செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18
Shadow

ஓப்பனிங் வசூலுக்காக வழக்கத்தை மீறும் தமிழ்திரையுலகம்..!

ஓப்பனிங் வசூலுக்காக வழக்கத்தை மீறும் தமிழ்திரையுலகம்..!
தமிழ்திரையுலகில் படங்களின் ரிலீஸ் என்றால் அது வெள்ளிக்கிழமைகளில்தான் நடக்கும். அதிலும் குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வந்தால் அதற்கு ஒரு நாள் முன்னதாக படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம்.
ஆனால், தமிழ் சினிமாவில் இப்போதைய நிலையில் கதை நன்றாக இல்லாமல் போனால் ரிலீஸ் ஆன சில தினங்களில் தியேட்டருக்கு கூட்டம் குறைந்து விடுகிறது. இதனால் வசூல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
மேலும், பிரமாண்ட பேனரில், பெரிய ஹீரோக்கள் படங்களாக இருந்தாலும் ஓப்பனிங் கலெக்ஷன் முடிந்து மறுவாரம் தொடங்கும்போது வசூல் குறைவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.


இதனால், ஓப்பனிங் வசூலை எடுப்பதற்காக வழக்கமாக புதுப்படங்களை வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் செய்யும் தமிழ் திரையுலகம் கடந்த சில வாரங்களாக ஒரு நாள் முன்னதாகவே அதாவது வியாழக்கிழமையே படங்களை ரிலீஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறது.


அந்த வகையில் ஜெயம்ரவி,அரவிந்த்சாமி நடித்த ‘போகன்’, ஜெய் நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள், சோனியா அகர்வால் நடித்த சாயா ஆகிய படங்கள் வியாழன் அன்றே ரிலீஸ் ஆகிறது.


இவர்களுக்கு நிகராக ஜாக்கிசானின் குங்பூ யோகா படம் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது.

399 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன