புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

பாண்டியர்களின் வரலாற்றை மையமாக கொண்ட ‘கொற்றவை’ கதையல்ல, 2 ஆயிரம் வருட நம்பிக்கை- சி.வி.குமார்

பாண்டியர்களின் வரலாற்றை மையமாக கொண்ட ‘கொற்றவை’ கதையல்ல, 2 ஆயிரம் வருட நம்பிக்கை- சி.வி.குமார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  வரலாற்று பின்னணியில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே எப்போதும் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் சி வி  குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொற்றவை: தி லெகசி’ படத்தின் டீஸர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.   ‘இது கதையல்ல, 2 ஆயிரம் வருட நம்பிக்கை’ என்று டீசரில் இடம் பெற்ற வசனம் படத்திற்கான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.   யுபிஎஸ்சி பயிற்சியாளராக இருக்கும் வடிவு, ஒரு கட்டத்தில் புதையல் ஒன்றை தேட ஆரம்பிக்கிறார் . இந்தப் பயணத்தின் போது பல சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. வடிவு ஏன் இந்த புதையல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார், அவருக்கும் புதையலுக்கும் என்ன தொடர்பு என்பதே கொற்றவை படத்தின் சாராம்சம்.   இந்த திரைப்படம் பாண்டியர்களின் வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என்று சி வி குமார் கூறுகிறார்.   படத்தை பற...
நெற்றிக்கண் வெளியாகி சில நிமிடங்களில் நயன்தாராவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

நெற்றிக்கண் வெளியாகி சில நிமிடங்களில் நயன்தாராவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நெற்றிக்கண் வெளியாகி சில நிமிடங்களில் நயன்தாராவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி! ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் ஏற்கனவே தியேட்டர்களில் வெளியான உடனேயே திருட்டு இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தின. இதனை தடுக்க தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடை விதித்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் பயன் இல்லை. கொரோனா காரணமாக தற்போது ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் படங்களையும் எடுத்து திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுகிறார்கள். ஓ.டி.டி.யில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை ஏற்கனவே திருட்டு இணையதளத்தில் வெளியிட்டனர். தற்போது நயன்தாரா பார்வையற்றவராக நடித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியான நெற்றிக்கண் படத்தையும் ஹெச்.டி. தரத்தில் திருட்டு இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இதனால் நயன்தாரா உள்ளிட்ட படக...
கதிர், நரேன், நட்டி இணைந்து மிரட்டும் யூகி!

கதிர், நரேன், நட்டி இணைந்து மிரட்டும் யூகி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கதிர், நரேன், நட்டி இணைந்து மிரட்டும் யூகி! அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் புதிய படம் 'யூகி'. இப்படத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். தென்னிந்திய நடசத்திர நடிகர்களான, பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பன்மொழிகளில் தயாராகும் இப்படம் கோவிட் பொது முடக்க காலத்தில், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் முறையாக கடைப்பிடித்து, சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படமாக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது....
சூர்யாவை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

சூர்யாவை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சூர்யாவை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல நடிகை! சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இப்படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இதில் இவருடைய நடிப்பு பலருடைய கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், சூர்யாவை தொடர்ந்து, கார்த்திக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
பாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘ஒத்த செருப்பு’ – ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?!

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘ஒத்த செருப்பு’ – ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘ஒத்த செருப்பு’ - ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?! நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு ஆகிய விருதுகளையும் வென்றது. ஆஸ்காருக்கும் சென்று வந்தது. ஒத்த செருப்பு படத்தை, இந்தி, ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய முடிவு செய்து இருப்பதாகவும், இந்தி பதிப்பில் நடிக்க அபிஷேக் பச்சனிடம் பேசி வருவதாகவும் பார்த்திபன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் நடிக்க அபிஷேக் பச்சன் இந்த படத்தில் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒத்த செருப்பு இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. பார்த்திபன் கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். இப்படத்தை பார்த்திபன் இயக்கு...
மீண்டும் இயக்குனர் பாலாவுடன் கூட்டணி அமைக்கும் சூர்யா!

மீண்டும் இயக்குனர் பாலாவுடன் கூட்டணி அமைக்கும் சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் இயக்குனர் பாலாவுடன் கூட்டணி அமைக்கும் சூர்யா! நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவரை அவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது சூர்யா தயாரிப்பில் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’, ‘உடன்பிறப்பே’, ‘ஜெய் பீம்’, ‘ஓ மை டாக்’ ஆகிய 4 படங்கள் உருவாகி உள்ளன. இந்த 4 படங்களும் விரைவில் ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக தயாரிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இயக்குனர் பாலா இயக்க உள்ள படத்தை சூர்யா தயாரிக்க உள்ளாராம். இப்படத்தில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிக...
ராதிகா சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழுவினர்!

ராதிகா சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழுவினர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ராதிகா சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழுவினர்! பிரபல நடிகையாக இருக்கும் ராதிகா சரத்குமார், சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 43 வருடங்கள் நிறைவடைகிறது. 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியான 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ராதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களிலும், தமிழில் பல டிவி தொடர்களிலும் நடிகை ராதிகா நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் படத்தில் ராதிகா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராதிகாவின் 43 வருடம் நிறைவை ஒட்டி படக்குழு சார்பில் பெரிய கேக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் படப்பிடிப்பு இடைவேளையில் சர்ப்ரைசாக பாட்டு பாடி உற்சாகமாக கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடி இருக்கிறார்கள். இதையடுத்...
மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா!

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா! நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகப்பு நிற கோர்ட் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, கோடு ரெட் (code RED) என குறிப்பிட்டுள்ளார். விக்ரம் படத்தின் பர்ஸ்ட் ...
நவரசாவின் ‘புராஜெக்ட் அக்னி’ முழுநீள படமாகிறதா? – கார்த்திக் நரேன் சூசக பதில்!!

நவரசாவின் ‘புராஜெக்ட் அக்னி’ முழுநீள படமாகிறதா? – கார்த்திக் நரேன் சூசக பதில்!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நவரசாவின் ‘புராஜெக்ட் அக்னி’ முழுநீள படமாகிறதா? - கார்த்திக் நரேன் சூசக பதில்! துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசூரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் கார்த்திக் நரேன். இவர் சமீபத்தில் வெளியான நவரசா ஆந்தாலஜியில் ‘புராஜெக்ட் அக்னி’ என்கிற குறும்படத்தை இயக்கி இருந்தார். அரவிந்த்சாமி, பிரசன்னா, பூர்ணா நடிப்பில் வெளியாகி இருந்த இந்த குறும்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஹாலிவுட் பட ரேஞ்சில் இருந்ததாக பாராட்டுக்களும் கிடைத்தன. இப்படத்தை முழு நீள படமாக எடுக்குமாறு ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக கார்த்திக் நரேனுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், “புராஜெக்ட் அக்னிக்கு மாபெரும் வரவேற்பை அளித்த ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. விஷ்ணு, கிருஷ்ணா, கல்கி ஆகியோரின் பயணம் இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கார்த்திக் நரேன்....
‘சார்பட்டா பரம்பரை’ ரங்கன் வாத்தியாரை மீம் போட்டு கலாய்த்த சந்தோஷ் நாராயணன்!

‘சார்பட்டா பரம்பரை’ ரங்கன் வாத்தியாரை மீம் போட்டு கலாய்த்த சந்தோஷ் நாராயணன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘சார்பட்டா பரம்பரை’ ரங்கன் வாத்தியாரை மீம் போட்டு கலாய்த்த சந்தோஷ் நாராயணன்! பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. தற்போது, சார்பட்டா பரம்பரை பட காட்சிகளை வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக இதில் ரங்கன் வாத்தியாராக நடித்துள்ள பசுபதியும், கபிலனாக நடித்துள்ள ஆர்யாவும் சைக்கிளில் போகும் காட்சியை அடிப்படையாக கொண்டு ஏராளமான மீம்ஸ் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சார்பட்டா பரம்பரை படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனும் தன் பங்கிற்கு ரங்கன் வாத்தியாரை மீம் போட்டு கலாய்த்து உள்ளார். அவர் தன் மனைவியுடன் சைக்கிளில் ...