சிவராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘பெத்தி’ படத்திலிருந்து அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்!!*
*கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘பெத்தி’ படத்திலிருந்து அவரது அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!!*
குளோபல் ஸ்டார் ராம் சரண், நடிப்பில், கிராமிய பாணியில் உருவாகும் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படம் ‘பெத்தி’ . பர்ஸ்ட் லுக்கிலேயே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தினை, இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை, வெங்கட சதீஷ் கிலாருவின் விருத்தி சினிமாஸ் தயாரிக்க, முன்னணி பேனர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்குகிறார்கள்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது காதாப்பத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக்கை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கம்பீரமான பார்வை, கன்னத்தில் திருத்தப...









