புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

வலிமை படத்தில் இருந்து வெளியேறிய நடிகர்கள்!

வலிமை படத்தில் இருந்து வெளியேறிய நடிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வலிமை படத்தில் இருந்து வெளியேறிய நடிகர்கள்! எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதுவரை ’வலிமை’ படத்தின் எந்த அப்டேட்டும் படக்குழுவினர் வெளியிடவில்லை. ஆனால், இப்படம் குறித்து ஏதாவது செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் இயக்குனர் எச்.வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த ஆண்டு ’வலிமை’ படத்திற்காக ஒரு சில காட்சிகளை சீனியர் நடிகர்களை வைத்து படமாக்கினோம்., அதன் தொடர்ச்சியாக அந்த நடிகர்களை படப்பிடிப்பிற்கு அழைத்த போது அவர்கள் கொரோனா தொற்று பயம் காரணமாக படப்பிடிப்பிற்கு வர முடியாது என்று கூறிவிட்டனர். அவர்களுக்கு பதிலாக புதிய நடிகர்களை வைத்து தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.  ...
பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் இணையும் ராஷி கண்ணா!

பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் இணையும் ராஷி கண்ணா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் இணையும் ராஷி கண்ணா! தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுக்கு ஜோடியாக அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் ராஷி கண்ணா, சுந்தர் சி-யின் அரண்மனை 3, விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், ஜீவாவுக்கு ஜோடியாக மேதாவி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ராஷி கண்ணா. இந்நிலையில், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள படத்தில் நடிகை ராஷி கண்ணாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே ...
நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் பிரபுதேவாவின் படம்!

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் பிரபுதேவாவின் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் பிரபுதேவாவின் படம்! பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள இப்படம், விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாம். இதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி உள்ளது. சமீபத்தில் பிர...
நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சமுத்திரகனி படம்!

நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சமுத்திரகனி படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சமுத்திரகனி படம்! தனுஷின் ‘திருடா திருடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுப்ரமணியம்சிவா. அதன்பின் பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கிய அவர், வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் சமுத்திரகனியை வைத்து இவர் இயக்கியிருக்கும் படம் ‘வெள்ளை யானை’. நடிகை ஆத்மியா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து, திரையரங்க வெளியீட்டிற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தது படக்குழு. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக முன்னணி தொலைக்காட்...
இந்தி ரீமேக்கில் மாஸ்டர் வாத்தியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

இந்தி ரீமேக்கில் மாஸ்டர் வாத்தியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்தி ரீமேக்கில் மாஸ்டர் வாத்தியாக நடிக்கப்போவது யார் தெரியுமா? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த படம் ‘மாஸ்டர்’. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியான இப்படம், மாபெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரிக் குவித்தது. இந்த ஆண்டில் திரையரங்கில் வெளியாகி அதிக வசூல் குவித்த படமும் மாஸ்டர் தான். மாஸ்டர் படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், மாஸ்டர் இந்தி ரீமேக்கில் விஜய்யின் ஜேடி (வாத்தி) கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாம். அடுத்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல...
அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்!

அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்! இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இந்திப் படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனர் அட்லீ, தனது மனைவி பிரியாவுடன் இணைந்து பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர்கள் தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர், இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லீயுடன் ராஜா ராணி படத்தில் ...
சீதையாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகை!

சீதையாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சீதையாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகை! பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திர புராண படங்கள் அதிகம் தயாராகின்றன. மலையாளத்தில் ‘அரபிக் கடலின்டே சிம்ஹம்’ எனும் சரித்திர படத்தில் மோகன்லால் நடித்துள்ளார். தெலுங்கில் ராமாயண கதை ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் படமாகிறது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர். ரூ.500 கோடி செலவில் இப்படம் தயாராகிறது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இந்நிலையில், இந்தியிலும் ராமாயண கதை ‘சீதா’ என்ற பெயரில் படமாகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் சீதையாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். கதை கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள ...
சமந்தாவை தொடர்ந்து பாலிவுட்டில் அறிமுகமாகும் நாகசைதன்யா!

சமந்தாவை தொடர்ந்து பாலிவுட்டில் அறிமுகமாகும் நாகசைதன்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சமந்தாவை தொடர்ந்து பாலிவுட்டில் அறிமுகமாகும் நாகசைதன்யா! ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’. இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ‘லால் சிங் சட்டா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அமீர் கான் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். மேலும் இதில் அமீர் கானின் நண்பராக நடிக்க ஒப்பந்தமான விஜய் சேதுபதி, பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அப்படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில், விஜய் சேதுபதிக்கு பதிலாக அக்கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யா ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தில் அமீர்கான், நாகசைதன்யா இருவருமே ராணுவ வீரர்களாக நடிக்க உள்ளார்கள். கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை, ஜூலை மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள். நடிகர் நாகசைதன்யா நடிக்கும் ...
‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்த தனுஷ்… விரைவில் சென்னை திரும்புகிறார்!

‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்த தனுஷ்… விரைவில் சென்னை திரும்புகிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்த தனுஷ்... விரைவில் சென்னை திரும்புகிறார்! ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘தி கிரே மேன்’. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர். இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். ‘தி கிரே மேன்’ படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்ற நடிகர் தனுஷ், அங்கு ஒரு மாதம் சண்டை பயிற்சி பெற்று, பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த இப்...
ஜகமே தந்திரம் படத்தில் இந்த 2 பாடல்கள் இடம்பெறாது – இயக்குனரின் அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்!

ஜகமே தந்திரம் படத்தில் இந்த 2 பாடல்கள் இடம்பெறாது – இயக்குனரின் அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜகமே தந்திரம் படத்தில் இந்த 2 பாடல்கள் இடம்பெறாது - இயக்குனரின் அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்! பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘புஜ்ஜி’ மற்றும் ‘நேத்து’ ஆகிய இரண்டு பாடல்களும் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெறாது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். படத்தின் மொழிமாற்றம் கருதி இந்த இரு பாடல்களை நீக்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார். மாபெரும் வரவேற்பை பெ...