என் கதையில் என்னை நம்பிய துருவ் தமிழ் சினிமாவின் பெரும் நம்பிக்கை – ‘பைசன்’ மாரி செல்வராஜ் மகிழ்ச்சி
என் கதையில் என்னை நம்பிய துருவ் தமிழ் சினிமாவின் பெரும் நம்பிக்கை - ‘பைசன்’ மாரி செல்வராஜ் மகிழ்ச்சி
மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஷ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் தயாரிப்பில், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பைசன்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இப்படத்தின் உருவாக்கம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கூறுகையில், “’பைசன்’ என் கரியரில் முக்கியமான படம். மிகவும் கனமான, சிக்கலான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். இந்த கதையை சொல்ல முயற்சிக்கும் பொழுது ஒரு பக்குவத்தை இந்த கதையே எனக்கு கொடுத்தது. இந்த கதையை மக்கள் பார்ப்பதன் மூலமாக ஒன்று நடக்கும் என்று நம...









