வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

ஈ ஓட்டாமல் கொசு விரட்டியிருக்கலாம்… கேரளாவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் – கமல்ஹாசன்

 

நிலவேம்பு கஷாயம் வழங்கும் விஷயத்தில் கமல்ஹாசன் வெளியிட்ட ஒரு செய்தி அவருக்கு எதிராக திருப்பப்பட்டதால் மீண்டும் ஒரு விளக்கம் அளித்திருக்கிறார்.

நிலவேம்புக் கஷாயத்தை நம் நற்பணி இயக்கத்தார் விநியோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதை சிலர், நிலவேம்புக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு என்று செய்தியாய்ப் பரப்புவது எந்த விதத்திலும் நியாயமில்லை. ஆர்வக் கோளாறில் சரச்சைக் குள்ளாகி இருக்கும் மருந்தை, அளவில்லாமல் கொடுப்பதைத் தவிர்க்கவே அந்த ட்வீட்டை வெளியிட்டேன். வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் மருந்துகளை என் இயக்கத்தார் விநியோகிப்பதை நான் விரும்பவில்லை. அரசு செய்திருக்கும் ஏற்பாடு, வைத்தியர்கள் உதவியுடன். அவ்வுதவியோ, அறிவுரையோ இல்லாமல் மருந்துகள் அளவின்றி அனைவருக்கும் விநியோகிக்கப்படுவதை மட்டுமே நான் விமர்சிக்கிறேன். மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். ஆனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் ஆர்வம் மட்டுமே ஊக்கியாகச் செயல்படுதலை என் இயக்கத்தார் செய்வதைத்தான் நான் நிறுத்தி வைக்கச் சொல்லியிருக்கிறேன். சித்தா அலோபதி என்ற தனி சார்பு எனக்கில்லை.

அதுவரை டெங்குவை எப்படிக் கட்டுப்படுத்துவது? என்றால் பக்கத்து மாநிலமான கேரளத்தைப்பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். இத்தனை நாள் ஈ ஓட்டாமல் கொசுவை விரட்டியிருக்கலாம். என்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

 

 

 

 

642 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன