வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

திரைப்படங்கள்

வைரலாகும் வடிவெலு வீடியோ!

வைரலாகும் வடிவெலு வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், நடிகர் வடிவேலு படப்பிடிப்பு தளத்தில் பிரபல ரீல்ஸ் பாடலான 'கச்சா பாதாம்' என்ற பாடலுக்கு தனக்கே உரிய காமெடி பாணியில் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. நாய் சேகர் ரிட்டன்ஸ்' நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. https://twitter.com/LycaProductions/status/16008122814070988...
ரிலீஸுக்கு முன்பே எதிர்பார்ப்பை தூண்டும்  அவதார் 2 !

ரிலீஸுக்கு முன்பே எதிர்பார்ப்பை தூண்டும் அவதார் 2 !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில், இப்படத்தின் முன்பதிவு சமீபத்தில் இந்தியாவில் தொடங்கியது. இதையடுத்து வேகமாக டிக்கெட்டுகள் விற்பனையாகி தற்போது வரை ரூ.10 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முன்பதிவில் அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. மேலும் இப்படத்தி...
தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் !

தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” படத்தில் இணைந்துள்ளார். சென்னை (டிசம்பர் 08, 2022): சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் “கேப்டன் மில்லர்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தேசிய விருது நாயகன் நடிகர் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படம்,  அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே ரசிகர்களிடம் தனித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் இணைந்ததால், பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாகி, இந்த படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில், தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் இளைஞர்களின் கனவு நாயகி நடிகை பிரி...
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு திரையுலகின் மாஸ் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணா- இயக்குநர் அனில் ரவிபுடி - ஷைன் ஸ்கிரீன்ஸ் ஆகியோரின் கூட்டணியில், 'NBK108' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா, படப்பிடிப்புடன் தொடங்கியது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான அனில் ரவிபுடியின் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் மாஸ் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்கிறார். சி. ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். தம்மி ராஜு பட தொகுப்பாளராக பணியாற்ற, கலை இயக்கத்தை ராஜீவன் கவனிக்கிறார். சண்டை பயிற்சி இயக்குநராக வி. வெங்கட் பணியாற்றுகிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் சாஹூ கரபதி மற்றும் ஹரிஷ் பெடி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தி...
ஆஹா தமிழ் வழங்கும் “ரத்தசாட்சி” பத்திரிக்கையாளர் சந்திப்பு !

ஆஹா தமிழ் வழங்கும் “ரத்தசாட்சி” பத்திரிக்கையாளர் சந்திப்பு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஆஹா தமிழ் & மகிழ் மன்றம் தயாரிப்பில் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அழுத்தமான படைப்பு "ரத்த சாட்சி". இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினை தழுவி மனதை கலங்க செய்யும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 'ஆஹா தமிழ் ' ஓடிடி தளத்தில் 9 டிசம்பர் 2022 வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இப்படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமார்வேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், ஆறு பாலா, வினோத் முன்னா, அர்ஜுன் ராம், OAK சுந்தர், பிரவீன், ஹரிஷ் தொழில் நுட்ப குழுவினர் தயாரிப்பாளர்கள் - அனிதா மகேந்திரன் & டிஸ்னி (மகிழ் மன்றம்) ஆஹா தமிழ் இயக்கம் மற்றும் திரைக்கதை - ரஃபீக் இஸ்மாயில் எடிட்டர் - பிரகாஷ் கருணாநிதி ஒளிப்பதிவு - ஜெகதீஷ் ரவி இசையமைப்பாளர் - ஜாவேத் ரியாஸ் பாடலாசிரியர் - விஷ்ணு எடவன், கார்த்திக் நேதா ஸ்...
சர்வதேச அந்தஸ்து பெற்ற ‘கிடா’ திரைப்படம் !

சர்வதேச அந்தஸ்து பெற்ற ‘கிடா’ திரைப்படம் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் 'கிடா'. இப்படத்தில் பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும் அவனது தாத்தா மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ள 'கிடா' திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இத்திரையிடலின் போது மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி படத்தினை பாராட்டினார்கள். இந்நிலையில் இப்படம் சென்னையில் நடைபெறவுள்ள 20-வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படவிழா டிசம்பர் 15 முதல் டிசம்பர் 22 வரை நடக்கவுள்ளது குறிப்பி...
விடுதலை திரைப்பட விபத்து குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியீடு!

விடுதலை திரைப்பட விபத்து குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 3-ம் தேதி சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சுரேஷ் என்ற சண்டை கலைஞர் உயிரிழந்தார். ரோப் கயிறு அறுந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். இவரின் இறப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்து குறித்து விடுதலை பட தயாரிப்பு நிறுவனம் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் அறிக்கை ஒன்றை வெள...
நம்ம நண்பர் படம்தானே – ‘துணிவு’ குறித்து விஜய் சொன்ன பதில்!

நம்ம நண்பர் படம்தானே – ‘துணிவு’ குறித்து விஜய் சொன்ன பதில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன. இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது. மேலும், இப்படங்களின் தொடர் அப்டேட்கள் இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், 'வாரிசு' படத்தில் நடித்துள்ள நடிகர் ஷியாம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில், "துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்று விஜய்யிடம் சொன்ன போது வரட்டும் பா. நம்ம நண்பர் படம்தானே.. அதுவும் நல்லா போகட்டும்.. நம்ம படமும் நல்லா போகட்டும்" என்று விஜய் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் இந்த கருத்தால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்....
‘யசோதா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘யசோதா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், 'யசோதா' திரைப்படம் வெளியான 10 நாட்களில் ரூ.33 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'யசோதா' திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் ...
அமீரின் ” உயிர் தமிழுக்கு” படத்தை வெளியிடும் சுரேஷ் காமாட்சி!

அமீரின் ” உயிர் தமிழுக்கு” படத்தை வெளியிடும் சுரேஷ் காமாட்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ராஜாகிளி ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ என்கிற படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார் சுரேஷ் காமாட்சி. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் அவரே இந்த படத்தை இயக்கியும் உள்ளார். இதற்கு முன்னதாக யூடியூப் விமர்சகர் இளமாறன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ஆன்டி இண்டியன் படத்தை ஆதம்பாவா தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமீர், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச...