வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

MOVIES

பிரபாஸை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை இயக்கும் கே.ஜி.எப். இயக்குனர்!

பிரபாஸை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை இயக்கும் கே.ஜி.எப். இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபாஸை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை இயக்கும் கே.ஜி.எப். இயக்குனர்! கே.ஜி.எப் எனும் மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். அடுத்ததாக கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கி முடித்துள்ள இவர், தற்போது பிரபாஸை வைத்து ‘சலார்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சலார் படத்தை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்க உள்ள புதிய படத்தில், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டியில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய் பல்லவி!

பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய் பல்லவி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய் பல்லவி! நடிகை சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் தியா, மாரி 2 போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டு தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரேயா நடிப்பில் வெளியான ‘சத்ரபதி’ என்ற படத்தை தற்போது இந்தியில் ரீ-மேக் செய்ய உள்ளனர். இதில் நாயகனாக தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்க, வி.வி.விநாயக் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் சாய் பல்லவியை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இதில் நடிக்க சாய் பல்லவி ஓகே சொல்லிவிட்டால்...
60 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பூர்ணா!

60 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பூர்ணா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
60 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பூர்ணா! நடிகை பூர்ணா 2004-ல் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் திரிஷ்யம்-2 ரீமேக்கில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் பூர்ணா, அடுத்ததாக அகந்தா எனும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு (வயது 60) ஜோடியாக நடிக்க உள்ளாராம். படத்தில் இவருக்கு ஐபிஎஸ் அதிகாரி வேடமாம். அழுத்தமான கதாபாத்திரம் என்பதால் இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம். மேலும் இப்படம் தனக்கு ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் படமாக ...
டாக்டர் படத்தை ஓ.டி.டி.யிலும் வெளியிட முடியாமல் தவிக்கும் படக்குழு!

டாக்டர் படத்தை ஓ.டி.டி.யிலும் வெளியிட முடியாமல் தவிக்கும் படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
டாக்டர் படத்தை ஓ.டி.டி.யிலும் வெளியிட முடியாமல் தவிக்கும் படக்குழு! சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் கொரோனாவால் திரைக்கு வராமல் பல மாதங்களாக முடங்கி உள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் 26-ந்தேதி படம் வெளியாகும் என்று அறிவித்து தேர்தலால் தள்ளி வைத்தனர். பின்னர் ரம்ஜான் பண்டிகையில் வெளியிட முயன்று ஊரடங்கினால் தடைபட்டுள்ளது. இதையடுத்து டாக்டர் படத்தை ஓ.டி.டி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்க சம்மதித்துள்ளதாகவும், சாட்டிலைட் உரிமையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் டாக்டர் படத்தின் சாட்டிலைட் உரிமை ஏற்கனவே விற்கப்பட்டு விட்டதால் அதை திரும்ப பெறுவதில் சிக்கல் உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் படத்தை ஓ.டி.டி.யிலும் வெளியிட முடியாமல் படக்குழுவினர் தவிப்பில் உள்ளனர். மேலும் ஓடிடி வெளியீட்டிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் எதிர்ப்பு தெரி...
டாக்டர் படத்தின் ரிலீஸ் பற்றி பேச விரும்பவில்லை – தயாரிப்பாளர் அறிக்கை!

டாக்டர் படத்தின் ரிலீஸ் பற்றி பேச விரும்பவில்லை – தயாரிப்பாளர் அறிக்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
டாக்டர் படத்தின் ரிலீஸ் பற்றி பேச விரும்பவில்லை - தயாரிப்பாளர் அறிக்கை! சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தை ரம்ஜான் பண்டியன்று வெளியிட உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், டாக்டர் படம் திட்டமிட்டபடி ரிலீஸாக முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதையடுத்து இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் உலா வந்தன. இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள், டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிடுமாறு படக்குழுவினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து கே...
பாகுபலி பாணியில் வெளியாகும் புஷ்பா!

பாகுபலி பாணியில் வெளியாகும் புஷ்பா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாகுபலி பாணியில் வெளியாகும் புஷ்பா! சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புஷ்பா படம் குறித்த முக்கிய அப்டேட்டை, இப்படத்தின் தயாரிப்பாளர் ரவிஷங்கர் வெளியிட்டுள்ளார். அதன்படி புஷ்பா படம் பாகுபலி, கேஜிஎப் பட பாணியில் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.250 கோடி ...
‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறைவு…. சென்னை திரும்பினார் ரஜினி!

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறைவு…. சென்னை திரும்பினார் ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறைவு.... சென்னை திரும்பினார் ரஜினி! சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. கொரோனா அச்சத்திற்கு நடுவிலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னை திரும்பினார். விரைவில் அவர் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளாராம். டப்பிங் பேசி முடித்த பின் வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ‘அண்ணாத்த’ படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்ப...
முதல்முறையாக இணைந்து நடிக்கும் உதயநிதி – அருள்நிதி!

முதல்முறையாக இணைந்து நடிக்கும் உதயநிதி – அருள்நிதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முதல்முறையாக இணைந்து நடிக்கும் உதயநிதி - அருள்நிதி! திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ளார். அரசியலில் பிசியாக இருந்தாலும், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி. இவர் கைவசம் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக், கண்ணை நம்பாதே, ஏஞ்சல் போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில், இவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி உதயநிதி அடுத்ததாக நடிக்கும் படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர் அருள்நிதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டணி உறுதியானால் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையும். உதயநிதியும், அருள்நிதியும் ம...
ஆக்‌ஷன் பயிற்சியில் தீவிரம் காட்டும் ரெஜினா!

ஆக்‌ஷன் பயிற்சியில் தீவிரம் காட்டும் ரெஜினா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஆக்‌ஷன் பயிற்சியில் தீவிரம் காட்டும் ரெஜினா! கண்ட நாள் முதல் படம் மூலம் அறிமுகமான ரெஜினா கசான்ட்ரா தொடர்ந்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். சமீபத்தில் வெளியான ‘சக்ரா’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் உருவாகும் புதிய படத்துக்காக ரெஜினா கசான்ட்ரா தயாராகி வருகிறார். இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் ரெஜினா நடிக்கிறார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நிவேதா தாமஸ் நடிக்கிறார். கொரியன் மொழியில் உருவான ‘மிட்நைட் ரன்னர்ஸ்’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்துக்காக இருவரும் கராத்தே உள்ளிட்ட முக்கிய ஆக்‌ஷன் பயிற்சிகளை எடுத்து வருகின்றனர். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை ஒரே நேரத்தில் தமிழிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது....
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் பிரபாஸ்!

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் பிரபாஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் பிரபாஸ்! இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2016-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உயர்ந்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸ் உடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் சுதா கொங்கரா பிரபாஸுக்கு கதை சொன்னதாகவும், அந்த கதை பிரபாஸுக்கு பிடித்துப்போனதால் அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப...