வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25
Shadow

செய்திகள்

அதிரடி ஆக்ஷனில் ‘சி3’

அதிரடி ஆக்ஷனில் ‘சி3’

செய்திகள்
அதிரடி ஆக்ஷனில் ‘சி3’ சூர்யா நடிப்பில் ஏற்கனவே சிங்கம், சிங்கம்2 படங்கள் ரிலீஸ் ஆகி வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள், தயாரிப்பாளர் என எல்லா தரப்பு மக்களையும் ஏமாற்றாமல் வசூல் தந்து வரவேற்பை பெற்றிருந்தது. ஹரி இயக்கத்தில் மீண்டும் சி3 என சிங்கம் படத்தின் அடுத்த பாகமாக சூர்யா நடிப்பில் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு வேண்டும் என மாணவர் போராட்டம் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பட ரிலீஸ் தள்ளிப்போனது. இப்போது பிப்ரவரி முதல்வாரத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முந்தைய சிங்கம், சிங்கம்2 படங்களை மிஞ்சும் வகையில் ஆக்ஷனிலும், அதிரடி காட்சிகளிலும் சி3 பிரமாண்டமாக இருக்கும் என்கிறது தயாரிப்பு தரப்பு. உலகம் முழுவதும் மிக அதிக திரையரங்குளில் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். ஏற்கனவே, ஜல்லி...
ஓப்பனிங் வசூலுக்காக வழக்கத்தை மீறும் தமிழ்திரையுலகம்..!

ஓப்பனிங் வசூலுக்காக வழக்கத்தை மீறும் தமிழ்திரையுலகம்..!

செய்திகள்
ஓப்பனிங் வசூலுக்காக வழக்கத்தை மீறும் தமிழ்திரையுலகம்..! தமிழ்திரையுலகில் படங்களின் ரிலீஸ் என்றால் அது வெள்ளிக்கிழமைகளில்தான் நடக்கும். அதிலும் குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வந்தால் அதற்கு ஒரு நாள் முன்னதாக படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். ஆனால், தமிழ் சினிமாவில் இப்போதைய நிலையில் கதை நன்றாக இல்லாமல் போனால் ரிலீஸ் ஆன சில தினங்களில் தியேட்டருக்கு கூட்டம் குறைந்து விடுகிறது. இதனால் வசூல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும், பிரமாண்ட பேனரில், பெரிய ஹீரோக்கள் படங்களாக இருந்தாலும் ஓப்பனிங் கலெக்ஷன் முடிந்து மறுவாரம் தொடங்கும்போது வசூல் குறைவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால், ஓப்பனிங் வசூலை எடுப்பதற்காக வழக்கமாக புதுப்படங்களை வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் செய்யும் தமிழ் திரையுலகம் கடந்த சில வாரங்களாக ஒரு நாள் முன்னதாகவே அதாவது வியாழக்கிழமையே படங்களை ரிலீஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறது...
தமிழ் தெரிந்த நாயகி என்பதால் ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது-  சாயா பட நாயகி காயத்ரி!

தமிழ் தெரிந்த நாயகி என்பதால் ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது- சாயா பட நாயகி காயத்ரி!

செய்திகள்
தமிழ் தெரிந்த நாயகி என்பதால் ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது- கலவரத்தைக் கிளப்புகிறார் சாயா பட நாயகி காயத்ரி! பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகிறது சாயா திரைப்படம்... பெரிய படங்கள் வெளிவரும்போது சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும்- இயக்குநர் வி எஸ் பழனிவேல் சாயா படத்தின் வெளியீடு இருமுறை தள்ளிப்போய் இப்போது பிப்ரவரி 3 ஆம் தேதி உறுதியாக வெளியாக உள்ளது. கல்வி எல்லோருக்கும் அவசியம் என்ற அடிப்படை இன்று மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. அந்த  வியாபாரத்தை எதிர்த்துப் போராடும் ஒரு பெண் பலியாகிறாள். பின் நடப்பதெல்லாம் ஆத்மாவின் விளையாட்டு. பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய படமாக உருவாகியுள்ளது ’சாயா.’ பைரவா படத்துடன் வந்துவிடலாம் என்று முடிவெடுத்துக் களமிறங்கினோம்...
லண்டனில் பிரிமியர்   22 ஆண்டுகளுக்குப் பிறகு  மீண்டும் டிஜிட்டல் பாட்ஷா!

லண்டனில் பிரிமியர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டிஜிட்டல் பாட்ஷா!

செய்திகள்
ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத வெற்றிப் படமான பாட்ஷா படம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புத்தம் புதிதாக வெளியாகவிருக்கிறது. அண்மையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் பதிப்பை சத்யம் திரையரங்கில் சிறப்புக் காட்சியாக போட்டுக் காண்பித்தார்கள். படம் பார்த்த அத்தனைப் பேரும், ஏதோ புதிய ரஜினி படம் ஒன்றைப் பார்த்த திருப்தியில் ஆடித் தீர்த்தார்கள் இப்போது படத்தை உலகம் முழுவதும் ஒரே நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன் லண்டனில் வரும் பிப்ரவரி 17-ம் தேதி சிறப்புக் காட்சி ஒன்றைத் திரையிடத் திட்டமிட்டுள்ளனர். அந்தக் காட்சி முடிந்ததும் வரும் 25-ம் தேதி உலகம் முழுவதும் பாட்ஷா மறு வெளியீடு செய்யப்படுகிறது....
நான் போயஸ்கார்டன் செல்வது உங்கள் கைகளில் உள்ளது: தொண்டர்கள் மத்தியில் தீபா பரபரப்பு பேச்சு

நான் போயஸ்கார்டன் செல்வது உங்கள் கைகளில் உள்ளது: தொண்டர்கள் மத்தியில் தீபா பரபரப்பு பேச்சு

செய்திகள்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சி தொண்டர்கள், முன்னாள் நிர்வாகிகள் பலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை சந்தித்து அரசியலுக்கு வரும்படி வற்புறுத்தி வருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் தீபா வீட்டுக்கு தினமும் வருகிறார்கள். வீட்டின் முன்பு திரளும் தொண்டர்கள் மத்தியில் தீபாவும் பேசுகிறார். நேற்று கோவை, திருச்சி, தூத்துக்குடி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் குவிந்திருந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் தீபாவை சந்தித்து பேசினார்கள். எனக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் அனைவருக்கும் நன்றி. சிலர் வேண்டும் என்றே வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அதை நம்ப வேண்டாம். வதந்திகளுக்கு நீங்களே முற்றுப்புள்ளி வையுங்கள். என்னை நம்பி வருபவர்களை கைவிட மாட்டேன். மக்களால் நான், மக்கள...
நாகசைதன்யாவுடன் சமந்தா நிச்சயதார்த்தம்  அடுத்த ஆண்டு தான் திருமணம்..!

நாகசைதன்யாவுடன் சமந்தா நிச்சயதார்த்தம் அடுத்த ஆண்டு தான் திருமணம்..!

செய்திகள்
நடிகை சமந்தாவுக்கும் அவரது காதலர் நாக சைதன்யாவுக்கும் ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து வருகிறார். இந்நிலையில் அவர்களுக்கு ஹைதராபாத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பிரமாண்டமாக நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நாகர்ஜுனா, சமந்தா குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். சைதன்யாவும், சமந்தாவும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். அவர்கள் இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்கள் அடுத்த ஆண்டு தான் திருமணம் செய்ய உள்ளார்களாம். தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யா. நாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ரீமேக்கான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'மனம்' உள்ளிட்ட பல படங்களில் நாக சைதன்யாவுக்கு நாயகியாக நடித்தவர் சமந்தா. அப்ப...
பல கோடி செலவில் சினிமா தயாரிக்கிறார்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் வீடியோவில் படம் பார்க்கிறார்கள்  அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை

பல கோடி செலவில் சினிமா தயாரிக்கிறார்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் வீடியோவில் படம் பார்க்கிறார்கள் அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை

சினி நிகழ்வுகள், செய்திகள்
பல கோடி செலவில் சினிமா தயாரிக்கிறார்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் வீடியோவில் படம் பார்க்கிறார்கள் அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை செந்தில்வேல் தயாரிப்பில் சாட்டை யுவன் நடிப்பில் ஜிப்சிராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அய்யனார் வீதி  படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு வெளியிட ஆர்.கே.சுரேஷ்  பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் நடிகர்கள் பாக்யராஜ், பொன்வண்ணன், இயக்குனர் பேரரசு, தயாரிப்பாளர்  தேனப்பன்,  பாடகர் வேல்முருகன், ஜெய் ஆகாஷ், இசையமைப்பாளர் யு.கே.முரளி உட்பட பலர் கலந்து கொண்டு  வாழ்த்தினார்கள். விழாவுக்கு வந்தவர்களை கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என கிராமிய கலைஞர்களை கெண்டு தாரை தப்பட்டை இசைத்து வரவேற்றார்கள். நீதியரசர் முரளிதரன் பேசும்போது: ஒரு படத்தை தயாரிப்பது அத்தனை சுலபமல்ல. அதை மிகுந்த சிரமப்பட்டே தயரிக்கிறார்கள். தொழில்நுட்ப ...

மாதவன் – சாய் பல்லவி – இயக்குநர் விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படம்

செய்திகள்
மாதவன் - சாய் பல்லவி - இயக்குநர் விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை தயாரிப்பதன் மூலம், தமிழ் திரையுலகில் முதல் முறையாக அடியெடுத்து வைக்கின்றது 'பிரமோத் பிலிம்ஸ்'      'இறுதிச்சுற்று' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார் நடிகர் மாதவன். இவர் தற்போது இந்திய திரையுலகின், குறிப்பாக இந்தி திரையுலகின் பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் 'பிரமோத்' பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை 'பிரமோத் பிலிம்ஸ்' சார்பில் பிரத்தீக் சக்கரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் இணைந்து  தயாரிக்கின்றனர். உலகளவில் பிரசித்தி பெற்ற 'லவ் இன் டோக்கியோ', 'ஜுக்னு' போன்ற இந்தி திரைப்படங்களை 'பிரமோத் பிலிம்ஸ்'  தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாக இரு...

கவிஞர் வைரமுத்துவின் மலையாளச் சிறுகதைகள் கேரளாவில் எம்.டி.வாசுதேவன் நாயர் வெளியிடுகிறார்

செய்திகள்
        கவிஞர் வைரமுத்து எழுதிய ‘வைரமுத்து சிறுகதைகள்’ என்ற நூல் மூன்று மாதங்களில் 9 பதிப்புகள் கண்டதாகும். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சிறுகதைகள் ‘சிறிது நேரம் மனிதனாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மாத்ருபூமி பதிப்பித்திருக்கும் இந்த நூலை ஞானபீடம் பரிசுபெற்ற புகழ்மிக்க மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் இம்மாதம் 28ஆம் தேதி கேரளாவில் வெளியிடுகிறார். நூலின் முதற்படியை கேரள சாகித்ய அகாடமியின் செயலாளர் மோகனன் பெற்றுக்கொள்கிறார். கே.எஸ்.வெங்கிடாசலம் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். மலையாள இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தச்சன் திருவிழா கோழிக்கோட்டை அடுத்த திரூரில் கொண்டாடப்படுகிறது. துஞ்சன் திருவிழா என்று ஒவ்வோராண்டும் நான்கு நாட்கள் நடைபெறும் அந்தக் கலை இலக்கியத் திருவிழாவில் அகில இந்திய அறிஞர்களும் எழுத்தாள...
ஜல்லிக்கட்டு வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் – நடிகர் சூர்யா

ஜல்லிக்கட்டு வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் – நடிகர் சூர்யா

செய்திகள்
ஜல்லிக்கட்டு வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சூர்யா இதுபற்றி திருவனந்த புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் சூர்யா கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஜல்லிக் கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்வில் ஒரு மாணவர் காப்பி அடித்தார் என்பதற்காக தேர்வு முறையையே ரத்து செய்வது போல இது உள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் போராட்டம் எழுச்சி மிக்கதாக உள்ளது. அவர்கள் தாமாகவே வந்து போராட்டம் நடத்துவது பெருமையாக உள்ளது. இந்த போராட்டத்தில் உண்மை உள்ளது. ஜல்லிக்கட்டு வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது எங்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றியே பேசப்படும் அளவுக்கு ஆதரவு பெருகி உள்ளது. இவ்வாறு சூர்யா கூறினார்....