சனிக்கிழமை, ஜூலை 25
Shadow

நடிகைகள்

“தலைகீழாக நிற்கும் யோகாசனம் உடலுக்கு வலிமை தரும்” -நடிகை அமலாபால்

“தலைகீழாக நிற்கும் யோகாசனம் உடலுக்கு வலிமை தரும்” -நடிகை அமலாபால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், ரட்சகன் படங்களிலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடிக்கும் அமலாபால் சமீப காலமாக யோகாசன பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விசேஷ பயிற்சியாளரை வைத்து யோகாசனம் கற்கிறார். ஒரு மரத்தின் அருகில் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்யும் படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அமலாபால் கூறியிருப்பதாவது:- “கஷ்டமான வேலைகளை செய்யும்போது தலைகீழாக நின்றாலும் நடக்காது என்று சொல்ல கேட்டு இருக்கிறோம். தலைகீழாக நிற்பது உடலுக்கு எவ்வளவு முக்கியமானது, பயன் அளிக்க கூடியது என்பதை இப்போது உணர்ந்து இருக்கிறேன். யோகாவில் தலைகீழாக நிற்கும் சிரசாசனம் போடுவது மிகவும் கஷ்டமானது. எல்லோராலும் எளிதாக அதை செய்ய முடியாது. கடும் பயிற்சிகள் மூலம் மட்டுமே செய்ய முடியும். இந்த ஆசனத்தை நான் ரொம்ப நாட்களாக கற்றேன். இதற்காக பயிற்சியாளர் வைத்து இருந்தேன். முதலில் சுவரை தாங்கலாக வைத்து தலைகீழாக நின்...
கலிபோர்னியா இசைத் திருவிழாவில் நயன்தார- விக்னேஷ் சிவன் செல்பி

கலிபோர்னியா இசைத் திருவிழாவில் நயன்தார- விக்னேஷ் சிவன் செல்பி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பு ரொம்பவே யோசிக்கிறார். ஒரு பிரபல கதாநாயகன் அளவுக்கு ‘மார்க்கெட்’ உருவாகி விட்டதால், இந்த எச்சரிக்கை. தென்னிந்திய திரையுலகின் முதன்மை கதாநாயகி என்ற அந்தஸ்துடன் இருக்கும் அவர், அந்த அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறார். வருகிற பட வாய்ப்புகளை எல்லாம் அவர் ஏற்பதில்லை. தனக்கு பொருந்துகிற கதைகளையே தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவர் இப்படி கதைகளை தேர்வு செய்து நடிப்பதால், “நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்” என்று செய்தி பரவுகிறது. அதை நிரூபிப்பது போலவே நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் காதலை ஒவ்வொரு மேடையிலும் உறுதி செய்து வருகிறார்கள். ஒவ்வொரு மேடையிலும் ஒருவரையொருவர் புகழ்ந்து வருகிறார்கள். வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றிய படங்களை சமூகவலை தளங்களில் பதிந்து வருகிறார்கள் நயன்தாராவின் ஒரே பயம், திருமணம் செய்து...
போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா..!

போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது “பொட்டு“ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “கா“ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். உலக மக்களுக்கான படம் இது. இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் ‘கா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். மு...
பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு, அக்‌ஷய்யுடன் திருமணம் முடிந்தது

பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு, அக்‌ஷய்யுடன் திருமணம் முடிந்தது

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நட்சத்திர தம்பதிகளான பார்த்திபன் - சீதா தம்பதிகளின் மகள் கீர்த்தனாவுக்கும், பிரபல தேசிய விருது படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷய்க்கும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து திருமணம் நடந்து முடிந்தது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். கீர்த்தனா, மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர். தற்போது மணிரத்னம் இயக்கும் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் புதிய படத்தை இயக்க இருக்கிறார்.   இவருக்கும் பிரபல சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்‌ஷய்க்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலைய...
அமலாபாலின் அதோ அந்த பறவையை அறிமுகம் செய்த காஜல் அகர்வால்

அமலாபாலின் அதோ அந்த பறவையை அறிமுகம் செய்த காஜல் அகர்வால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிக்கும் படம் அதோ அந்த பறவை. கே.ஆர்.வினோத் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகிகக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியானது. அந்த போஸ்டரை அமலா பாலின் தோழியும், நடிகையுமான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு மகளிர் தினத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறார். இதுகுறித்து காஜல் அவரது டுவிட்டர் பக்கத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல், அமலாபாலை பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால் என்று குறிப்பிட்டு தன் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜே.ஆர். ஜான் ஆபரகாமும், கலை பணிகளை ...
நீட் டாக்டர் எஸ். அனிதாவாக மாறிய ஜூலி

