ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  நிவர் புயல் உருவாகி கரையை கடந்த நிலையில் மீண்டும் தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிச.1 முதல் டிச.3ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி கரையை கடந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிறது....
9 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர் 500 கன அடியாக குறைப்பு!

9 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர் 500 கன அடியாக குறைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று தொடக்கத்தில், விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 9 ஆயிரம் கனஅடியானது. கனமழை குறைந்து, நீர்வரத்து குறைந்தததை தொடர்ந்து, நீர்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 5,000 கன அடி வீதம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 1000 கன அடியாக திறக்கப்பட்ட நிலையில் தற்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது . நீர்வரத்து வினாடிக்கு 4 ,471 கன அடியாக உள்ளது. நீர்மட்டம் 21. 87 அடியாக இருக்கிறது....
நிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்

நிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்

HOME SLIDER, NEWS, செய்திகள்
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்தது. நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரை நடக்கும் நிகழ்வு நீடித்தது. புயல் கரை கடந்தபோது புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்பின்னர் வலுவிழந்து தீவிர புயலாக நிலப்பரப்பில் வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து புயலாக மாறி, அதிக கனமழையை தரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
கார் விபத்து டிராமா போடும் குஷ்பு எதிர்காலம் தேறுமா?  –  வம்புக்கு இழுக்கும் மீராமிதுன்

கார் விபத்து டிராமா போடும் குஷ்பு எதிர்காலம் தேறுமா?  – வம்புக்கு இழுக்கும் மீராமிதுன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
கார் விபத்து டிராமா போடும் குஷ்பு எதிர்காலம் தேறுமா? நடிகை குஷ்பு சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். சில தினங்களுக்கு முன்பு வேல் யாத்திரை நிகழ்ச்சிக்கு சென்ற போது அவரது காரில் டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில் குஷ்பு அதிர்ஷ்டவசமாக தப்பினார். இந்த நிலையில் குஷ்புவின் அரசியல் நடவடிக்கைகளை நடிகை மீராமிதுன் விமர்சித்து உள்ளார். டுவிட்டரில் மீரா மிதுன் வெளியிட்டுள்ள பதிவில், “எம்.எல்.ஏ சீட்டுக்கு தி.மு.க கட்சியில் சேர்ந்து 10 வருடம் தி.மு.க ஆட்சிக்கே வர முடியவில்லை. எம்.பி. சீட்டுக்கு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 10 வருடம் காங்கிரஸ் ஆட்சிக்கே வரமுடியவில்லை. இப்போது பா.ஜனதாவில் சேர்ந்து இருக்கிறீர்களே மேடம் குஷ்பு. கார் விபத்து டிராமா. எதிர்காலம் தேறுமா? கோலிவுட் மாபியாக்களால்தான் குஷ்பு பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார். திட்டம் என்ன குஷ்பு?” என்று குறிப்பிட்டு உ...
கரையை கடக்கத் தொடங்கிய நிவர் புயல்!

கரையை கடக்கத் தொடங்கிய நிவர் புயல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வங்கக்கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நிவர் புயல் புதுச்சேரியில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. முழுவதுமாக கரையை கடக்க அதிகாலை 3 மணியாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது....
நாட்டின் மிகப்பெரிய சாபம் பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை – குற்றஞ்சாட்டும் மம்தா பானர்ஜி

