‘கரு’ படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி – இயக்குநர் A.L. விஜய்
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கரு’. ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி அறிமுகமாகியிருக்கும் இப்படத்தில் நாக செளர்யா ஹீரோவாக நடித்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் கரு படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் விஜய், “கரு என் கேரியரில் மிக முக்கியமான படமாக நினைக்கிறேன். இந்த கதையை 2014 ஆம் ஆண்டு லைகா நிறுவனத்தில் நான் சொன்னேன், அப்போது அவர்கள் இந்த படத்தை நீங்கள் எப்போது எடுத்தாலும், நாங்கள் தான் தயாரிப்போம் என்று கூறினார்கள், அதன்படி இன்று அவர்கள் இந்த படத்தை ரொம்ப சிறப்பாக தயாரித்திருக்கிறார...








