பத்ம விபூஷண் விருது பெற்ற இசைஞானிக்கு ரஜினி- கமல்-விஷால் வாழ்த்து
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர்கள் ரஜினிகாந்த் போனிலும், கமல்ஹாசன், விஷால் ஆகியோர் டுவிட்டரிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறார்.
விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாட்டின் 2-வது உயரிய குடிமகனுக்கு வழங்கப்படும் பத்ம வ...









