விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருக்கிறது.
இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்காக அரும்பாடுபட்ட விடுதலை புலிகள் இயக்கத்தினை உருவாக்கியவர் பிரபாகரன். இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கை அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இயக்குநர் வெங்கடேஷ் குமார் முன்வந்துள்ளார். இப்படத்தினை வெங்கடேஷ் தனது சொந்த நிறுவனமான ‘ஸ்டூடியோ 18’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவிருக்கிறார். இவர் ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட்மேன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
