திங்கட்கிழமை, அக்டோபர் 12
Shadow

செய்திகள்

இந்த வருட இறுதிக்குள் எனக்கு திருமணம்: நடிகை பாவனா

இந்த வருட இறுதிக்குள் எனக்கு திருமணம்: நடிகை பாவனா

செய்திகள்
பிரபல நடிகை பாவனா ‘ஹனிபீ-2’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு வீடு திரும்பியபோது காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் சுனில் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக நடிகை பாவனா முதலில் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். அதன்பிறகு அதிலிருந்து அவர் மீண்டு தனது இயல்பு நிலைக்கு மாறினார். இதை தொடர்ந்து அவர் ‘ஹனிபீ-2’ படத்தில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார். மேலும் தனது காதலரும் கன்னட சினிமா தயாரிப்பாளருமான நவீனுடன் நடிகை பாவனாவுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இதற்கிடையில் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து ‘ஹனிபீ-2’ படம் கடந்த வெள்ளிக்கிழமை கேரளாவில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று உள்ளது. இதுபற்றி நடிகை பாவனா ஒரு இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-எனது வாழ்க்கை எதை...
நயன்தாரா படத்துக்கு ஏ சான்றிதழ் சென்சார் போர்டை விமர்சித்த விக்னேஷ் சிவன்

நயன்தாரா படத்துக்கு ஏ சான்றிதழ் சென்சார் போர்டை விமர்சித்த விக்னேஷ் சிவன்

செய்திகள்
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரா’ படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. திகில் காட்சிகள் படத்தில் அதிகம் இடம்பிடித்துள்ளதால் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில், ‘டோரா’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்ததற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தணிக்கை குழுவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘டோரா’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ். துருவங்கள் பதினாறு, மாநகரம் படங்களுக்கு ‘யுஏ’ சான்றிதழ். ஆனால், சமீபத்தில் வெளிவந்த சில படங்களுக்கு மட்டும் ‘யு’ சான்றிதழ். சென்சார் போர்டு மீதான காதல் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று கூறியுள்ளார். நயன்தாராவும்-விக்னேஷ்சிவனும் காதலர்களாக வலம் வந்துகொண்டிருப்பதாக கோலிவுட் ஒரு செய்தி பரவி வருகிறது. இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால்...
சங்கங்களுக்கு சத்தமில்லாமல் நிதி வழங்கிய விஜய்..!

சங்கங்களுக்கு சத்தமில்லாமல் நிதி வழங்கிய விஜய்..!

செய்திகள்
தமிழ் திரையுலகில் சில சம்பவங்கள் சத்தமில்லாமல் நடந்தாலும் எப்படியாவது வெளியில் தெரிந்து விடுகிறது. எடிட்டர் யூனியன் வளர்ச்சிக்காக நடிகர் விஜய் ரூ.10 லட்சம் நிதிவழங்கினார். இந்த விவரம் யாருக்கும் தெரியாமல் இருக்கும் என்று நினைக்க எடிட்டர் யூனியன் அருகில் இருந்த ஒளிப்பதிவாளர் யூனியனுக்கு தெரிந்து போனது. அப்புறம்... ஒளிப்பதிவாளர் யூனியனுக்கும் ரூ.10 லட்சத்தை நிதியாக அளித்தார் நடிகர் விஜய். இந்த இரண்டு சங்கங்களுக்கு நிதி அளித்த விவரம் வெளியில் தெரிந்து மிச்சம் இருக்கும் சங்கங்கள் விஜய் ஆபீசுக்கு வரிசை கட்டாமல் இருந்தால் சரி...! கோடங்கி...
அப்பா மலையாள ரீமேக்கில் வரலட்சுமி

