வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது!
*வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது*
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இருவரும் இணைந்து மிரட்டும் 'மாரீசன்' திரைப்படம் எதிர்வரும் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர்.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள 'மாரீசன் ' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்...