நீட் டாக்டர் எஸ். அனிதாவாக மாறிய ஜூலி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் பலனளிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் தன்னால் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லையே என மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார். இவரது தற்கொலை தமிழ்நாட்டையே உலுக்கியது. அனிதா மரணமடைந்து தற்போது ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில் அவரது பெயரில் ஒரு படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு ‘டாக்டர் எஸ்.அனிதா எம்பிபிஎஸ்’ என பெயரிட்டு அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அனிதா கதாபாத்திரத்தில் ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கவுள்ளார். அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது....
மீண்டும்  “நீயா2”  ஜெய்  ஜோடியாக வரலட்சுமி – ராய்லட்சுமி –கேத்ரின்  தெரேசா

மீண்டும்  “நீயா2”  ஜெய்  ஜோடியாக வரலட்சுமி – ராய்லட்சுமி –கேத்ரின்  தெரேசா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
மீண்டும்  “நீயா2”  ஜெய்  ஜோடியாக வரலட்சுமி – ராய்லட்சுமி –  கேத்ரின்  தெரேசா. கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979 – ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம்.  “நீயா“ இன்று வரை ஹிட்டான ஹாரர் மூவி படங்களுக்கு “நீயா” ஒரு முன் உதாரணம் என்று சொல்லலாம். மீண்டும் 39 – வருடங்களுக்கு பின் அதே பெயரில் “நீயா2” படம் பிரமாண்டமாக தயாராகிவருகிறது . கதைக்கு தேவைப்பட்டதால் “நீயா2” என்று பெயர் வைத்துள்ளேன் என்கிறார், இதன் இயக்குநர் L.சுரேஷ் . இதில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 – அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறும்கிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா , தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு , உடல்மொழி , தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும்  தெரிந்துகொண்டோம். படம் முழுக்க வருவதால் குழந்தை...
பார்வையற்றவர்களுக்காக  ‘அமலா ஹோம்’ தொண்டு நிறுவனத்தை தொடங்கிய அமலாபால்..!

பார்வையற்றவர்களுக்காக ‘அமலா ஹோம்’ தொண்டு நிறுவனத்தை தொடங்கிய அமலாபால்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். கஷ்டப்படும் மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் காட்டும் இவர் தற்பொழுது 'அமலா ஹோம்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நிதியை திரட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபடவுள்ளது. இது குறித்து நடிகை அமலா பால் கூறும்போது, ''அகர்வால் கண் மருத்துவமனைக்காக நான் ஒரு மேடை பேச்சுக்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுதுதான் சில முக்கியமான புள்ளி விவரங்களை நான் கவனித்தேன். உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் இதில் 70 சதவிகிதம் கார்னஸ் டிரன்ஸ்ப்ளண்ட் (Cornes Transplant) மற்றும் கண்புரை (Cataract) போன்ற அறுவை சிகிச்சைகளால் குணப்படுத்தப்படக்கூடியவை. இதற்கு பெரும் தடையாக இருக்கும் ...
தாய்ப்பால் கொடுப்பது போல் புகைப்படம் – பத்திரிகை, மாடல் மீது வழக்கு

தாய்ப்பால் கொடுப்பது போல் புகைப்படம் – பத்திரிகை, மாடல் மீது வழக்கு

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
கிரிகலட்சுமி என்னும் மலையாள வார இதழ், பெண் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை அட்டைப்படமாக போட்டு உள்ளது. அந்த அட்டைப்படத்தில் இருப்பது மலையாள எழுத்தாளர் ஜிலு ஜோசப். “பெண்களே... தாய்ப்பாலின் முக்கியத்துவத்தைக் கேரளாவில் பறைசாற்றுங்கள். தாய்ப்பால் கொடுப்பதை வித்யாசமாகப் பார்க்க வேண்டாம்...” என்று அந்த அட்டைப்படத்தின் கீழ் குறிப்பிடப்பட்டு உள்ளது. கிரகலட்சுமி வார இதழின் அட்டைப்படத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் என இரு விதமான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. சமூக வலைதளத்தில் ‘இது துணிச்சலான முயற்சி’ என்று ஒரு சாரரும், ‘இது விளம்பரத்துக்காகச் செய்த தேவையில்லாத முயற்சி’ என்று ஒரு சாரரும் விமர்சித்து உள்ளனர். இந்த நிலையில் கிரிகலட்சுமி பத்திரிகைக்கு எதிராக வக்கீல் வினோத் மேத்யூ என்பவர் கேரளாவின் கொல்லம்  ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். பத்திரிகையின் பதிப்பாளர்...
மாரி-2 படத்தில் கலெக்டராக வரலட்சுமி..!

மாரி-2 படத்தில் கலெக்டராக வரலட்சுமி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் துவங்கிய நிலையில், சமீபத்தில் படக்குழு சென்னை விரைந்தது. சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக வரலட்சுமி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பின்னர் வரலட்சுமி இந்த படத்தில் வில்லியாக நடிப்பதாக சில செய்திகள் உலா வந்தன. வரலட்சுமி அதனை மறுத்திருந்த நிலையில், அவர் கலெக்டராக நடிப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலாஜி மோகன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். நடிகர் கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்....