திங்கட்கிழமை, நவம்பர் 9
Shadow

நடிகைகள்

பிரபல நடன இயக்குனர் இயக்கும் படத்தில் ஆண்ட்ரியா!

பிரபல நடன இயக்குனர் இயக்கும் படத்தில் ஆண்ட்ரியா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பிரபல நடன இயக்குனர் இயக்கும் படத்தில் ஆண்ட்ரியா! மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை ஆண்ட்ரியா, அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை பாபி ஆண்டனி இயக்க உள்ளார். நடன இயக்குனரான இவர், இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சரத்குமார் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது....
மீண்டும் இணைந்த ‘கலகலப்பு 2’ கூட்டணி!

மீண்டும் இணைந்த ‘கலகலப்பு 2’ கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் இணைந்த ‘கலகலப்பு 2’ கூட்டணி! சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு 2’. ஜீவா, மிர்ச்சி சிவா ஆகியோர் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர்கள் ஜீவாவும், மிர்ச்சி சிவாவும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். அதன்படி அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ள படத்துக்கு ‘கோல்மால்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் பொன் குமார் இயக்க உள்ளார். அவர் இயக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தில் பாயல் ராஜ்புட் மற்றும் தாராள பிரபு பட நடிகை தான்யா ஹோப் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தை ஜாகுவார் ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் ஜெயின் மற்றும் நரேஷ் ஜெயின் தயாரிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக மொரீசியஸில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்....
நயன்தாராவுடன் டூயட் பாடும் ரஜினி!

நயன்தாராவுடன் டூயட் பாடும் ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நயன்தாராவுடன் டூயட் பாடும் ‘அண்ணாத்த’  ரஜினி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று 2வது பாடல் வெளியிடப்பட்டது.  ‘சாரக்காற்றே’ எனும் இந்த பாடல் காட்சியில் ரஜினி காந்த் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்....
வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த ராஷி கன்னா!

வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த ராஷி கன்னா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த ராஷி கன்னா! தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து அறிமுகமானவர் ராஷிகன்னா, அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். ராஷிகன்னா இணையதளத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறும்போது, ‘‘எனக்கு ஆண் நண்பர் இல்லை. இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. எனது வாழ்க்கை துணைவரை கண்டுபிடிக்கும்போது எல்லோருக்கும் சொல்வேன். எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு எல்லா கதாநாயகர்களையும் பிடிக்கும். தமிழில் விஜய் எனக்கு பிடித்த நடிகர், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு ஆகிய...
காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா!

காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா! தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் தற்போது வேறு நடிகைகளை தேடி வருகின்றனர். ஏற்கனவே தெலுங்கில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க இருந்த கோஸ்ட் படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பை அவர் இழந்துள்ளார். தமிழில் ராஜா சரவணன் இயக்கத்தில் உருவாகும் ‘ரவுடி பேபி’ படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் காஜல் அகர்வாலை தான் ஒப்பந்தம் செய்திருந்தனர். தற்போது அந்த வாய்ப்பு ஹன்சிகா வசம் சென்றுள்ளது. இப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லன் ஜான் கோகைனும் முக்கிய கத...
பிக்பாஸ் நிகழ்ச்சியால் ரொம்ப பாதிக்கப்பட்டேன் –  ரம்யா பாண்டியன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியால் ரொம்ப பாதிக்கப்பட்டேன் – ரம்யா பாண்டியன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியால் ரொம்ப பாதிக்கப்பட்டேன் - ரம்யா பாண்டியன்! தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் பிரபலமானார். பின்னர் சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது. தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக்பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி எது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள ரம்யா பாண்டியன், “பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆனால், அந்த நிகழ்ச்சியால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன். அதைவிட குக் ...
போன் நம்பர் கேட்ட ரசிகர்… உடனே ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

போன் நம்பர் கேட்ட ரசிகர்… உடனே ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
போன் நம்பர் கேட்ட ரசிகர்... உடனே ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்! தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளையும் கமெண்ட்களையும் குவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது ரசிகர்களுடன் சமூக வலைத் தள பக்கத்தில் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் போன் நம்பர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதிஹாசன் 100 என்று கிண்டலாக பதிலளித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் இந்த பதிலை பலரும் லைக் செய்து வருகின்றனர்....
வைரலாகும் மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படம்!

வைரலாகும் மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
வைரலாகும் மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படம்! கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ள அவர், அதன் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பல லைக்குகளை...
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட தனுஷ்… வைரலாகும் புகைப்படங்கள்!

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட தனுஷ்… வைரலாகும் புகைப்படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட தனுஷ்... வைரலாகும் புகைப்படங்கள்! தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் செல்வராகவன் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் கீதாஞ்சலி. இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கீதாஞ்சலி செல்வராகவன் நேற்று தனது 35 வது பிறந்தநாளை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடியுள்ளார். அந்தக் கொண்டாட்டத்தில், நடிகர் தனுஷ், செல்வராகவன், நடிகை வித்யூலேகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த புகைப்படங்களை கீதாஞ்சலி செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது....
சமோசா மாதிரி இருக்கிறார்… ஸ்ருதிஹாசனின் கிண்டல் வீடியோ!

சமோசா மாதிரி இருக்கிறார்… ஸ்ருதிஹாசனின் கிண்டல் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சமோசா மாதிரி இருக்கிறார்... ஸ்ருதிஹாசனின் கிண்டல் வீடியோ! நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபகாலமாக அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவுடன் நெருங்கிய பழகி வருகிறார். அவரை ஸ்ருதிஹாசன் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது காதலனுடன் ஸ்ருதிஹாசன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது காதலனுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் உடற்பயிற்சி செய்யும் போது சமோசா மாதிரி இருக்கிறார் என்று கிண்டல் செய்கிறார். இந்த வீடியோவிற்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகிறது....