புதன்கிழமை, ஜூன் 10
Shadow

MOVIES

எனக்கு பேய்னா பயம் சொல்கிறார் மோகினி த்ரிஷா

எனக்கு பேய்னா பயம் சொல்கிறார் மோகினி த்ரிஷா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  மோகினி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் நாயகி த்ரிஷா , இயக்குனர் மாதேஷ் , தயாரிப்பாளர் லட்சுமன் , நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன் , கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இயக்குநர் மாதேஷ் பேசியது : இந்த படத்தை மிகபிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம். படத்தில் நாயகி த்ரிஷா சிறப்பாக நடித்துள்ளார். த்ரிஷா நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். இந்த படம் ஹாரர் படமாக இருந்தாலும் படத்தில் நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தை கவரும் வகையில் இருக்கும். இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது. படத்தில் எபி ஜெனெடிக்ஸ் என்ற கான்செப்ட் உள்ளது. டிஎன்ஏ தொடர்பு பற்றிய விஷயங்கள் தான் படத்தின் முக்கியமான விஷயம். இப்படத்தின் vfx க...
மதுரையில் பிரமாண்டமாக வெளியாகப் போகும் சிவகார்த்திகேயனின் சீமராஜா பாடல்..!

மதுரையில் பிரமாண்டமாக வெளியாகப் போகும் சிவகார்த்திகேயனின் சீமராஜா பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரையில் மிக பிரமாண்டமான முறையில் நடக்கும் சீமராஜா படத்தின் இசை வெளியீடு! ஒரு படத்தை மார்க்கெட்டிங் செய்யும்போது மிக முக்கியமான ஒரு விஷயம் படத்தை எப்படி மக்கள் முன் நிலைநிறுத்துகிறோம் என்பது தான். 24ஏஎம் ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா நவீன மார்க்கெட்டிங் மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு தயாரிப்பாளர். அவர் தனது திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார். அந்த வகையில் சமீபத்திய முயற்சியாக தங்களது பெருமைமிகு படைப்பான 'சீமராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துகிறார் ஆர் டி ராஜா. ஆகஸ்டு 3ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த இசை விழாவை மிகப்பெரிய வெற்றியாக மாற்ற மொத்த குழுவும் கடுமையாக உழைத்து வருகிறார்கள். https://bit.ly/2uMRH03 மதுரை தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம். இங்குள்ள ரசிகர்கள் சினிமாவுக்கு அளி...
யுவனின் இசையில் பேய்ப்பசி..!

யுவனின் இசையில் பேய்ப்பசி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேய்பசி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டனர். முழுக்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இது தான் என்று நினைக்கிறேன். இந்த படத்தின் முதுகெலும்பு யுவன் ஷங்கர் ராஜா தான். பின்னணி இசையை மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார்.  தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர், கதையை கூட கேட்கவில்லை. காஸ்ட்யூம் இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த படத்தில் லைவ் சவுண்ட் முயற்சி செய்திருக்கிறோம். வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன் என்றார் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவி...
காட்டில் துப்பாக்கியோடு போலீசில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா..!

காட்டில் துப்பாக்கியோடு போலீசில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படைமேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும் ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் 'கழுகு - 2' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தை சுற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடு உள்ளது. இந்த படத்தில் செந்நாய்களை கிருஷ்ணா வேட்டையாடும் காட்சி இடம் பெறுகிறது. ஆகாயத்தில் பறந்தவாறு செந்நாய்களை குறி தவறாமல் கிருஷ்ணா சுட வேண்டும். இதற்காக அடர்ந்த காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா ஒரிஜினல் துப்பாக்கியை வைத்து துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்து கொண்டார். தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் பீதியான ...
நடிகை தயாரிக்கும் “இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு”

நடிகை தயாரிக்கும் “இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
விமல் ஆஷ்னா சவேரி நடிக்கும்  " இவனுக்கு எங்கேயோமச்சம் இருக்கு "     AR.முகேஷ் இயக்குகிறார் விமல் ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கும் படத்திற்கு "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" என்று பெயரிட்டுள்ளனர்... இந்த படத்தை சாய் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக சர்மிளா மாண்ரே, R.சாவண்ட் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். சர்மிளா மாண்ரே கன்னட பட உலகின் பிரபல நடிகை. கன்னடத்தில் உள்ள பிரபல நடிகர்கள் அனைவருடனும் சுமார் 40படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தயாரிப்பாளரான சர்மிளா மாண்ரேவை முதன் முதலாக கதா நாயகியாக கன்னடத்தில் அறிமுகப்படுத்தியவர் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் இயக்குனர் AR முகேஷ். இப்போது சர்மிளா மாண்ரே முதன் முதலாக தயாரிக்கும் படத்தை இயக்கும் பொறுப்பை தன்னை நடிகையாக அறிமுகப் படுத்திய இயக்குனருக்கு...
ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக விஜய்சேதுபதியின் ஜூங்கா..!

ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக விஜய்சேதுபதியின் ஜூங்கா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’ இம்மாதம் 27 ஆம் தேதியன்று வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று ஜுங்கா படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் அருண் பாண்டியன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விஜய் சேதுபதி பேசுகையில்,‘இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு.அவருடைய எண்ண அலைகள் எப்போதும் என்னை வசீகரிக்கும். அதனை என்னால் எளிதில் உட்கிரகிக்க இயலும். இது தான் ஜுங்காவில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம். அதன் பிறகு தான் அருண் பாண்டியன் ...
ரசனையான கடைக்குட்டி சிங்கம் – விமர்சனம்

ரசனையான கடைக்குட்டி சிங்கம் – விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  பாளம்பாளமா பூமி வெடிச்சி காஞ்சிப்போயிருந்த பூமிமேல ஒரு லாரி தண்ணிய ஊத்தினா எப்படி இருக்கும்... ஊத்துன தண்ணிய பூமி உறுஞ்சும் பாருங்க... ஒரு வேகம்... அப்படி இருக்கு கார்த்தியோட கடைக்குட்டி சிங்கம் படம். ஹீரோயின் சதை மேல நம்பிக்கை வைக்காம குடும்ப செண்ட்டிமெண்ட் கதை மேல நம்பிக்கை வைச்சி ரத்தம் காட்டாம... வில்லனோட சத்தம் இல்லாம ஜாலியா படம் தொடங்கி முடியிறவரை வேல்ராஜின் கேமரா கண்ணுக்கு குளிர்ச்சியா பச்சை பசேல்னு வயல்... டிராக்டர்... கலகல கூட்டுக்குடும்பம் அதுல வர்ற மாமன் மச்சான் சண்டை என காட்டி ரொம்பவே ரசிக்க வைச்சிருக்கார் இயக்குனர் பாண்டியராஜ். என்னதான் பணம் காசு படிப்பு இருந்தாலும் விவசாயம் தான் தலைமுறையை காப்பாற்றும். விவசாயம் அழிந்தால் நாடே அழிந்து விடும். விவசாயம் வளர்ந்தால் நாடு சீக்கிரமே வல்லரசாக மாறிவிடும் என்கிற நெத்தியடி விஷயத்தை சரியான நேரத்தில் சொல்லியிருக்கிற...
மயில்சாமி மகன் யுவனின் “வாய்க்கா தகராறு”

மயில்சாமி மகன் யுவனின் “வாய்க்கா தகராறு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ராயல் சினி எண்டர்டைன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில்p.முருகவேல் தயாரிக்கும் படத்திற்கு " வாய்க்கா தகராறு என்று பெயரிட்டுள்ளனர்.. இந்த படத்தில் மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நாயகனாக நடிக்கிறார்.. இன்னொரு நாயகனாக விஜய்ராஜ் நடிக்கிறார்.. நாயகிகளாக வர்ஷிகா நாயகா,நைனா ஆகியோர் நடிக்கிறார்கள்.. மற்றும் பவர்ஸ்டார் சிங்கம்புலி மனோபாலா  போண்டாமணி கராத்தே ராஜா சுரேகா ரேவதி ஆகியோர் நடிக்கிறார்கள் திரைக்கதை அமைத்து இயக்குகிறார் சுரேஷ் கே வெங்கிடி. இவர் மலையாளத்தில் இயக்குனர் கே.மது ,சுதிசங்கர் போன்ற இயக்குனர்களிடமும், பேட்டன் போஸ் என்கிற கதாசிரியரிடமும் உதவியாளராக இருந்தவர் இவர் இயக்கும் முதல் படம் இது... படம் பற்றி இயக்குனர் சுரேஷ் கே வெங்கிடியிடம் கேட்டோம்.. என்று தணியும் என்ற படத்தில் நடித்திருந்த யுவன் மயில்சாமியையும் "யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை" பட...
வெங்கட்பிரபு அரசியலில் சிம்புவின் “மாநாடு”

வெங்கட்பிரபு அரசியலில் சிம்புவின் “மாநாடு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!! செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு அதிரடியில் இறங்கியுள்ளார் கோலிவுட்டின் மிகத் திறமையான நடிகர் சிம்பு... இன்றைய ஜல்லிக்கட்டின் வெற்றியை மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதன் தொடக்கம் சிம்புதான். முதல் ஆளாகத் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்து போராடத் தொடங்கிய தமிழன். ஆனால் நான்தான் தொடங்கினேன் என எங்கும் இதுவரை மார்தட்டிக் கொள்ளவில்லை. மக்கள் நன்மைகளை கணக்கில் கொண்டு மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுக்கும் நிஜ நாயகனாக மட்டுமே தமிழ் மக்கள் முன் நிற்கிறார் சிம்பு. தனது பழைய பாணிகளைத் தூக்கியெறிந்துவிட்டு கடுமையான உழைப்பு, சரியான கதைத் தேர்வு, நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்துகொள்வது என ஒரு புது சிம்பு தெம்பாக களமிறங்கியுள்ளார். அடுத்தடுத்த...
பிரபாகரன் மகன் படுகொலை  சினிமாவுக்கு தடை விதித்த இலங்கை..!

பிரபாகரன் மகன் படுகொலை சினிமாவுக்கு தடை விதித்த இலங்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
பாலச்சந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு தடை விதித்த இலங்கை! பாலசந்திரன், இசைப்பிரியா இருவரின் படுகொலையை மையமாக வைத்து ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட 'சாட்சிகள் சொர்க்கத்தில்' (Witness In Heaven) திரைப்படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட முழுநீள திரைப்படம் சாட்சிகள் சொர்க்கத்தில். இப்படத்தில் ஈழத்தில் நடந்த கொலை சம்பவங்களோ, சித்திரவதை காட்சிகளோ, இறுதிப்போரில் நடந்த சம்பவங்களோ சித்தரிக்கப்படவில்லை என்று ஏற்கெனவே கூறியிருந்தார் இப்படத்தின் இயக்குநர் ஈழன் இளங்கோ. இருப்பினும், இறுதிப்போரில் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் முகாம்களில் மற்றும் சமுதாயத்தில் வாழும் மக்களின் சோகக்கதைகள் மற்றும் சம்பவங்கள் இப்படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளது...