ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 11
Shadow

செய்திகள்

சட்டத்தை சாதகமாக்கி கல்லா கட்டும் உதயம் தியேட்டர்… கண்டு கொள்ளாத காவல்துறை..!

சட்டத்தை சாதகமாக்கி கல்லா கட்டும் உதயம் தியேட்டர்… கண்டு கொள்ளாத காவல்துறை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  உதயம் தியேட்டரின் இன்றைய நிர்வாகிகளின் உள்ளடி வேலை! சினிமாவில் ஏற்கெனவே எக்கச்சக்கமான பிரச்னைகள் இருக்கிறது.அத்தனையையும் தாண்டிதான் வாரா வார்ம் சில பல திரைப்படங்கள் வெளியாகின்றன. அப்படி கோடி கணக்கில் உருவான பல படங்கள் வெளியாகி ரிலீஸான அடுத்த நாளே இணையத்தில் லீக்-காகி வருமானத்தை கெடுத்து விடுகிறது. அத்துடன் பெரும்பாலான தியேட்டர்கள் அன்றாடம் வசூலாகும் தொகையை உண்மையான கணக்குடன் தயாரிப்பாளர்களிடம் சேர்க்கும் போகும் குறைந்து வருகிறது. இது குறித்து நம்மிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு சீனியர் புரொடியூசர், “இப்போ பார்த்தீங்கண்ணா டாப் ஹீரோக்கள் பலரும் தயாரிப்பாளர்களாக மாறி வாராங்க.. அதை கவனிச்சீங்களா?அதுக்குக் காரணம் இங்கே தயாரிப்பாளர்கள் குறைந்துகொண்டே போவதுதான். இதே தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த ஏ.வி.எம்., சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது படத் தயாரிப்புகளை வெகுவா...
ஈ ஓட்டாமல் கொசு விரட்டியிருக்கலாம்… கேரளாவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் – கமல்ஹாசன்

ஈ ஓட்டாமல் கொசு விரட்டியிருக்கலாம்… கேரளாவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் – கமல்ஹாசன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நிலவேம்பு கஷாயம் வழங்கும் விஷயத்தில் கமல்ஹாசன் வெளியிட்ட ஒரு செய்தி அவருக்கு எதிராக திருப்பப்பட்டதால் மீண்டும் ஒரு விளக்கம் அளித்திருக்கிறார். நிலவேம்புக் கஷாயத்தை நம் நற்பணி இயக்கத்தார் விநியோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதை சிலர், நிலவேம்புக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு என்று செய்தியாய்ப் பரப்புவது எந்த விதத்திலும் நியாயமில்லை. ஆர்வக் கோளாறில் சரச்சைக் குள்ளாகி இருக்கும் மருந்தை, அளவில்லாமல் கொடுப்பதைத் தவிர்க்கவே அந்த ட்வீட்டை வெளியிட்டேன். வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் மருந்துகளை என் இயக்கத்தார் விநியோகிப்பதை நான் விரும்பவில்லை. அரசு செய்திருக்கும் ஏற்பாடு, வைத்தியர்கள் உதவியுடன். அவ்வுதவியோ, அறிவுரையோ இல்லாமல் மருந்துகள் அளவின்றி அனைவருக்கும் விநியோகிக்கப்படுவதை மட்டுமே நான் விமர்சிக்கிறேன். மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். ஆனா...
அதிமுக தோன்றிய நாள்… ஒரு பிளாஷ்பேக் – ஆந்தையார்

அதிமுக தோன்றிய நாள்… ஒரு பிளாஷ்பேக் – ஆந்தையார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
????தி.மு.க.வில் இருந்து எம். ஜி.ஆர். நீக்கப்பட்ட நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை நீக்கியதை எதிர்த்து, கோர்ட்டில் எம். ஜி.ஆர். வழக்குத் தொடருவாரா? அல்லது, "நான்தான் உண்மையான தி.மு.க" என்று அறிவிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், எம்.ஜி.ஆர். அப்படி எல்லாம் செய்யவில்லை. "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கினார். 1972 இதே அக்டோபர் 18ந் தேதி இக்கட்சி உதயமாயிற்று. பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், சட்டசபை உறுப்பினர்கள் காளிமுத்து, முனுஆதி, எஸ்.எம்.துரைராஜ், மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி கவிஞர் முத்துராமலிங்கம், மொழி துறை அலுவலர் கவிஞர் நா.காமராசன் ஆகியோர் ஆரம்ப கட்டத்திலேயே அ.தி.மு.க.வில் சேர்ந்தனர். சில நாட்களுக்குப்பின் நாஞ்சில் மனோகரன் இணைந்தார். கட்சியின் கொடி என்ன என்பதை எம்.ஜி.ஆர். அறிவித்த...
கார்த்தி வெளியிட்ட கர்ஜனை வீடியோ போஸ்டர்..!

கார்த்தி வெளியிட்ட கர்ஜனை வீடியோ போஸ்டர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரித்து, சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா நடித்து வெளிவர இருக்கும் படம் 'கர்ஜனை' காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இதன் பின்னணியில் நடக்கும் கதை ஆக்‌ஷன் திரில்லராக படமாக்கப்பட்டுள்ளது.   உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை 'பருத்தி வீரன்' புகழ் கார்த்தி இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டார். https://youtu.be/dP0aIZcBRu0 இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. Motion Poster Link : https://www.youtube.com/watch?v=dP0aIZcBRu0  ...
மெர்சல் படத்தை வரவேற்று டீசர் வெளியிட்ட விசிறி படக்குழு..!

மெர்சல் படத்தை வரவேற்று டீசர் வெளியிட்ட விசிறி படக்குழு..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
“மெர்சல்” படத்தை இனிதே வரவேற்கிறது “விசிறி” படக்குழு. தலைமுறை தலைமுறையாக நடைபெறும் ரசிகர்களின் மோதல். ஆம்! தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் “தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா” இவர்களின் ரசிகர்களிடம் ஏற்பட்ட மோதல்… “எம்.ஜி.ஆர். – சிவாஜி” , “ரஜினி – கமல்” என்று தொடர்ந்தது. இன்றைய சூப்பர் ஸ்டார்களாகிய “தல – தளபதி” ரசிர்களின் மோதலை மையக்கருவாக கொண்டு விரைவில் வெளிவரவிருக்கும் படம் “விசிறி” “J Sa Productions” மூலமாக A.ஜமால் சாகிப்-A.ஜாபர் சாதிக் பெருமையுடன் வழங்க… நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை கருவாக கொண்டு வெளிவந்த “வெண்நிலா வீடு” திரைப்படத்தின் இயக்குனர் “வெற்றி மகாலிங்கம்”, “மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ்” சார்பில் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “விசிறி” படத்தை வெளியிட தயாராக இருக்கும் படக்குழு... உலகத்தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் “இளைய தளப...
ரஜினி-ஷங்கர் கூட்டணியின் 2.0 பட ஆடியோ 27ம் தேதி துபாயில் பிரமாண்டமாக வெளியாகிறது..!

ரஜினி-ஷங்கர் கூட்டணியின் 2.0 பட ஆடியோ 27ம் தேதி துபாயில் பிரமாண்டமாக வெளியாகிறது..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
ரஜினி-ஷங்கர் கூட்டணியின் 2.0 பட ஆடியோ 27ம் தேதி துபாயில் பிரமாண்டமாக வெளியாகிறது..! ஷங்கர் இயக்கத்தில் மெஹா பட்ஜெட்டில் உருவாகி வரும் ரஜினியின் 2.0 படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஆடியோ ரிலீஸ் துபாயில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது. வரும் 27ம் தேதி இந்த விழா துபாயில் நடக்கிறது. தமிழ், இந்தி முன்னணி நட்சத்திரங்கள் பலர் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.  ...
ஜி.வி.பிரகாஷின் 100% காதல்…!

ஜி.வி.பிரகாஷின் 100% காதல்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
100% காதல் கிரியேட்டிவ் சினிமாஸ் NY - சுகுமார் மற்றும் என்.ஜே என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் “100% காதல்” - தமிழ் திரைப்படத்தை எம். எம். சந்திரமௌலி இயக்க, கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான எம்.எம். சந்திரமௌலி, இத்திரைப்படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அதிரடி, மர்மம், வன்மம் என துரோகங்களும் வன்முறைகளும் நிறைந்த திரைப்படங்கள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், முற்றிலும் காதலையே மையமாக கொண்டு வரவிருக்கும் 100%  காதல், இத்தகைய சூழலில் ஒரு மாபெரும் புதிய திருப்பத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தவிருக்கிறது. தோட்டா தரணி கலைக்கு பொறுப்பேற்கிறார். நடன அமைப்பு பிரேம் ரக்ஷித், நிக்சன். கவிதா சச்சியும், A. மேக்னாவும் இணைந்து உடை வடிவமைப்பு வேலைகளை கவனித்து கொள்கிறார்கள். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ...
“எக்ஸ் வீடியோஸ்” படத்தின்  லாபத்தில் அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை கட்ட இயக்குநர் திட்டம்!

“எக்ஸ் வீடியோஸ்” படத்தின் லாபத்தில் அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை கட்ட இயக்குநர் திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ' எக்ஸ் வீடியோஸ் ' . இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஆர்.கே.வி .ஸ்டுடியோவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் சஜோசுந்தர் பேசும் போது , " நான் இந்தப் படத்தை சமூக விழிப்புணர்வு நோக்கத்தில் தான்  எடுத்திருக்கிறேன். தொழில்நுட்பம் இன்று எந்த அளவுக்கு நம்மை அபாய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை எச்சரிக்கும்படி ஒரு படம் தேவை என்பதை உணர்ந்து இப்படத்தை எடுத்திருக்கிறேன். ஒரு ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் நம்மை எங்கிருந்தாலும் கண்காணிக்க முடியும். நம்மை வைத்து   எப்படி வேண்டுமானாலும் தகவல் தொடர்பைத் தவறாக பயன்படுத்த முடியும். அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது . என் நண்பர் ஒருவர் எனக்கு  , தான் பார்த்த பல விதமான வீடியோக்களைப் பகிர்வார். அப்படி ஒரு முறை  அவர் அனுப்பிய வீடியோவைப்...
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணத்தின் மர்மத்தை உடைக்கும் “உயில் ஒன்று “

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணத்தின் மர்மத்தை உடைக்கும் “உயில் ஒன்று “

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணத்தின் மர்மத்தை உடைக்கும் "உயில் ஒன்று " ஆம்ஸி பிலிம்ஸ் சார்பாக ஆம்ஸ்ட்ராங் பிரவீன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் தீபன் இயக்கியிருக்கும் திரைப்படம் "உயில் ஒன்று" இன்றும் பல புரட்சிகர இயக்கங்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர் நேதாஜி. நேதாஜி மரணம் இன்றுவரை உலக நாடுகளில் பேசப்படுகிறது. அவர் இறந்து விட்டார் என்று ஒரு சாரரும், இன்னும் இருக்கிறார் என்று நம்புபவர்களும் உண்டு. இதற்கான விடையை சொல்லும் படம் "உயில் ஒன்று" இந்தியாவில் முதல் முறையாக 360 டிகிரி "விர்ச்சுவல் ரியாலிட்டி" virtual reality தொழில் நுட்பத்தில் படத்தின் தலைப்பை வெளியிட இருக்கிறார்கள். 60 சதவிகிதம் புது டெக்னாலஜிகளால் பார்ப்பவர்கள் வியக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.   இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டரை இயக்குனர் சீமான் அவர்கள் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார். விரைவில் "உயில் ...
ஹர ஹர மஹாதேவகி” கூட்டணி மீண்டும் இணையும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட பூஜை

ஹர ஹர மஹாதேவகி” கூட்டணி மீண்டும் இணையும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட பூஜை

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ஹர ஹர மஹாதேவகி" கூட்டணி மீண்டும் இணையும் இருட்டு அறையில் முரட்டு குத்து ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் K E  ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இதில் கௌதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சன்தோஷ் பி ஜெயகுமார். இப்படத்திற்கு தருண் பாலாஜி ஒளிப்பதிவை மேற்கொள்ள, இசையமைப்பாளர்  பாலமுரளி பாலா இசையமைக்கிறார். பிரசன்னா G K படத் தொகுப்பை கவனிக்க, சுப்ரமணிய சுரேஷ் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தைப் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார் பேசும் போது,‘ இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடி ஜேனரில் உருவாகும் படம். இப்படத்தின் படபிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைப...