வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

திரைப்படங்கள்

தொடரும் பீஸ்ட் தடை.. வருத்தத்தில் ரசிகர்கள்!

தொடரும் பீஸ்ட் தடை.. வருத்தத்தில் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருகிறது. பயங்கரவாதிகள் வணிக வளாகத்துக்குள் புகுந்து, மக்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டல் விடுப்பதும், அவர்களுடன் மோதி மக்களை விஜய் எப்படி மீட்கிறார் என்பதும் கதையாக உள்ளது. பீஸ்ட் படத்தை வெளிநாடுகளிலும் திரையிட அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், குவைத் அரசு பீஸ்ட் படத்தை திரையிடுவதற்கு அனுமதி மறுத்துவிட்டது. பீஸ்ட் படத்தில் பயங்கரவாதிகள் குறித்து சர்ச்சை மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாகவும், இதனாலேயே குவைத் தணிக்கை குழு தடை விதித்ததாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர், மலையாளத்தில் வந்த குரூப் ஆகிய படங்களுக்கும் குவைத்தில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் பீஸ்ட் படத்தை திரையிட தற்போது தடை விதித்து ...
திகிலூட்டும் ஷாக் காட்சிகளுடன் களத்துக்கு வருகிறது “அந்த நாள்”

திகிலூட்டும் ஷாக் காட்சிகளுடன் களத்துக்கு வருகிறது “அந்த நாள்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
க்ரீன் மேஜிக் என்டர்ட்ரெய்ன்மென்ட்டின் ஆர்யன் ஷ்யாம் நடித்துள்ள “அந்த நாள்” விரைவில் வெளியாக உள்ளது. அந்த நாள் என்பது பிளாக் மேஜிக் மற்றும் நரபலியை அடிப்படையாகக் கொண்ட க்ரைம் த்ரில்லர். நரபலியை கருப்பொருளின் காரணமாக கொண்ட திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழை CBFC மறுத்தது. தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்யன் ஷ்யாம் ரிவைசிங் கமிட்டி வாரியத்திடம் முறையிட்டார், அதன்பின் படம் "ஏ" சான்றிதழுடன் கட்ஸுடன் அனுமதிக்கப்பட்டது. திரைப்படத்தின் உள்ளடக்கம் பிளாக் மேஜிக் மற்றும் "சடங்கு சார்ந்த மனித தியாகம்" ஆகியவற்றைக் கையாள்வதால், தயாரிப்பாளர்/நடிகர் ஆர்யன் ஷ்யாம் படத்தை ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் அல்லாமல் க்ரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட்டின் கீழ் வெளியிட முடிவு செய்துள்ளார். இப்படத்தை விவி இயக்குகிறார், சதீஷ் கதிரவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் என்.எஸ். ராபர்ட் சற்குணம்.   இப...
பீஸ்ட் படத்தைக் காண ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுடன் விடுமுறை அளித்த திருப்பூர் துணி நிறுவனம்!

பீஸ்ட் படத்தைக் காண ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுடன் விடுமுறை அளித்த திருப்பூர் துணி நிறுவனம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படம் வரும் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கான முன் பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. தொடங்கிய நாள் முதலே முன்பதிவு வேகமாக நடைபெற்றுவருகிறது. ரசிகர்களும் தீவிர கொண்டாட்டத்துக்கு தயாராகிவருகின்றன. இந்த நிலையில், திருப்பூரில் ஒரு பின்னலாடை நிறுவனம் பீஸ்ட் பட வெளியீட்டுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. திருப்பூர் முதலிபாளையம் சிட்கோவில் செயல்பட்டு வரும் நிட் பிரைன் என்ற தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பீஸ்ட் திரைப்படத்தை காண விடுமுறை கேட்டு வந்த நிலையில் நிறுவனம் சார்பில் அனைவருக்கும் பீஸ்ட் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்து, விடுமுறை அளித்துள்ளனர் புத்தாண்டை முன்னிட்டு 14ம் தேதி விடுமுறை அளித்திருந்த நிலையில் ஊழியர்களை உற்சாகப்...
‘சட்டம் என் கையில்’- படத்தில் கதாநாயகனாக நடிகும் சதீஷ்!

‘சட்டம் என் கையில்’- படத்தில் கதாநாயகனாக நடிகும் சதீஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சதீஷ். இவர் ‘நாய் சேகர்’ என்ற படம் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் சதீஷ் நடிப்பில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது. தற்போது ‘சட்டம் என் கையில்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக சதீஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது....
பாராட்டை தலையில் தூக்கி வைத்து கொள்ள கூடாது – இயக்குனர் பாரதிராஜா பேச்சு

பாராட்டை தலையில் தூக்கி வைத்து கொள்ள கூடாது – இயக்குனர் பாரதிராஜா பேச்சு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாராட்டை தலையில் தூக்கி வைத்து கொள்ள கூடாது - இயக்குனர் பாரதிராஜா பேச்சு இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “என் இனிய தமிழ் மக்களே, என் சக தோழர்களே நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். தயாரிப்பாளர் பேசும் போது ரொம்ப கஷ்ட்டப்பட்டு வந்திருப்பதாக சொன்னார். நீங்க கஷ்ட்டப்பட்டு வந்தால் தான் இதை அனுபவிக்க முடியும். இதே வடபழனியில் தெரு தெருவாக சோத்துக்கே வழி இல்லாமல் அலைந்தவன் தான் பாரதிராஜா. சினிமா லவ்வபல் வேர்ட், இது யாரையும் கைவிடாது, நீங்க சினிமாவ லவ் பண்ணீங்கனா அது உங்கள் லவ் பண்ணும். ஒரு வேலை செய்யும் போது அதில் ஒரு தாக்கம் வேண்டும், அப்படி இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இதில் நடித்திருக்கும் பசங்கள பார்க்கும் போதே படம் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. இதில் தயாரிப்பாளரின் மகன் நடித்திருக்கிறார். அவருக்கு நல்ல அப்பா கிடைத்திருக்கிறார். நான் எல்லாம் எந்த பின்புலம் இல்லாமல் வந்...
ராம்பாலா இயக்கத்தில் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு”

ராம்பாலா இயக்கத்தில் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  2 MB தயாரிப்பில் ராம்பாலா இயக்கத்தில் சந்திரமௌலி - மீனாக்‌ஷி கோவிந்தராஜன் - ரெபா மோனிகா நடிக்கும் "வந்தான் சுட்டான் ரிப்பிட்டு" தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் "2 MB" ரகுநாதன் P.S தற்போது தொடர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் "வந்தான் சுட்டான் ரிப்பிட்டு" எனும் புதிய படத்தை தயாரிக்கிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது. காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் "வந்தான் சுட்டான் ரிப்பிட்டு" படத்தில் சந்திரமௌலி நாயகனாக நடிக்கின்றார். மீனாக்‌ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா நாயகிகளாக நடிக்கின்றனர். மனோ பாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். செவிலோ ராஜா ஒளிப்பதிவை மேற்கொள்ள, சந்தோஷ் தயாநிதி மற்றும் K.C.பாலசாரங்கன் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்....
புதிய களத்தில் பரபர திருப்பங்களுடன் கூடிய ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகும் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்”

புதிய களத்தில் பரபர திருப்பங்களுடன் கூடிய ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகும் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். அவரது நடிப்பில் பல படங்கள், தயாரிப்பின் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. அதில், கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோரால் Infiniti Film Ventures சார்பில் தயாரிக்கப்படும், CS.அமுதன் இயக்கும் 'ரத்தம்' படமும் ஒன்று. வேகவேகமாக நடந்து வரும் இந்த படத்தின் படபிடிப்பு பணிகளில், தற்போது படக்குழு இந்திய படபிடிப்பை நிறைவு செய்துள்ளது. இந்திய படப்பிடிப்பு நிறைந்த நிலையில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. மேலும் வெளிநாட்டு படபிடிப்பை படக்குழு வெகு விரைவில் துவங்கவுள்ளது. முற்றிலும் புதிய களத்தில் பரபர திருப்பங்களுடன் கூடிய ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகும் "ரத்தம்" படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன...
கொலை படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது!

கொலை படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் ஆண்டனி கறுப்பு நிற உடையில் தலையில் தொப்பியுடன், சிலரின் ஓவியங்களைக் கொண்ட காகிதங்களை கைகளில் வைத்துக்கொண்டிருப்பது ...
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் கடந்த 2019-ம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை இயக்கினார். படம் கலவையான விமர்சனம் பெற்று வசூல் ரீதியாக சரிவை சந்தித்தது. இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரூ.11 கோடியை மட்டுமே கொடுத்ததாகவும் அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்த உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தனக்கு தரவேண்டிய சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யத் தடை தேவை எனவும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை தேவை எனவும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நடிகர் சிவகார்த...
தளபதி 66 பூஜை வீடியோவை வெளியிட்ட இயக்குனர் வம்சி !

தளபதி 66 பூஜை வீடியோவை வெளியிட்ட இயக்குனர் வம்சி !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். விறுவிறுப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய்  நடிக்கவுள்ளார். 'தளபதி 66' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகை குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். விஜய்யின் 66-வத...