முதல்வர் ஸ்டாலின் திருக்குறள் திரைப்படத்தை காண வேண்டும் – தொல்.திருமாவளவன் வேண்டுகோள் !!
முதல்வர் ஸ்டாலின் திருக்குறள் திரைப்படத்தை காண வேண்டும் - தொல்.திருமாவளவன் வேண்டுகோள் !!
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை " Welcome Back Gandhi " என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில், திருக்குறளை மையமாக வைத்து மிகப் பிரம்மாண்டமாக படைப்பாக வெளியாகியுள்ளது ‘திருக்குறள்’. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
தமிழக அரசியல் ஆளுமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், திரு திருமாவளவன், இன்று இப்படத்தினை பார்த்து, படக்குழுவினரைப் பாராட்டினார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இப்படத்தை பார்க்க வேண்டுமென கோரிக்கையும் வைத்துள்ளார்.
படம் பார்த்த பிறகு திரு திருமாவளவன் கூறியதாவது…
தமிழ் சமூகத்தில் போற்றப்பட வேண்டிய ஒரு படைப்பாக இன்றைக்...









