வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

சினி நிகழ்வுகள்

தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம்! – ஹை லைட்ஸ்!

தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம்! – ஹை லைட்ஸ்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நியாயமாக போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க வேண் டும் என்று தமிழ் திரையுலகினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர் லைட் ஆலையை மூடக் கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத் தில் நேற்று மவுன போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் தென்னிந் திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி அமைப்பு, இயக்குநர் கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரை நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை தொடங்கி வைத்த நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது: மக்களுக்கான தே...
நடிகையர் திலகம் படத்தில் ’மதுரவாணி’யாக சமந்தா!

நடிகையர் திலகம் படத்தில் ’மதுரவாணி’யாக சமந்தா!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
நடிகையர் திலகம் படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் குறித்த தகவலுடன் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாராகிவருகிறது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துவருகின்றனர். பத்திரிகை நிருபராக நடிக்கும் சமந்தா, தனக்கான படப்பிடிப்புக் காட்சிகள் முடிவடைந்துவிட்டதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மகாநதியில் எனக்கான படப்பிடிப்புக் காட்சிகளில் நடித்துமுடித்துவிட்டேன். சாவித்திரியின் வாழ்க்கை சம்பந்தபட்ட படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். நன்றி நாக் அஸ்வின் சார்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். தற்போது இந்தப் படத்தில் சமந்தா மதுரவாணி...
தமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் – 2018!- சில சந்தேகங்களும், பதில்களும்!

தமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் – 2018!- சில சந்தேகங்களும், பதில்களும்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
VPF எனும் வார்த்தை இவ்வளவு பிரபலம் ஆகும் என்று ஆரம்பத்தில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு துறையில் இருக்கும் தொழில்நுட்ப விசயங்கள் அல்லது அதனுள் உள்ள குளறுபடிகளை அதன் பயனீட்டாளர்களுக்கு தெரியப்படுத்தித்தான் போராட வேண்டும் என்பது அவசியம் அல்ல என்றாலும், நாடி நரம்பெல்லாம் சினிமா ஊறிப்போய் உள்ள நமக்கு அது சிறிது காலம் தவிர்க்கப்படும் போது, அதைப் பற்றி தெளிவுபடுத்த பல தளங்கள் முற்பட்டதால் இந்த அளவுக்கு பிரபலம் ஆகி விட்டது. ஆனால் இந்த ஒரு வார்த்தைக்குப் பின் மறைந்திருந்த பல விசயங்கள் இன்று வெளிவந்துள்ளதும் திரைத்துறைக்கு பெரும் நன்மையே. சினிமா உருவான காலகட்டம் முதல் பலதரப்பட்ட வடிவில் வரவு செலவு இருந்ததால் தயாரிப்பாளர், வினியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர் இடையே எந்த வரவு செலவு, யார் யாருக்கு என்ற வரைமுறை இருந்தது. இடையே காலமாற்றத்தில் உருவான தொழில்நுட்ப மாற்றங்களை, முறைப்பட...
லண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்

லண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தமிழ் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிரூத் முதன்முறையாக இலண்டனில் பிரம்மாண்டாமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்.  ஜுன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் இலண்டன் மற்றும் பாரீஸில் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் அனிரூத் முதன்முறையாக நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனமும், ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து செய்து வருகிறது. இது தொடர்பாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது... ஜுன் 16 ஆம் தேதியில் இலண்டனில் உள்ள S S E Wembly Arena என்னுமிடத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் இசை நிகழ்ச்சி நடைபெறும் கலையரங்கத்தின் இணையதளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பிரபல இணையதளங்களிலும் ( டிக்கெட் மாஸ்டர்) இன...
புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்காக அரும்பாடுபட்ட விடுதலை புலிகள் இயக்கத்தினை உருவாக்கியவர் பிரபாகரன். இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கை அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இயக்குநர் வெங்கடேஷ் குமார் முன்வந்துள்ளார். இப்படத்தினை வெங்கடேஷ் தனது சொந்த நிறுவனமான ‘ஸ்டூடியோ 18’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவிருக்கிறார். இவர் ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட்மேன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
திறமை, அழகு மற்றும் நேர்த்தியான பண்பால் வசியப்படுத்தும் ஆளுமை அம்ரிதா !

திறமை, அழகு மற்றும் நேர்த்தியான பண்பால் வசியப்படுத்தும் ஆளுமை அம்ரிதா !

