புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

விஜய் பர்த்டேவை முன்னிட்டு அடுத்த போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

விஜய் பர்த்டேவை முன்னிட்டு அடுத்த போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21-ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. நேற்று தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...
புதுப்பேட்டை 2-ஆ? ஆயிரத்தில் ஒருவன் 2-ஆ? செல்வராகவனின் அதிரடி பதில்!

புதுப்பேட்டை 2-ஆ? ஆயிரத்தில் ஒருவன் 2-ஆ? செல்வராகவனின் அதிரடி பதில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'என்.ஜி.கே.' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' படத்தை இயக்கி வருகிறார். இப்பொழுது இவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்ற புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய 2 திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் செல்வராகவன் புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் தொடங்கப்படும் என்றும் முதலில் புதுப்பேட்டை 2 திரைப்படம் தொடங்கப்படும், அதன்பின் ஆயிரத்தில் ஒருவன் 2 தயாராகும் என்றும் தெரிவித்துள்ளா...
வைரலாகும் டாடா படத்தின் பாடல்!

வைரலாகும் டாடா படத்தின் பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் கவின். நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயனாக மாறினார். இவர் தற்போது டாடா என்ற படத்தின் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடித்து வருகிறார். இப்படத்தை கணேஷ் பாபு இயக்கி வருகிறார். மேலும் ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்பட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் 'டாடா' படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மகனே என் கண்மணி என்ற இப்பாடலை சத்தியநாராயணன், ஜென் மார்ட்டின், மாரியம்மாள் மற்றும் பிரார்த்தனா ஸ்ரீராம் ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் தற்போது வைரலாகி வருகிறது.  ...
தமிழ் மொழியில் வெளியான தேசிய விருதுபெற்ற ஜல்லிக்கட்டு

தமிழ் மொழியில் வெளியான தேசிய விருதுபெற்ற ஜல்லிக்கட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  தேசிய விருதுபெற்ற ஜல்லிக்கட்டு படத்தை தமிழில் வெளியிட்ட AR என்டர்டைன்மெண்ட்ஸ் அமித் குமார் அகர்வால் !! மலையாளத்தின் பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு படம் கடந்த 2019 ம் ஆண்டு வெளியானது. கேரள அரசின் விருது பெற்ற இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது.சிறந்த ஒளிபதிவிற்காக இப்படம் தேசிய விருதினையும் வென்றுள்ளது . மேலும் ஆஸ்கர் விருத்திற்காகவும் தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்யப்பட்டது . இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சாபுமோன் அப்து சமது ,சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்காக ஒளிப்பதிவு செய்து தேசிய விருதினை பெற்றுத்தந்தார் . தீப்பு ஜோசப் இப்படத்திற்கு பின்னணி இசையை உருவாக்கியுள்ளார் . மாபெரும் வெற்றி மற்றும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் தமிழ் உரிமையை ...
நடன மாஸ்டர் சுவர்ணா இயக்கத்தில் “நாதிரு தின்னா”

நடன மாஸ்டர் சுவர்ணா இயக்கத்தில் “நாதிரு தின்னா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடன மாஸ்டர் சுவர்ணா இயக்கத்தில் "நாதிரு தின்னா" பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணத்திலும் , காதலித்து இணையும் திருமணத்திலும் நடைபெறும் குடும்ப சிக்கல்களை வைத்து இளமை ததும்ப நகைச்சுவையுடன் கூடிய ஒரு வித்தியாசமான படத்தை நடன மாஸ்டர் சுவர்ணா இயக்கி உள்ளார். இப்படத்திற்காக நான்கு மாநிலங்களில் நட்சத்திர தேர்வு நடத்தினார். இதில் தமிழகம், ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார். சபயாச்சி மிஸ்ரா, ஷ்யாம், மகி, ராகுல் நால்வருடன் ராதிகா ப்ரீத்தி, விஜயலட்சுமி, ஹரிகா, ரக்ஷா, அப்பாஜி ஆகியோருடன் தருண் மாஸ்டரும் நடித்துள்ளார். ஸ்ரீதர் நர்லா ஒளிப்பதிவு செய்ய வின்சென்ட் ஜெயராஜ், விஜயகுமார் இருவரின் பாடல்களுக்கு முரளீதர் ராகி இசையமைத்துள்ளார். நடன மாஸ்டராக 300க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சுவர்னா " நாதிரு தின்னா" ...
மாமனிதன் படத்தால் காயத்ரிக்கு தேசிய விருது கட்டாயம் என்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி!

