ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

நடிகைகள்

பொன்னியின் செல்வன் அப்டேட்!

பொன்னியின் செல்வன் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் நேரடியாக ஓடிடியில் வெளியிட பெரும் தொகை கொடுத்து வாங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பெரும் பொருட்செலவில் “திரையரங்க வெளியீட்டுக்காகவே தயாராகி வருகிறது. ஓடிடியில் நேரடி வெளியீடு குறித்த தகவல்கள் அனைத்துமே வதந்தி. இந்தப் பிரம்மாண்டத்தைத் திரையரங்கில் மக்கள் குடும்பத்துடன் கொண...
தொகுப்பாளராக களமிறங்கும் கங்கனா ரனாவத்!

தொகுப்பாளராக களமிறங்கும் கங்கனா ரனாவத்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி முதன் முதலில் மும்பை திரையுலக பிரபலங்கள் மூலம்தான் நாடு முழுவதும் அறிமுகமானது. இன்று அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொடர்ந்து நடத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இப்போது மீண்டும் ஏக்தா கபூர் தயாரிப்பில் லாக்கப் என்ற நிகழ்ச்சி அறிமுகமாக இருக்கிறது. இதை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்க இருக்கிறார். முதல் போட்டியாளராக பூனம் பாண்டே கலந்து கொள்ள இருக்கிறார். இதில் 16 விஐபிகளை தனியாக லாக்கப்பில் அடைத்து விடுவார்கள். அவர்களுக்கு போன், டிவி, கடிகாரம் என்று எதுவும் கொடுக்கப்படமாட்டாது. இந்தச் சூழலில் அவர்கள் பல மாதங்கள் இருப்பார்கள். இந்தப் போட்டியில் யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இணையத்தில் ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தைத் தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் முதல் போட்டியாளராக பூனம் பாண்டே அறிவிக்கப்பட்டுள்ளார்....
41 வயதாகும் நடிகையை 2வது திருமணம் செய்யும் பாலிவுட் நடிகர்!

41 வயதாகும் நடிகையை 2வது திருமணம் செய்யும் பாலிவுட் நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல இந்தி நடிகர் பர்கான் அக்தர். இவர் 2008-ல் வெளியான ராக் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவரது பாக மில்கா சிங் படம் பெரிய வெற்றி பெற்றது. பர்கான் அக்தர் நடிப்பில் கடந்த வருடம் டூபான் படம் வெளியானது. சில படங்களை இயக்கியும் இருக்கிறார். அமீர்கான் நடித்த தில் சத்தா ஹை படத்தை பர்கான் அக்தர் இயக்கி இருந்தார். இந்த படம் தேசிய விருது பெற்றது. 2000-ம் ஆண்டு அதுனா பாபானி என்பவரை பர்கான் அக்தர் திருமணம் செய்து 17 ஆண்டுகளுக்கு பிறகு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் இந்தி நடிகையும், பாடகியுமான ஷிபானி தந்தேக்கருடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 41 வயதாகும் ஷிபானியை 48 வயதாகும் பர்கான் அக்தர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இவர்கள் திருமணம் வருகிற 21-ந்தேதி எளிமையான முறையில் நடக்க உள்ளது....
‘ வர்ஜினா நீங்கள்?’ – கேள்விக்கேட்டு  நடிகையை அதிர வைத்த ரசிகர்  !

‘ வர்ஜினா நீங்கள்?’ – கேள்விக்கேட்டு நடிகையை அதிர வைத்த ரசிகர் !