அப்பா மலையாள ரீமேக்கில் வரலட்சுமி

செய்திகள்
ஒரு பக்கம் நடிகர் என பிஸியாக இருந்தாலும், தரமான படங்களை தன் சொந்த பேனரில் இயக்க ஆர்வம் கொண்டவர் சமுத்திரக்கனி.இவர் இயக்கி, நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடித்த படம் ‘அப்பா’. பெண்களையும் குழந்தைகளையும் கவர்ந்த இப்படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்யவிருக்கிறார். இதில் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்க, இப்படத்தின் சூட்டிங்கை ஆரம்பித்துள்ளார் சமுத்திரக்கனி. ‘அப்பா’ திரைப்படம் மலையாளத்தில் ‘ஆகாச மிட்டாய்’ என்ற பெயரில் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமானது.இதில் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார், அப்பாவில் நடித்த யுவலட்சுமி, நஷாத் உள்பட பிரபல மலையாள நடிகர்கள் நடிக்க இயக்கம் சமுத்திரக்கனி....
சசிகுமாருக்கு தங்கை ஆன முன்னணி நடிகை..!

சசிகுமாருக்கு தங்கை ஆன முன்னணி நடிகை..!

செய்திகள்
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முத்தையா இயக்கத்தில் சசிகுமார், ஜோடியாக ஹன்சிகா நடிக்கும் கொடிவீரன் படத்தில், சசிகுமாரின் தங்கையாக நடிக்கிறார். இது பற்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்... “நான் எப்போதுமே ஒரு படத்தில் நடிக்கும் போது அதில் யார் ஹீரோ, எத்தனை நாயகிகள் என்று பார்ப்பது இல்லை. கதையில் எனது பங்கு என்ன என்பதை மட்டுமே பார்க்கிறேன் அந்த வகையில் ‘கொடிவீரன்’ படத்தில் எனக்கு தங்கை வேடம் என்றாலும் அழுத்தமான வேடம். கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடம். ‘காக்காமுட்டை’ படத்தில் எப்படி எனது அம்மா வேடம் பேச வைத்ததோ, அது போல் இந்த தங்கை வேடமும் என்னை பற்றி பேசவைக்கும் வகையில் இருக்கும். எனவே, சசிகுமாருக்கு தங்கையானதும் மகிழ்ச்சி தான்” என்றார்....
ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் வேண்டுகோள்

ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் வேண்டுகோள்

செய்திகள்
இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் எதிரப்பு தெரிவித்ததை அடுத்து இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ’2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சே-வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் இந்தப் படத்திற்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடு...
என்னை கற்பழிக்கப் போவதாக மிரட்டுகிறார்கள்.. ட்விட்டர் கணக்குகளை முடக்குங்க..! – சின்மயி

என்னை கற்பழிக்கப் போவதாக மிரட்டுகிறார்கள்.. ட்விட்டர் கணக்குகளை முடக்குங்க..! – சின்மயி

செய்திகள்
என்னை கற்பழிக்கப் போவதாக ட்விட்டரில் பலரும் மிரட்டுகிறார்கள். எனவே அவர்களின் கணக்குகளை முடக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி. இது தொடர்பாக, மாற்றம் கோரும் இணையதளமான change.com-ல் ஒரு வேண்டுகோளை வைத்து, மக்களிடம் ஆதரவு கோரியுள்ளார். சமூக வலைத் தளமான ட்விட்டரில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக நடிகர் நடிகைகளின் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் வலம் வருகின்றன. ஆரம்பத்தில் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இவை வெளியாகின. பின்னர் அந்தக் கணக்கு முடக்கப்பட்டதும், சுசிலீக்ஸ் என்ற ஹேஷ்டேகுடன் வெவ்வேறு பக்கங்களில் வெளியாகி வருகின்றன. சின்மயி - அனிருத் படங்கள், வீடியோக்களை வெளியிடப் போவதாகவும் ஒரு சுசித்ரா பக்கத்தில் கூறப்பட்டிருந்தது. மேலும் சின்மயி பற்றிய மேலும் சில அந்தரங்க தகவல்களும் அந்தப் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், ட்விட்டர் பக்கத்தில் தன்னை கற்பழிக்கப் ப...
ரிலீஸ் தடை நீங்கிய  மொட்டசிவா கெட்ட சிவா

