மறைந்த முதல்வர் ஜெ.,வின் வாழ்க்கை வரலாற்று முதல் ஆராய்ச்சி ஆங்கில நூல் வெளியீடு ஓசுலே மாநகர பெண் மேயர் கம்சாயினி குணரத்னே வெளியிட இலங்கை அமைச்சர் பெற்றுக் கொண்டார்
தமிழக அரசியலில் இரும்பு மனுஷியாக இந்திய அரசியலில் அசைக்க முடியாத இடத்தில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்ககை வரலாற்றை ஆராய்ச்சி கட்டுரை வடிவில் பேராசிரியர் தமிழரசன் என்பவர் எழுதியிருக்கிறார். இதற்காக 2009ம் ஆண்டில் அப்போதைய எதிர்க்கட்சித்தலைவராக இருந்த ஜெயலலிதாவிடமே அனுமதியும் பெற்றிருக்கிறார். தனது வாழ்க்கை வரலாற்றை ஆராய்ச்சி கட்டுரையாக எழுத அனுமதித்து ஜெயலலிதாவும் கடிதம் கொடுத்திருக்கிறார். இந்த ஆராய்ச்சி கட்டுரையின் ஆங்கில நூல் சென்னையில் நடைபெற்ற உலக தமிழர் திருநாள் விழாவில் வெளியிடப்பட்டது.
உலக வம்சாவளி அமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஆண்டுதோறும் உலக தமிழ்ர திருநாள் விழாவை நடத்துவது வழக்கம். 3வது ஆண்டாக இந்தாண்டு நடைபெற்ற விழாவில் நார்வே நாட்டில் உள்ள ஓசுலே மாநகர பெண் மேயர் கம்சாயினி குணரத்னே, இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன், இலங்கை எம்பிக்கள் சிவலிங்கம், ...