மாமனிதன் படத்தால் காயத்ரிக்கு தேசிய விருது கட்டாயம் என்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  யுவன்சங்கர் ராஜாவின் YSR FILMS தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் மாமனிதன். இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். குடும்ப டிரமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. Studio 9 சார்பில் RK சுரேஷ் இப்படத்தை வெளியிடுகிறார். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் விநியோகஸ்தர், நடிகர் RK சுரேஷ் கூறியதாவது.. வாழ்வியலை பற்றி படமாக எடுக்கும் இயக்குனர்கள் குறைவாக உள்ளனர். அவர்களில் ஒருவர் சீனுராமசாமி. தர்மதுரையின் சாயலில் இல்லாமல் ஒரு புது அனுபவமாக இந்த படம் இருக்கும். இது எல்லோருடைய வாழ்கையிலும் அவர்கள் ரிலேட் செய்துகொள்ளும் படம...
திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையில் நனையும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையில் நனையும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
    ராணா டகுபதி, ஹன்சிகா மோத்வானி, எஸ். ஜே. சூர்யா ஆகியோர் வியந்து பாராட்டிய 'சுழல் தி வோர்டெக்ஸ்' சமூக வலைதளங்களில் சுழல் தி வோர்டெக்ஸ் தொடரை பாராட்டி. கொண்டாடும் திரையுலகப் பிரபலங்கள் ஜுன் 17 ஆம் தேதியான இன்று வெளியாகியிருக்கும் அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான சுழல் தி வோர்டெக்ஸ் எனும் வலைதளத் தொடரினை தென்னக நட்சத்திரமான ராணா டகுபதி, நடிகை ஹன்சிகா மோத்வானி, இயக்குநரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா ஆகியோர் கண்டு ரசித்து தங்களது விமர்சனத்தையும் எண்ணங்களையும் சமூக வலைதள பக்கத்தில் உற்சாகமான சுட்டுரைகளாக எழுதி ரசிகர்களுடனும், பார்வையாளர்களுடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ‘பாகுபலி’ புகழ் நடிகர் ராணா டகுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், '' சுழல் தி வோர்டெக்ஸ்= குழுவினருக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள். நீண்ட நாட்களுக்க...
‘எனக்கு மட்டும் ஏன் ஏன்’ இணையத்தை கலக்கும் பிரபுதேவா படத்தின் பாடல்!

‘எனக்கு மட்டும் ஏன் ஏன்’ இணையத்தை கலக்கும் பிரபுதேவா படத்தின் பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பிரபு தேவா ரேக்ளா, பொய்க்கால் குதிரை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து, இவர் நடித்துள்ள படம் 'மைடியர் பூதம்'. இயக்குனர் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரம்யா நம்பீசன், மாஸ்டர் அஸ்வந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரெடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதை அடுத்து 'மைடியர் பூதம்' திரைப்படத்தில் இருந்து 'எனக்கு மட்டும் ஏன் ஏன்' லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரபுதேவா பூதமாக நடித்துள்ளார். பிரபுதேவாவின் இந்த ...
“ஜெயிலர்” என்ற பெயரை அறிவித்த தலைவர் 169 படக்குழு!

“ஜெயிலர்” என்ற பெயரை அறிவித்த தலைவர் 169 படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் தலைவர் 169 படம் பற்றிய வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி விவாதமாக மாறியிருந்தது. இருந்தும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதன்படி தலைவர் 169 படத்திற்கு "ஜெயிலர்" என்று பெயிரடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ht...
தமிழ் சினிமாவின் மூத்த தலைவர்களுக்கு மலர் மரியாதை செய்த இயக்குனர் சீனு ராமசாமி!

தமிழ் சினிமாவின் மூத்த தலைவர்களுக்கு மலர் மரியாதை செய்த இயக்குனர் சீனு ராமசாமி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *தமிழ்நாட்டின் மூத்த தலைவர்களுக்கு மலர் மரியாதை செய்த இயக்குனர் சீனு ராமசாமி!* மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் நடித்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் முதன் முறையாக இளையராஜா & யுவன் சங்கர் ராஜா இசையில் சீனு ராமசாமி எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ”மாமனிதன்”. வரும் ஜூன் 24 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறார். இந்த தருணத்தில் தமிழக திரைத்துறையில் முன்னோடிகளாக மக்களால் இன்றும் நினைக்கப்படும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இயக்குனர் சீனுராமசாமி மலர் மரியாதை செய்தார். இதுபற்றி அவர் கூறும் போது "இந்த தமிழ் சினிமாவின் மாமனிதர்கள் எனக்குள் உண்டாக்கிய கலை உணர்வுக...