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழில் ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் தனது கவர்ச்சி நடிப்பின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். பின்னர் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் ஈர்த்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் யாஷிகா ஒரு பயங்கர விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கை ஆனார். மருத்துவமனையில் பல மாத சிகிச்சைக்கு பின்னர் தற்போது பழைய நிலைமைக்கு வந்துகொண்டிருக்கிறார். அதேவேளை சமூக வலைதளங்களில் யாஷிகா ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது ஒரு ரசிகர், ‘நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா?’ என எடக்குமடக்கான கேள்வி கேட்டார். இ...
அந்த நடிகையா இது !அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

அந்த நடிகையா இது !அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார். அப்போது வெளியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்கானார்கள். அதன்பின் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினார். இலியானாவின் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இலியானா, தற்போது புதிய புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இவ்வளவு குண்டாக ஆளே அடையாளம் தெரியாதளவிற்கு மாறி இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்....
“கூர்மன்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கூர்மன்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  “கூர்மன்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ! MK Entertainment தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்க்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. இதன் கதை மனதில் உள்ளதை கண்டுபிடிக்கும் ஒரு பாத்திரத்ததை முதன்மை பாத்திரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மாறுப்பட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை விழா இன்று படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில் முதலில் படக்குழுவினர் மனதில் உள்ளதை அறியும் மெண்டலிஸ்ட் அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை, பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய டெமோவாக, பார்வையாளர்களிலிருந்தே ஒருவரை அழைத்து, மனதில் நினைப்பதை கண்டுப்டிக்கும் நிகழ்வினை ச...
காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா!

காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும். ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிருத்விராஜ், துல்கர் சல்மான், திரிஷா, அமலா பால் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது. இத்தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கோல்டன் விசா வழங்கிய...
அந்த நிலையை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன் – நடிகை அமலா!

அந்த நிலையை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன் – நடிகை அமலா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இயக்கி நடிகர் சர்வானாந்த் நடிக்கும் படம் கணம். இப்படத்தில் ரீத்து வர்மா, அமலா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, இறுதி கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழில் 'கணம்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஒகே ஒக ஜீவிதம்' என்ற பெயரிலும்  உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் அம்மா பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. அம்மா பாடலுக்கு கிடைத்த வரவேற்பு அனைவரையும் குதுகலப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கணம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்பாக அமலா கூறியிருப்பதாவது: “மகனுக்கும், அம்மாவுக்கும் இடையிலான அன்பு என்றும் அழியாது என்பதைச் சொல்வதற்காகவே அம்மா பாடல் உருவாக்கப்பட்டது. ‘கணம்’ படத்...
ரசிகர்களை கவரும் டான் படத்தின் பாடல்!

ரசிகர்களை கவரும் டான் படத்தின் பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டிருந்த சமயத்தில் மார்ச் மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகுமென அறிவித்து ரசிகர்களை சந்தசோஷப்படுத்தியது படக்குழு. இந்நிலையில், டான் படத்தின் அடுத்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளில் ஆதித்யா குரலில் இப்பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் ரசிகர்க...
பத்திரிகையாளரின் கேள்வியால் அதிர்ந்துபோன நடிகர்!

பத்திரிகையாளரின் கேள்வியால் அதிர்ந்துபோன நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தெலுங்கு திரை உலகின் பிரபல சினிமா பத்திரிகையாளர் மற்றும் படத்தயாரிப்பாளர் சுரேஷ் கொண்டேத்தி. அவர் சந்தோஷம் என்ற வார இதழை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் நடிகரிடம் அறுவறுக்கத்தக்க வகையில் கேட்ட கேள்வியால் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். நேற்று நடைபெற்ற  ‘டிஜே டில்லு’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது படத்தின் கதாநாயகன் சித்து ஜொன்னாலகடாவிடம், படத்தின் டிரைலரில் குறிப்பிடப்பட்டு உள்ளது போல், நிஜத்திலும் நடிகை நேஹா ஷெட்டியின் உடம்பில் மொத்தம் எத்தனை மச்சங்கள் உள்ளன என்பதை கணக்கிட்டு உள்ளீர்களா? என்று கேட்டு அதிர்ச்சியையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தினார். இப்படத்தின் டிரைலரில்  நாயகன் சித்து,  “உன் உடலில் எத்தனை மச்சம் உள்ளது?” என்று நாயகி நேஹா ஷெட்டியிடம் கேள்வி கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதனை குறிப்பிட்ட...