நான் சிரித்தால் முழுமையான நகைச்சுவை கலாட்டா – ஹிப் ஆப் ஆதி
இறுதிவரை வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எனது அதிகபட்ச ஆசை - 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி
சில வருடங்களுக்கு முன்பு யூடியூபில் வைரலாக பரவிய குறும் படத்தின் மையக் கருவை அடிப்படையாகக் கொண்டு 'நான் சிரித்தால்' படத்தை உருவாக்கினோம். இதற்கு முன் வெளிவந்த 'மீசைய முறுக்கு' படத்திலும் யூடியூப் பிரபலங்கள் சிலருக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தோம். திறமை வாய்ந்த அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.
'நட்பே துணை' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே எனக்கு 'கெக்க பிக்க' குறும்படம் மிகவும் பிடித்திருக்கிறது இதைத் திரைப்படமாக மாற்ற விரும்புகிறேன் என்று கூறினேன். ஒரு மாதத்தில் முழு கதையையும் எழுதி கொடுத்தார். அப்படித்தான் 'நான் சிரித்தால்' படம் உருவானது.
இப்படம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் என்பதால் படத்தில் வலிமையான கருத்து இருக்க வேண்டும். குற...