CINI NEWS, சினி நிகழ்வுகள்
திறமை மற்றும் ஆற்றல் வளத்தை தாண்டி கவர்ந்து இழுக்கும் ஆளுமை எல்லோரையும் தன் வசம் வசியப்படுத்தும். அந்த மாதிரி உதாரணங்கள் மிகவும் அரிது, அதில் ஒருவர் தான் அம்ரிதா. படை வீரன் படத்தில் அவரின் நம்பிக்கை அளிக்கக்கூடிய திரை ஆளுமை மற்றும் பாராட்டை குவிக்கக் கூடிய நடிப்பை பார்த்தவுடன் அவர் கலைக்குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பார் அல்லது நடிப்பு பயிற்சி பெற்றவராக இருப்பார் என எல்லோரும் நினைத்தனர். ஆனால், "நான் பி காம் பட்டதாரி, என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். எந்த நாடக பின்னணியும் இல்லை, சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறேன், அது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பை பெற்று தந்தது" என சர்ப்ரைஸ் கொடுக்கிறார் அம்ரிதா. மேலும் விரைவில் வெளியாக இருக்கும் காளி படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும...
திரைத்துறையின் வேலை நிறுத்தம் தொடரும்: நடிகர் விஷால்

திரைத்துறையின் வேலை நிறுத்தம் தொடரும்: நடிகர் விஷால்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் தொடரும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் அறிவித்துள்ளார். திரையரங்குளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக கடந்த மார்ச் 1-ம் தேதியில் இருந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் புதிய படங்கள் ஏதும் வெளியாகமால் இருந்து வருகிறது.வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இது தொடர்பாக நேற்று தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விஷால்  பேச்சு வார்த்தை சரியான முறையில் நடக்கிறது. இன்னு 2-3 நாட்களில் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் அறிவித்து இருந்தார்...
நரகாசூரன் படத்தில் லாபம் கேட்டேனா? – கெளதம் மேனன் விளக்கம்

நரகாசூரன் படத்தில் லாபம் கேட்டேனா? – கெளதம் மேனன் விளக்கம்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
துருவங்கள் 16 திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன், தற்போது நரகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில், அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுள் இயக்குநர் கௌதம் மேனனும் ஒருவர். இந்நிலையில், நரகாசூரன் திரைப்படத்தின் தயாரிப்பு விவகாரம் தொடர்பாக கார்த்திக் நரேனுக்கும், கௌதம் மேனனுக்கும் மோதல் உருவாகியுள்ளது. கார்த்திக் நரேன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடந்த செவ்வாய் கிழமை பதிவிட்ட பதிவொன்றில், “சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடும்” என பதிவிட்டார். இது கௌதம் மேனனை குறிப்பிட்டு சொன்னதுபோல் இருந்த...
டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி

டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி

CINI NEWS, சினி நிகழ்வுகள்
நடன இயக்குனர் பாரதி கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் டான்சராக சுமார் 1000 பாடல்களுக்கு  நடனமாடி இருக்கிறார். இவர் பிருந்தா, கல்யாண், ராபர்ட் ஆகிய மாஸ்டர்களிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார். தற்போது பிக்பாஸ் புகழ் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள “ ஓவியாவ விட்டா யாரு “ என்ற படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து வீரதேவன், பவித்ரன் இயக்கத்தில் தாராவி, ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் நேத்ரா, பா.விஜய் இயக்கத்தில் ஆருத்ரா, தம்பிராமைய்யா இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் “ உலகம் விலைக்கு வருது “ மற்றும் எழில், லிங்குசாமி, பூபதிபாண்டியன், ஆர்.கண்ணன், பன்னீர்செல்வம் போன்ற பிரபல இயக்குனர்களின் படங்களிலும், தெலுங்கில் இயக்குனர் கிரண், இயக்குனர் பரத் ஆகியோரின் படங்களிலும் தற்போது நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள “ நேத்ரா “ படத்தில் நடன இயக்குனராக பணியாற்ற...
“கிளாப்போர்ட் புரொடக்ஷனி“ன்  “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “  பட  ஷூட்டிங் 45 நாட்களில் நிறைவு!

“கிளாப்போர்ட் புரொடக்ஷனி“ன் “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “ பட ஷூட்டிங் 45 நாட்களில் நிறைவு!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தரமான கதை களமும்,  சிறந்த பொழுது போக்கு அம்சங்களும் தான் ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஆணி வேர். அதை மிக துல்லியமாக உள் வாங்கி கொண்டு, தரமான திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார் 'கிளாப்போர்ட் புரொடக்ஷன்'நிறுவனத்தின் நிறுவனரும் - நடிகருமான வி சத்தியமூர்த்தி. இவரது தயாரிப்பில் தற்போது உருவாகி வரும்  'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது. வி சத்யமூர்த்தி தயாரித்து நடிக்கும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'  திரைப் படத்தை, அறிமுக இயக்குநர் - 'எருமசாணி' புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கி இருக்கிறார்.  'மெட்ராஸ் சென்ட்ரல்' புகழ் கோபி - சுதாகர், 'எரும சாணி' புகழ்  விஜய் - ஹரிஜா,  'புட் சட்னி' புகழ் அகஸ்டின்,  'டெம்பில் மங்கிஸ்' புகழ் ஷா ரா - அப்துல் மற்றும்  'BEHIND WOODS' புகழ் வி ஜே ஆஷிக்  ஆகியோர் மிக முக்கிய கதாபத்திரங்களில் ...