வெள்ளிக்கிழமை, ஜூன் 5
Shadow

MOVIES

நாகேஷ் பேரன் நடிக்கும் ஸ்கூல் கேம்பஸ்

நாகேஷ் பேரன் நடிக்கும் ஸ்கூல் கேம்பஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    DR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் " AMN குளோபல் குரூப் குழுவானது, AMN FINE ARTS  என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி "ஸ்கூல் கேம்பஸ்" என்ற திரைப்படத்தினை தயாரித்து வருகிறது. ஏ.எம்.என் குளோபல் குரூப் மேனேஜிங் டைரக்டர் DR . R .J ராமநாராயணா இந்த படத்தினை இயக்கி , தயாரிப்பது மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். இந்த படத்தின் முதல் நாள்  படப்பிடிப்பு  ஸ்ரீ சந்தோஷ் குமார் மால் IAS (மாவட்ட ஆட்சியர் )அவர்களால் டெல்லி கேந்திரிய வித்யாலயா வளாகத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. இந்தியக் கல்வியின் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சொல்லும் கதையாக இப்படம் அமைந்துள்ளது. பழம்பெரும் நடிகர் நாகேஷ் அவர்களின் பேரனும், சிறந்த நடிகர் மற்றும் நடன கலைஞரான ஆனந்த் பாபு   அவர்களின் மகனான  கஜேஷ் நாகேஷ் ஹீரோவாக நடிக்கிறார். ...
ஆந்திராமெஸ் மூலம் புதுவில்லன் ஆக தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் ஓவியர் ஸ்ரீதர்..!

ஆந்திராமெஸ் மூலம் புதுவில்லன் ஆக தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் ஓவியர் ஸ்ரீதர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
என் படத்தை எப்படிக் கிழித்தாலும் ஏற்றுக்கொள்வேன். - ஜெய் அதிரடி நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது என்று கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், ஆந்திரா மெஸ் பட இயக்குநர் ஜெய். சினிமாவிற்கு இதுவரை பரீட்சயமில்லாத கோணத்தில்  கதை சொல்லப்பட்டிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்”. நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி.. இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், பிரபல விளம்பரப் பட இயக்குநர் ஜெய். “ஷோ போட் ஸ்டுடியோஸ்” சார்பில் நிர்மல் கே.பாலா தயாரித்திருக்கும் இப்படத்தின் கதாநாயகனாக “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “ரிச்சி” போன்ற படங்களில் நடித்த ராஜ் பரத், கதாநாயகிகளாக தேஜஸ்வினி,...
28ம் தேதி வெளியாகும் தனுஷின்  வடசென்னை டிரைலர்..!

28ம் தேதி வெளியாகும் தனுஷின் வடசென்னை டிரைலர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தனுஷ் நடித்துள்ள " வட சென்னை " படத்தின்  ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் 'வட சென்னை'. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் பிறகு முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாகத்தின் ட்ரைலர் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதன் பிறகு இந்த படத்தின் முதல் பாகத்தினை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது. சென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார்.தனுஷ்- வெற்றிமாறன்   இந்த கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம் படங்கள...
சினிமாவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது எது..? விஜய்சேதுபதி சொன்ன ரகசியம்

சினிமாவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது எது..? விஜய்சேதுபதி சொன்ன ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று ஜுங்கா படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது நடிகரும், தயாரிப்பாளருமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார். விஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி, ஏ எம் ரத்னம், நந்தகோபால், கதிரேசன், டி. சிவா, காரகட்ட பிரசாத், சி வி குமார், கருணாமூர்த்தி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, அறிவழகன், சாய் ரமணி,பிரேம், பாலாஜி தரணிதரன், ஜனநாதன், விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்ரமணியன், அருள்பதி, நடிகர்கள் நாசர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை சயீஷா, நடிகை சர...
மீண்டும் ஹாரர் படத்தில் நயன்தாரா 63…!

மீண்டும் ஹாரர் படத்தில் நயன்தாரா 63…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக உருவாகி உள்ள  நயன்தாரா, கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் மூன்றாவது தயாரிப்பில் மிகவும் தனித்துவமான, சவாலான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். பொதுவாக நடிகைகள் தங்களுடைய நட்சத்திர அந்தஸ்தை ஒரு சில ஆண்டுகள் தக்க வைத்துக் கொள்ளவே போராடும் இந்த காலத்தில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நடிகையாக இருந்து வருகிறார் நயன்தாரா. மக்கள் மனதையும், விமர்சகர்களையும் ஒரு சேர வென்று இருக்கிறார். 2017ல் அவர் நடித்த அறம் பல்வேறு பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுத் தந்திருக்கிறது. #Nayan63 அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் சமூக வலைத்தளங்கள் முழுக்க இதை பற்றிய ட்வீட், ஷேர், கமெண்ட்ஸ் என பரவி இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் சாதனை படைத்தது. இதுவே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவருடைய இடத்தை உணர்த்தியது. தயாரிப்பாளர் கோட்டபாடி ஜெ ராஜேஷ், நயன்தாரா இணைந்து கொடு...
தொடர்ந்து 60 மணி நேரம் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட கார்த்திக்

