதிலாக தங்கள் கடையில் இலவசமாக மளிகை பொருட்கள் வாங்கி கொள்ள டோக்கன் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர். டோக்கனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் சேக் முகமது நான் யாருக்கும் டோக்கனிற்கு மளிகை பொருட்கள் வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கவில்லை, தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறியுள்ளார். அப்போதுதான் அவர்களுக்கு இது போலி டோக்கன் என்பது தெரியவந்துள்ளது .ஆனால் தொடர்ந்து கூட்டம் அதிகரிக்கவே அவர் மளிகை கடையை பூட்டிவிட்டு, கடையின் கதவில் வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனிற்க்கும் எங்களுக்கும் எந்த சம்பந...
‘நடிகர் ஜெய்’க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘சிம்பு’!

‘நடிகர் ஜெய்’க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘சிம்பு’!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
‘நடிகர் ஜெய்’க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘சிம்பு’! விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான பகவதி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இவர் கைவசம் பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக, பார்ட்டி போன்ற படங்கள் உள்ளன. நடிகர் ஜெய் தற்போது இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் சிவ சிவா படத்திற்கு ஜெய் தான் இசையமைத்துள்ளார். நடிகர் ஜெய் நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். இந்நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடிகர் சிம்பு திடீரென கலந்துகொண்டு சர்ப்ரைஸ் கொடுத்ததாக, நடிகர் ஜெய் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சிம்பு...
கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட மும்பை கடற்கரைகள்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட மும்பை கடற்கரைகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட மும்பை கடற்கரைகள்! மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அம்மாநில அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரங்கு, பகல் நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மும்பை மாகராட்சி கமிஷனர் இக்பால் சகால் நேற்று  உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், மும்பையில் உள்ள அனைத்து கடற்கரைகளையும் வரும் 30-ம் தேதி வரை மூடவேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை மாநகராட்சி உதவி கமிஷனர்கள் அமல்படுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன்படி, மும்பையில் உள்ள அனைத்து கடற்கரைகளும் நேற்று மூடப்பட்டன. போலீசார் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரைகள் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடற்ரைக்கு வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்...
வாகன சோதனையில் ஈடுபட்ட கண்காணிப்பு குழு, பறக்கும் படைகள் கலைப்பு!

வாகன சோதனையில் ஈடுபட்ட கண்காணிப்பு குழு, பறக்கும் படைகள் கலைப்பு!

HOME SLIDER, NEWS, politics
வாகன சோதனையில் ஈடுபட்ட கண்காணிப்பு குழு, பறக்கும் படைகள் கலைப்பு! தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாகன சோதனைக்காக கண்காணிப்பு குழு, பறக்கும்படை, வீடியோ கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவிடப்பட்டது. அவர்கள் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த குழுக்களின் பணி, வாக்குப்பதிவு நடக்கும் வரை தொடர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டது. எனவே கண்காணிப்பு குழு, பறக்கும்படை, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவற்றை கலைத்துவிடலாம். மண்டல குழுக்களுக்கான வாகனங்கள், வாக்குப்பதிவு எந்திரம், விவிபாட் எந்திரம் ஆகியவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள ஜி.ப...
உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

HOME SLIDER, NEWS, politics, நடிகர்கள்
உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் மத்திய மந்திரிகள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோரின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகாா்கள் எழுந்தன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ஜ.க. சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 7-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது....
தமிழகத்தில் 72 சதவீதம் வாக்குப்பதிவு! வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!!

தமிழகத்தில் 72 சதவீதம் வாக்குப்பதிவு! வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!!

HOME SLIDER, NEWS, politics
தமிழகத்தில் 72 சதவீதம் வாக்குப்பதிவு. வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு. தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரிக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க-தி.மு.க. இடையே போட்டி பலமாக இருந்தாலும் 5 முனைப்போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் வாக்களிக்க இருந்தனர். கொரோனா பரவலுக்கு இடையே தேர்தல் நடைபெற்றதால், சமூக இடைவெளியை வாக்காளர்கள் பின்பற்றும் வகையில், 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1 லட்சத்து 29 ஆயிரம் எண்ணிக்கையில் வாக்கு எந்திரங்களும், 91 ஆயிரத்து 180 எண்ணிக்கையில் கட்டுப்பாட்டு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் “விவிபாட்” எந்திரங்கள் 91 ஆயிரத்து 190 எண்ணிக்கையிலும் பயன்படுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும...
சைக்கிளில் வந்த விஜய்!

சைக்கிளில் வந்த விஜய்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சைக்கிளில் வந்த விஜய்! தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி ஆகியோர் வாக்குகளை செலுத்தினர். இதையடுத்து நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சைக்கிளில் வந்தார். விஜய் சைக்கிளில் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர். விஜய் வாக்களிக்க வந்து சென்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியிருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வை இப்படி குறியீடாக சொல்லியிருக்கிறார் என்று சமூகவலைத்தளத்தில் பேசப்பட்டது. இதனால், சைக்கிளில் வந்த நடிகர் விஜய் ஸ்கூட்டரில் திரும்பிச் சென்றார்....
தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குப்பதிவு: 5 மணிக்குப்பிறகு 8.19 சதவீதம் பதிவு!

தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குப்பதிவு: 5 மணிக்குப்பிறகு 8.19 சதவீதம் பதிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குப்பதிவு: 5 மணிக்குப்பிறகு 8.19 சதவீதம் பதிவு! தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் முழுவதுமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்தார். முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குகள் பதிவாகியிருந்தது. 11 நிலவரப்படி 26.29% வாக்குகளும், மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% சதவீதமும், மதியம் 3 மணி நிலவரப்படி 53.35% சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதமும் பதிவாகின. அதன்பின் மொத்தமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவானது. ஐந்து மணிக்குப்பிறகு 8.19 சதவீத வாக்குகள் பதிவாகின....
அரசியலுக்கு சினிமா இடையூறாக இருந்தால் சினிமாவை விட்டு விலகி விடுவேன் – கமல்ஹாசன்

அரசியலுக்கு சினிமா இடையூறாக இருந்தால் சினிமாவை விட்டு விலகி விடுவேன் – கமல்ஹாசன்

HOME SLIDER, NEWS, politics, நடிகர்கள்
அரசியலுக்கு சினிமா இடையூறாக இருந்தால் சினிமாவை விட்டு விலகி விடுவேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போயிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் களம் காணுகின்றனர். இதனால் தற்போதைய தமிழக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் கோவை தெற்கு தொகுதிக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது. அனைவரும் உற்றுநோக்கும் தொகுதியாக அது உள்ளது. எனினும் இத்தொகுதி  இந்த வேட்பாளர் மூவருக்கும் சவால் மிகுந்த களமாகவே இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்நிலையில் பரப்புரை முடித்துவிட்டு கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியல் வேண்டாம் என்று இருந்த நான் எந்த கடத்தில் அரசியலுக்கு வந்தேன் என்று அனைவருக்கும் தெரியும். நான் மறுபடியும் சினிமாவில் நடி...
13.80 சதவீத வாக்குகள் பதிவு!

13.80 சதவீத வாக்குகள் பதிவு!

HOME SLIDER, NEWS, politics
13.80 சதவீத வாக்குகள் பதிவு! தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தவண்ணம் உள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 20.23 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக நெல்லையில் 9.98 சதவீத வாக்குகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார். மேலும், சென்னையில் 10.58 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்....