சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

சங்கங்களுக்கு சத்தமில்லாமல் நிதி வழங்கிய விஜய்..!


தமிழ் திரையுலகில் சில சம்பவங்கள் சத்தமில்லாமல் நடந்தாலும் எப்படியாவது வெளியில் தெரிந்து விடுகிறது. எடிட்டர் யூனியன் வளர்ச்சிக்காக நடிகர் விஜய் ரூ.10 லட்சம் நிதிவழங்கினார். இந்த விவரம் யாருக்கும் தெரியாமல் இருக்கும் என்று நினைக்க எடிட்டர் யூனியன் அருகில் இருந்த ஒளிப்பதிவாளர் யூனியனுக்கு தெரிந்து போனது.
அப்புறம்… ஒளிப்பதிவாளர் யூனியனுக்கும் ரூ.10 லட்சத்தை நிதியாக அளித்தார் நடிகர் விஜய். இந்த இரண்டு சங்கங்களுக்கு நிதி அளித்த விவரம் வெளியில் தெரிந்து மிச்சம் இருக்கும் சங்கங்கள் விஜய் ஆபீசுக்கு வரிசை கட்டாமல் இருந்தால் சரி…!

கோடங்கி

359 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன