முழுதும் வெளி நாட்டில் ஹாலிவுட் கலைஞர்களோடு மாதவனை இயக்கும் சற்குணம்..!
முழுதும் வெளி நாட்டில் ஹாலிவுட் கலைஞர்களோடு மாதவனை இயக்கும் சற்குணம்..!
சற்குணம் இயக்கத்தில் மாதவன் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு முழுக்க காடுகள் சார்ந்த பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது.
'விக்ரம் வேதா' படத்தைத் தொடர்ந்து 'மகளிர் மட்டும்' படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்தார் மாதவன். தமிழில் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தாலும், எதிலுமே ஒப்பந்தமாகாமல் இருந்தார்.
நீண்ட நாட்களாக சற்குணம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். தற்போது மாதவன் அப்படத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.
முழுக்க வெளிநாடுகளிலும், அடர்ந்த காடுகளுக்குள்ளும் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள். கணேஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தை இயக்குவது மட்டுமன்றி, இணை தயாரிப்பாளராகவும் சற்குணம் பொறுப்பேற்கிறார்.
மாதவனை இயக்கவிருப்பது குறித்து சற்குணம் கூறியிருப்பதாவ...









