காலம் வெல்லுமா? காதல் வெல்லுமா? திரையில் விடை சொல்ல வருகிறது பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம்
பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமா கொண்டாடும் நாயகனாக உருவெடுத்திருக்கிறார் பிரபாஸ். வீரமும் சண்டைக்காட்சிகளும் நிறைந்த படங்களில் நடித்து அனைத்து இதயங்களையும் திருடிய பிரபாஸ், ஒரு அழகான காதல் கதையுடன் அதே இதயங்களை வருட வருகிறார்.
ராதாகிருஷ்ணாவின் இயக்கத்தில் பூஜா ஹெக்டேவுடன் ஜோடி சேர்ந்து யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் காதல் காவியம் ராதேஷ்யாம்.
காலமும் காதலும் முடிவே இல்லாத ஒரு போரில் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றன.
அந்தக் காலத்தைக் கணிக்கும் ஒரு கவிஞன் தன் கணிப்புக்குள் சிக்காத ஒரு காதலில் விழுந்தால், அவளது அழகில் மயங்கும்போது அவன் கணிப்புகள் பொய்யாகுமா? கனவு கலையும்பொழுது கணிப்பு மெய்யாகுமா? விடையில்லாத சில கேள்விகள் எப்போதும் இந்தக் காற்றில் சுற்றிக...
2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி.
அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
மு.க. தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதன்பிறகு அஜய் ஞானமுத்துவிற்கு நயன்தாராவை வைத்து ’இமைக்கா நொடிகள்’ என்ற படத்தை இயக்க வாய்ப்பு வந்தது. பிறகு விக்ரமின் கோப்ரா என பல படங்கள் கிடைத்தது.
அந்த அளவிற்கு இப்படம் அனைவரையும் கவர்ந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிட்டததட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அற...
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதன் பட வேலைகளை 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கினர். வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.
படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில பிரச்சினைகளால் தள்ளிப்போனது. பின்னர் 2020-ல் வெளியாகும் என்று எதிர்பார்த்து அப்போதும் வரவில்லை.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் முடங்கியது.
இந்நிலையில் படத்தின் பணிகளை கௌதம் மேனன் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக விக்ரம் அவருடைய டப்பிங் பணிகளை கொடுத்து வருவதாவும் தெரிகிறது.
இதன...
2018-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து ’டாக்டர்’ படத்தை இயக்கினார். இதன்மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
தற்போது ரஜினியின் 169-வது படத்தை இயக்க நெல்சன் ஒப்பந்தமாகியுள்ளார்.
நெல்சன் திலிப்குமார் முதன் முதலில் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார்.
சில மாதங்கள் படப்பிடிப்பு நடைப்பெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் தடைப்பட்டு வெளியாகாமல் போனது. அன்றைய பொழுது அப்படத்தில் இடம்பெற்ற சிம்புவின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
இன்றளவும் சிம்பு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில...
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் மாஸ்டர். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், நாசர், சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான அரபிக் குத்து பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படத்தைத் தொடர்ந்து 'தோழா' படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்.
வம்சி இயக்கும் படத்தின் பணிகள் தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்கள் விஜய்யின் அடுத்த படம் குறித்து முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர்...
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
புவனா சுந்தர் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தனுசுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டரில் நடிகர் தனுசும் இயக்குனர் செல்வராகவனும் இடம்பெற்றுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதற்கு முன்பு செல்வரகாவன்...
மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த ‘தியான்’ படத்தின் இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கும் தமிழ் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி – ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஆர்.ஜேவாக இருந்து நகைச்சுவை நடிகராக உயர்ந்த ஆர்.ஜே. பாலாஜி தற்போது, தனக்கேற்ற கதைகளை தேர்வு செய்து நாயகனாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் அவர் நடித்த ‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன.
இதையடுத்து ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். அந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மலையாள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் தமிழில் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார். அதேபோல் ஆர்.ஜே பாலாஜி ஜோடிக்கான நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது....
’மாநாடு’ படத்தின் 100-வது நாளையொட்டி நடிகர் சிம்பு உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் ’மாநாடு’ கடந்த ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகி தொடர்ந்து பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
குறிப்பாக, திரைக்கதைக்காக பலரும் வெங்கட் பிரபுவை கொண்டாடுகிறார்கள்.
சிம்புவுடன் எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்த‘மாநாடு’ வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.50 கோடி ரூபாய் வசூல் சாதனையையும் செய்தது. வெற்றியின் உற்சாகத்தில் ‘மாநாடு 2’ எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார் வெங்கட் பிரபு.
இந்த நிலையில், ‘மாநாடு’ வெளியாகி 100 நாள் ஆவதையொட்டி சிம்பு உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே, இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘மாநாடு’ படத்தின் 100 வது நாள் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தமிழகம் முழுக்க போஸ்டர் ஒட்டியு...