நெப்போலியன் நடிக்கும் ‘அமெரிக்கா ஆவி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
நெப்போலியன் நடிக்கும் 'அமெரிக்கா ஆவி' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன்- குணால் நெப்போலியன் ஆகியோரின் தயாரிப்பில் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் உருவான 'அமெரிக்க ஆவி' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த திரைப்படத்தின் இசையை சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணை தூதரான திரு. டாக்கா ஹாசி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார்.
அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமெரிக்க ஆவி' திரைப்படத்தில் நடிகர் நெப்போலியன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் 200க்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். 'நே...