ரிலீஸ் தடை நீங்கிய மொட்டசிவா கெட்ட சிவா

செய்திகள்
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் திரைக்கு வருவதில் சிக்கல் வெளியானது. இப்படத்தை வெளியிடுபவர்களில் ஒருவரான வேந்தர் மூவிஸ் மதன், பைனான்சியர் போத்ராவிடம் வாங்கிய ரூ.11 கோடி கடனை திருப்பிக் கொடுக்காததால், இப்படத்தை வெளியிட தடை வாங்கியிருந்தார் போத்ரா. இதனால், இந்த படம் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்வாங்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்திற்கு எதிராக போத்ரா தொடர்ந்திருந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, தற்போது இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிரம் காட்டியுள்ளனர். அதன்படி, வருகிற மார்ச் 10-ந் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் நிக்கி கல்ராணி, சத்யராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாய் ரமணி இப்படத்தை இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிற...
பழி வாங்க வேண்டாம் உங்களை காயப்படுத்தியவரின் தண்டனையை நீங்களே பார்க்கும் சூழல் உருவாகும்..!  சுசித்ராவுக்கு த்ரிஷா பதில்

பழி வாங்க வேண்டாம் உங்களை காயப்படுத்தியவரின் தண்டனையை நீங்களே பார்க்கும் சூழல் உருவாகும்..! சுசித்ராவுக்கு த்ரிஷா பதில்

செய்திகள்
பழி வாங்க வேண்டாம் உங்களை காயப்படுத்தியவரின் தண்டனையை நீங்களே பார்க்கும் சூழல் உருவாகும்..! சுசித்ராவுக்கு த்ரிஷா பதில் சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் இரண்டு வாரமாக நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களும் படுக்கை அறை அந்தரங்க வீடியோக்களும் அடுக்கடுக்காக குவிந்து திரையுலகை பரபரப்பாக்கியது. நடிகர் தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்டிரியா, ஹன்சிகா ஆகியோர் பெயர்களில் படங்கள் வெளியிடப்பட்டது. அனுயா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோரின் ஆபாச படங்கள் வெளிவந்தன. டைரக்டர் செல்வராகவன் லீலை என்ற பெயரில் அவரும் ஆண்ட்ரியாவும் பேசிக்கொள்வது போன்ற ஆடியோ உரையாடலும் வெளியானது. நடிகை அமலாபால், பார்வதி நாயர் உள்ளிட்ட மேலும் பலரது படங்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. இதனால் நடிகர் நடிகைகள் அதிர்ச்சியானார்கள். தொடர்ச்சியாக மது விருந்து நிகழ்ச்சியில் தனுஷ், தமன்னா, பூனம்பாஜ்வா ஆகியோர் ...
நடிகர் நடிகைள் ஆபாச பட சர்ச்சை  எனக்கு எதிரிகளே இல்லை என்கிறார் திடீர் பரபரப்புக்கு ஆளான பாடகி சுசித்ரா..!  அதிர்ச்சியில் மீளா தமிழ் திரையுலகம்

நடிகர் நடிகைள் ஆபாச பட சர்ச்சை எனக்கு எதிரிகளே இல்லை என்கிறார் திடீர் பரபரப்புக்கு ஆளான பாடகி சுசித்ரா..! அதிர்ச்சியில் மீளா தமிழ் திரையுலகம்

செய்திகள்
நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களை டுவிட்டரில் வெளியிட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள சினிமா பின்னணி பாடகி சுசித்ரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:- “எனது டுவிட்டர் பக்கத்தை 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். இதற்கு ‘புளூ டிக்’ கிடையாது என்பதால் யார் வேண்டுமானாலும் ஊடுருவ முடியும். அப்படித்தான் ‘ஹேக்’ செய்து முடக்கிவிட்டனர். இதை செய்தவர்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபோல் எனது கணவர் உள்ளிட்ட மேலும் பலருடையை டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது எனது பேஸ்புக்கை ஹேக் செய்தனர். இப்போது டுவிட்டரை முடக்கி இருக்கிறார்கள். டுவிட்டர் நிர்வாகத்திடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து எனது பக்கத்தை மூடும்படி கடிதம் அனுப்பினேன். 2 நாட்களுக்கு முன்பு ஸ்டூடியோவுக்கு சென்று பாடல் ஒலிப்பதிவை முடித்து விட்டு இரவில் வந்து வீட்டில் தூங்கினேன். காலை 9 மணிக்க...