புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

சீதையாக நடிக்க நடிகை கரீனாவுக்கு எதிர்ப்பு!

சீதையாக நடிக்க நடிகை கரீனாவுக்கு எதிர்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சீதையாக நடிக்க நடிகை கரீனாவுக்கு எதிர்ப்பு! தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ராமாயண கதையை 3டி தொழில் நுட்பத்தில் சினிமா படமாக எடுக்கின்றனர். சீதை பார்வையில் கதை நகர்வதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். இந்த படத்தில் சீதை வேடத்துக்கு பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீதையாக நடிக்க அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. கரீனா கபூர் கேட்ட தொகையை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்வதா? அல்லது வேறு நடிகையை பார்ப்பதா? என்ற யோசனையில் படக்குழுவினர் உள்ளனர். இந்த நிலையில், சீதை வேடத்தில் கரீனா கபூர் நடிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சீதையாக நடிக்க கரீனா கபூருக்கு அருகதை இல்லை என்றும் அவரை புறக்கணிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்து கடவுளை கவுரவிக்காத கரீனாவை சீதையாக நடிக்...
முடிவை மாற்றிய ‘வலிமை’ படக்குழு!

முடிவை மாற்றிய ‘வலிமை’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முடிவை மாற்றிய ‘வலிமை’ படக்குழு! அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை சுவிட்சர்லாந்து நாட்டில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். இந்த காட்சியை படமாக்கியதும் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால், வலிமை படக்குழு சுவிட்சர்லாந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா விதிமுறைகளால் அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே வெளிநாட்டில் எடுக்க வேண்டிய சண்டைக் காட்சிக...
விஜய் சேதுபதி கே.ஜி.எப். இயக்குனருடன் கூட்டணி!

விஜய் சேதுபதி கே.ஜி.எப். இயக்குனருடன் கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சேதுபதி கே.ஜி.எப். இயக்குனருடன் கூட்டணி! கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக சலார் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சலார் படத்தை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே சைரா நரசிம்மா ரெட்டி, உப்பென்னா...
ஒரே மாதத்தில் பிரம்மாண்ட படத்தில் நடித்து முடிக்க பிரபாஸ் திட்டம்!

ஒரே மாதத்தில் பிரம்மாண்ட படத்தில் நடித்து முடிக்க பிரபாஸ் திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒரே மாதத்தில் பிரம்மாண்ட படத்தில் நடித்து முடிக்க பிரபாஸ் திட்டம்! கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் மது குருசாமி, இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக சலார் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளதாம். மேலும் இப்படத்தில் ஒரே மாதத்தில் நடித்து முடிக்க பிரபாஸ் திட்டமிட்டுள்ளாராம். ஆகஸ்ட் மாதம் முதல் ஆதிபுருஷ் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரு படங்களும் பான்-இந்தியா படங்களாக தயாராக...
முதலிடம் பிடித்த விஜய்யின் ‘மாஸ்டர்’!

முதலிடம் பிடித்த விஜய்யின் ‘மாஸ்டர்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
முதலிடம் பிடித்த விஜய்யின் ‘மாஸ்டர்’! பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி, 2021ஆம் ஆண்டில் இந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமான திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஜனவரி மாதம் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘மாஸ்டர்’ படம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆஸ்பிரன்ட்ஸ் என்கிற வெப் தொடர் இரண்டாம் இடத்தையும், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான தி வைட் டைகர் திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம்-2 திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக தமன்னா நடிப்பில் அண்மையில் வெளியான நவம்பர் ஸ்டோரிஸ் எனும் வெப் தொடர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அதையடுத்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் 6வது இட...
‘மாநாடு’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

‘மாநாடு’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘மாநாடு’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்! வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநாடு படத்தின் டிரெய்லர் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மாநாடு படத்தின் டிரெய்லர் வருகிற ஜூலை 21-ந் தேதி பக்ரீத் பண்டிகையன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது....
பாலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

பாலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
பாலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு அதிகரிக்கும் மவுசு! மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம்வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மூன்று படங்களும் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகின்றன. அதன்படி மாநகரம் படத்தை இந்தியில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இப்படத்தை இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். லோகேஷ் கனகராஜின் மூன்றாவது படமான மாஸ்டரும் விரைவில் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதில் விஜய் கதாபாத்...
‘விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்!

‘விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்! நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். கொரோனா பரவல் குறைந்த பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ், இப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரட்டையர்களான இவர்கள் இருவரும், ஏற்கனவே கேஜிஎப், கைதி, கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது....
25 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் – மீனா!

25 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் – மீனா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
25 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் - மீனா! மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர். தமிழிலும் ‘திரிஷ்யம் 2’ படம் பாபநாசம் 2-ம் பாகமாக உருவாக உள்ளதாகவும், இதில் நடிக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பேசப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கவுதமி, இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக நடிகை மீனாவை நடிக்க வைக்க பேச...
கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் பிரியாமணி!

கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் பிரியாமணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் பிரியாமணி! ‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் நல்ல அறிமுகத்தை பெற்றவர் பிரியாமணி. இவர் சமீபத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தெலுங்கில் ‘நாரப்பா’, ‘விராட்டா பர்வம்’, ‘சயனைடு மோகன்’ உள்ளிட்ட பல படங்களை பிரியாமணி கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களை அடுத்து விவேக் இயக்கத்தில் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். இப்படம் மும்பையில் நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக உருவாகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூஜை போடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ள நடிகை பிரியாமணி, இந்த படத்தில் ஒப்பந்தக் கொலையாளியாக நடிப்பது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. மேலும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதால், அதற்காக தன்னை தயார்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.  ...