‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!
‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!
“மகளே” – சாய் அப்யங்கரின் மெலடி இசையில் மனதை மயக்கும் ‘பத்தா’ முதல் சிங்கிள்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18,(Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சாய் அப்யங்கர் இசையமைத்து பாடியுள்ள இப்பாடலுக்கு கவிஞர் கார்த்திக் நேதா வரிகளை எழுதியுள்ளார்.
இன்றைய தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்படும் சாய் அப்யங்கர், துள்ளலான பாடல்களால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், ‘மகளே’ பாடலில் முற்றில...