நாட்டின் மிகப்பெரிய சாபம் பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை – குற்றஞ்சாட்டும் மம்தா பானர்ஜி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  2021 ஏப்ரல் – மே மாதங்களில் மேற்குவங்க மாநிலத்துக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பங்குரா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவை பொய்களின் குப்பை மற்றும் நாட்டின் மிகப்பெரிய சாபம் என்று குற்றஞ்சாட்டினார். மேலும் பேசிய அவர், திரிணமூல் எம்.எல்.ஏக்களுக்கு பாஜக லஞ்சம் கொடுக்க முயன்று அவர்களை வேட்டையாட முயற்சித்து வருகிறது. காவிக் கட்சி ஆட்சிக்கு வரும் என்று சிலர் மாயையில் இருக்கிறார்கள். பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை. தேர்தல் வரும்போதெல்லாம், அவர்கள் திரிணமூல் கட்சித் தலைவர்களை அச்சுறுத்துவதற்காக நாரடா மற்றும் சாரதா  பிரச்னைகளை கொண்டு வருகிறார்கள்.ஆனால் நான் அவர்களுக்கு மிகத் தெளிவாகச் சொல்கிறேன், நான் பாஜகவோ அல்லது அதன் ஏஜென்சிகளைப் பற்றி பயப்படமாட்டேன். அவர்களுக்கு தைரியம் இருந்தால், அவர்கள் என்னைக் க...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது – அமைச்சர் ஆர் பி உதயகுமார்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது – அமைச்சர் ஆர் பி உதயகுமார்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இரவு 9 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். நிவர் புயல் காரணமாக 2 நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை இன்று எட்டியது. இதனால் இன்று மதியம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல் கட்டமாக ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 1000 கன அடியில் இருந்து 3000 கன அடியாக நீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் திருநீர்மலை, அனகாபுத்தூர், திருமுடிவாக்கம், கவுல் பஜார் பகுதிகளில் ...
தேவைப்பட்டால் இரவு நேரங்களில் ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு அனுமதி!

தேவைப்பட்டால் இரவு நேரங்களில் ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேவைப்பட்டால் இரவு நேரங்களில் ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு அனுமதி இந்தியாவில், கரோனா பாதிப்பு 90 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் வரும் டிசம்பர் 1 முதல் பின்பற்றக் கூடிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை காலம் என்பதால் கரோனா தொடர்ந்து பரவிவரும் நிலையில், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துதல், கட்டுப்பாட்டுப் பகுதிகள் அமைத்தலில் தீவிரம் காட்டுதல், கரோனா தடுப்பு பழக்கவழக்கங்களை மக்கள் கடைபிடிக்கச் செய்வதில் உறுதியாக இருத்தல் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் பின்பற்றலாம். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றில் மக்கள் மெத்தனம் காட்டாமல் இருக்க மாநிலங்கள் கூடுதல் அபராதங்களை விதித்துக் கொள்ளலாம். கரோனா நோயாளிகளைக் கண்டறிதல்,...
வலதுபக்கம் ‘சிபிஐ விசாரணை’ பழனிசாமி இடது பக்கம் ‘சிபிசிஐடி விசாரணை’ பன்னீர்செல்வம் இவர்களை வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு அமித் ஷாவுக்கு என்ன அருகதை இருக்கிறது? -ஸ்டாலின்

வலதுபக்கம் ‘சிபிஐ விசாரணை’ பழனிசாமி இடது பக்கம் ‘சிபிசிஐடி விசாரணை’ பன்னீர்செல்வம் இவர்களை வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு அமித் ஷாவுக்கு என்ன அருகதை இருக்கிறது? -ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாங்கள் ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள். அதனால்தான் அமித் ஷாவுக்கு எங்களைப் பார்த்தால் கோபம் வருகிறது. இந்த யுத்தம் இன்று நேற்று தொடங்கிய யுத்தம் அல்ல. பல நூறு ஆண்டுகளாக நடக்கும் யுத்தம். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் திமுகவின் வெற்றியை ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் தடுக்க முடியாது. -ஸ்டாலின்   திருநெல்வேலி - தென்காசி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது   “கடந்த 22ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை நான் பத்திரிகைகளில் படித்தேன். 'என்னது சிவாஜி செத்துட்டாரா?' என்று கேட்பதுபோல அவரது பேச்சூ இருந்தது. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி என்ன சாதனைகள் செய்தது? அதனைப் பட்டியல் போடத் தயாரா என்று அமித் ஷா கேட்கிறார். அ...
நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்கும்!

நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்கும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. அதன்பின் அதிதீவிர புயலாக வலுப்பெற்று புதுவைக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையில் கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் இன்று மாலை நிலவரப்படி 16 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனால் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இரவு 7.30 மணியளவில் புயலின் நகர்வு வேகம் 13 கி.மீட்டராக குறைந்துள்ளது. இதனால் கரையை நடக்க காலதாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்க உள்ளதாக பேரிடர் மீட்புப்படை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்....