செவ்வாய்க்கிழமை, நவம்பர் 10
Shadow

MOVIES

புனித் ராஜ்குமாரின் கடைசி படம்!

புனித் ராஜ்குமாரின் கடைசி படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் ஆவார். இவர் கடந்த ஆண்டு(2021) அக்டோபர் 29-ந்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினர், ரசிகர்கள் என ஒட்டு மொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. முன்னதாக புனித் ராஜ்குமார் ஜேம்ஸ் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் தான் மரணம் அடைந்தார். இந்நிலையில், புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்' படம் பல திரையரங்குகளில் அவருடைய பிறந்தநாளான இன்று 17-ஆம் தேதி வெளியாகி உள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கண்ணீர் மல்க கொண்டாடி வருகின்றனர். அதேபோல் இவரின் பிறந்தநாளை ரசிகர்கள், திரைதுறையினர் என பலரும் புனித் ராஜ்குமாரை நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்....
“நீண்ட காலமாக எனக்குள் இருந்த உதவி இயக்குனர் கனவை வாடிவாசல் திறந்துவிட்டுள்ளது”-கருணாஸ்!

“நீண்ட காலமாக எனக்குள் இருந்த உதவி இயக்குனர் கனவை வாடிவாசல் திறந்துவிட்டுள்ளது”-கருணாஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லொடுக்கு பாண்டி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நகைச்சுவை நடிகராக அறியப்பட்டவர் கருணாஸ். அதன்பின் வில்லன், காதல் அழிவதில்லை, திருடா திருடி, பிதாமகன் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். பிறகு கதாநாயகனாகவும் பாடகராகவும் தீவிரமாக அரசியல்வாதியாகவும் பயணித்து வந்தார். இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கி சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் 'வாடிவாசல்' படத்தில் கருணாஸ் உதவி இயக்குனராக பணியாற்றவுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் கருணாஸ், "கிராமிய கானா பாடகராக கலை வாழ்வை தொடங்கிய எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது திரைத்துறைத்தான். தாய்மடியான தமிழ் சினிமாவில் முழுநேரமும் பயணிக்க முடிவெடுத்து உள்ளேன். ஆற்றல்மிகு இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்ற இருக்கிறேன். என்னை இணைத்துக்கொண்ட வெற்றிமாறனுக்கு நன்றி. கடைசிவரை கற்றுக்கொள்வது தான் சி...
தொடர் சாதனை படைக்கும் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”!

தொடர் சாதனை படைக்கும் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி இயக்கத்தில் பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. 80-களின் பிற்பகுதியிலும் 90-களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதைக்களமாக கொண்டு தயாராகியிருந்த இந்த திரைப்படம் கடந்த 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படம் நாடு முழுவதும் பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு அரியானா, மத்திய பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரிச்சலுகை வழங்கியுள்ளது. பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலவேறு பாஜக தலைவர்கள் இந்த திரைப்படத்தை வெகுவாக பாராட்டி உள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகிய ...
சந்தானத்துடன் இணைந்த மாஸ்டர் பிரபலம்!

சந்தானத்துடன் இணைந்த மாஸ்டர் பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம். இவர் நடிப்பில் டிக்கிலோனா மற்றும் சபாபதி ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை மனோஜ் பீதா இயக்கி வருகிறார். இந்நிலையில் சந்தானம் அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய எம்.ரத்னகுமார் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'குலுகுலு'  என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ராஜ் நாராயணன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். குலுகுலு படத...
ஜாலியோ ஜிம்கானா.. வைரலாகும் விஜய்யின் குரல்!

ஜாலியோ ஜிம்கானா.. வைரலாகும் விஜய்யின் குரல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரில் ஒருவராக திகழும் விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி உள்ள 'பீஸ்ட்' திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கின. 'பீஸ்ட்' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள பாடலான “ஜாலியோ ஜிம்கானா” வரும் 19ஆம் தேதி (சனிக்கிழமை) வ...
தமிழ் சினிமாவில் நான் பார்த்த படங்களிலேயே மிகவும் அறிவுப்பூர்வமான படம்தான் ‘குதிரைவால்’ – இயக்குநர் மிஷ்கின் பாராட்டு

தமிழ் சினிமாவில் நான் பார்த்த படங்களிலேயே மிகவும் அறிவுப்பூர்வமான படம்தான் ‘குதிரைவால்’ – இயக்குநர் மிஷ்கின் பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவில் நான் இதுவரை பார்த்த திரைப்படங்களிலேயே மிகவும் அறிவுப்பூர்வமான திரைப்படம் ‘குதிரைவால்’ - இயக்குநர் மிஷ்கின் பாராட்டு இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. கலையரசன், அஞ்சலி பாட்டீல் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். எழுத்தாளர் ராஜேஷ்குமார் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்றிருக்கும் நிலையில், நாளை (மார்ச் 18) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை வெளியிட பல ஒடிடி நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், திரையரங்கில் மட்டுமே இப்படத்தை வெளியிடுவேன், என்பதில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் வி...
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பரியேறும் பெருமாள், கர்ணன் படப் புகழ் இயக்குனர் மாரி செல்வராஜ்  தனது அடுத்த படமான மாமன்னன் எனும் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் பகத் பாசில், நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்  இசையமைக்க இருக்கிறார்.  இது ஒரு அரசியல் திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சேலம் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதில் உதயநிதி ஸ்டாலின் சேலம் அண்ணா பூங்கா அருகே புல்லட்டில் செல்லும் காட்சி பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வேகமாகப் பரவி வருகிறது....
பயணி முதல் சிங்கிள்….அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

பயணி முதல் சிங்கிள்….அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இயக்குனர் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார். ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி ஐஸ்வர்யா தனது மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர் தொடங்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் இ...
அஜித்துடன் இணையும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா!

அஜித்துடன் இணையும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை மீண்டும் எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் மோகன் லால் அல்லது நாகார்ஜூனா இருவரில் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், இவர்களுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அஜித்குமார் அவர்களின் 62-வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'காதுவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கி முடித்துள்ள விக்னேஷ் சிவன், அஜித்குமாரின் அடுத்த  படத்தின் பணிகளை தற்போதே தொடங்கி விட்டதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர்...
உண்மையை பேசும் தரமான அரசியல் படம் தான் குதிரைவால்!

உண்மையை பேசும் தரமான அரசியல் படம் தான் குதிரைவால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  குதிரைவால் திரைப்படத்தை ஏன் திரையரங்கில் பார்க்கவேண்டும். படக்குழுவினர் சொல்லும் ரகசியம். தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100% பார்வையாளர்களுடன் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், புது முயற்சிகளை கையில் எடுத்து உருவாகி வரும் புதிய படங்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது ‘குதிரைவால்’ திரைப்படம். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கும் இப்படம் மார்ச் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோன...