துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ (AOT)
துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் 'ஏ ஒ டி' (AOT) – குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் அழகான திரைப்படமாக உருவாகியுள்ளது!
பன்முகத் திறமை கொண்ட நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், 'ஏஒ டி' (AOT) திரைப்படத்தின் மூலம் தனது அகில இந்திய அளவிலான ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்துகிறார்.
தனித்துவமான கதை சொல்லும் முறையாலும், வழக்கத்திற்கு மாறான திரைப்பட உருவாக்க அணுகுமுறையாலும் அறியப்படும் பவன் சாதினேனி இப்படத்தை இயக்கியுள்ளார். கீதா ஆர்ட்ஸ் (Geetha Arts ) மற்றும் ஸ்வப்னா சினிமா (Swapna Cinema ) வழங்கும் இப்படத்தை, லைட்பாக்ஸ் மீடியா (Lightbox Media) சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது பங்களிப்பு படத்திற்கு மேலும் நட்சத்திர அந்தஸ்தையும், ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எ...