தொடர்ந்து 60 மணி நேரம் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட கார்த்திக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பீச்சாங்கை வெற்றியை தொடர்ந்து நடிகர் பீச்சாங்கை கார்த்திக் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். அவர் நடிக்கும் படத்திற்கு. ஷூட்டிங் ஸ்பாட்க்கு சரியான நேரத்திற்கு வராத சில நடிகர்கள் மத்தியில் நடிகர் பீச்சாங்கை கார்த்திக் படப்பிடிப்பு தளத்திலேயே மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறாராம். புதிய இயக்குனர் மிலன் இயக்கும் கமர்ச்சியல் படத்தில் அதிகாலை 6 மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பித்து இரவு 3 மணி வரைக்கும் படப்பிடிப்பு நடைபெற்றது , அதைத்தொடர்ந்து திருவள்ளூர் சென்று  விளம்பர படம் ஓன்றில் இன்று அதிகாலை 6:30 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவடைகிறது. அங்கிருந்து புறப்பட்டு  நேசன் மற்றும் சிம்புதேவன் போன்ற பெரிய இயக்குனருடன் உதவி இயக்குனராக பனி புரிந்த  டீ.ஆர்.பாலா டுவீலர் பந்தயத்தை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு மறுநாள்  அதிகால...
காரைக்காலில் பூஜையுடன் தொடங்கிய ஜீவாவின் ஜிப்சி..!

காரைக்காலில் பூஜையுடன் தொடங்கிய ஜீவாவின் ஜிப்சி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், முன்னோட்டம்
  காரைக்காலில் தொடங்கிய ‘ஜிப்ஸி’யின் பயணம் ராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது. ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில்  S.அம்பேத்குமார் தயாரிக்கும் படம்‘ஜிப்ஸி ’. இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன். குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் ‘ஜிப்ஸி ’படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது. இதில் ஜீவா, இமாசல பிரதேச அழகி நடாசா சிங் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இதன் முதற்கட்ட படபிடிப்பு காரைக்காலில் இன்று தொடங்கியது. இதில் படக்குழுவினருடன் பாடலாசிரியர் யுகபாரதி கலந்து கொண்டார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ் கே செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத...
மீண்டும் யானையை வைத்து “கும்கி2” எடுக்கும் பிரபு சாலமன்

மீண்டும் யானையை வைத்து “கும்கி2” எடுக்கும் பிரபு சாலமன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  2012 ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பிரபு சாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில், விக்ரம் பிரபு –லஷ்மிமேனன் புதுமுகங்களாக அறிமுகமான “ கும்கி “ படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.   ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும்“ கும்கி 2  “ படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவுற்றது, மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. நிறைய படங்களில் முதல் பாகத்தின் கதை தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால் கும்கி படத்திற்கும்,  கும்கி 2 படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை. யானை சம்மந்தப் பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொடவேண்டி இருக்கிறது என்கிறார் பிரபுசாலமன்.   நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னு...
முதல் பாகத்தை விட 2ம் பாகம் விறுவிறுப்பாக இருக்கும் – கோலிசோடா இயக்குனர் தகவல்

முதல் பாகத்தை விட 2ம் பாகம் விறுவிறுப்பாக இருக்கும் – கோலிசோடா இயக்குனர் தகவல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோலி சோடா 2. சமுத்திரகனி, பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. எடிட்டிங், ஸ்டண்ட் பெரிய அளவில் பேசப்பட்ட படம் கோலி சோடா. கடுகு படத்தில் ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தது. கோலி சோடா 2 படத்துக்கு முழு எடிட்டிங் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்றார் எடிட்டர் தீபக். அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள், நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் வேலை பார்த்தது எங்கள் கேரியரில் உதவும். இது ஒரு டீம் ஒர்க் என்றார் பரத் சீனி. சமுத்திரகனி சார் படப்பிடிப்பில் மிகவும் ஆதரவாக இருந்தார். விஜய் மில்டன் சார், படப்பிடிப்பில் தான் வசனங்களையே கொடுப்ப...
சத்யா நடிப்பில் என்னோடு நீ இருந்தால்…!

சத்யா நடிப்பில் என்னோடு நீ இருந்தால்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படத்திற்கு “ என்னோடு நீ இருந்தால் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகினி,அஜய்ரத்னம், வையாபுரி,பிளாக்பாண்டி, அழகு,மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் இயக்குனர் மு.ரா.சத்யாவிடம் படம் பற்றி கேட்ட போது.. லவ் மற்றும் ரொமாண்டிக் திரில்லராக படம் உருவாகி உள்ளது . யாரிடமும் உதவியாளராக பணி புரியவில்லை, படங்களை பார்த்தது, புத்தகங்கள் எழுதும் அனுபவத்தை வைத்தே இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். இந்த படம் வெளிவந்த பிறகு பார்த்த அனைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் அனைவரும் இந்த சமூதாயத்தால் ஒரு முக்கியமான விஷயத்தால் நமக்கு தெரியாமலே பாதிக்கப்பட்டு வருகிறோம். அந்த பாதிப்பு என்ன...