புதன்கிழமை, ஆகஸ்ட் 19
Shadow

அப்பா மலையாள ரீமேக்கில் வரலட்சுமி

ஒரு பக்கம் நடிகர் என பிஸியாக இருந்தாலும், தரமான படங்களை தன் சொந்த பேனரில் இயக்க ஆர்வம் கொண்டவர் சமுத்திரக்கனி.இவர் இயக்கி, நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடித்த படம் ‘அப்பா’. பெண்களையும் குழந்தைகளையும் கவர்ந்த இப்படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்யவிருக்கிறார். இதில் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்க, இப்படத்தின் சூட்டிங்கை ஆரம்பித்துள்ளார் சமுத்திரக்கனி. ‘அப்பா’ திரைப்படம் மலையாளத்தில் ‘ஆகாச மிட்டாய்’ என்ற பெயரில் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமானது.இதில் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார், அப்பாவில் நடித்த யுவலட்சுமி, நஷாத் உள்பட பிரபல மலையாள நடிகர்கள் நடிக்க இயக்கம் சமுத்திரக்கனி.

392 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன