வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

MOVIES

நிம்மதியா வேலை செய்ய விடுங்கப்பா… வெங்கட் பிரபு கோபம்!

நிம்மதியா வேலை செய்ய விடுங்கப்பா… வெங்கட் பிரபு கோபம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நிம்மதியா வேலை செய்ய விடுங்கப்பா... வெங்கட் பிரபு கோபம்! வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‘மாநாடு’. சிம்பு நாயகனாக நடிக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சம்பள விஷயத்தில் வெங்கட் பிரபுக்கும், சுரேஷ் காமாட்சிக்கும் தகராறு, படம் பாதியில் நிற்கிறது என்று செய்திகள் வெளியானது. இதையறிந்து கோபமடைந்த வெங்கட் பிரபு "யப்பா சாமி.. ஏன் ஏன் ஏன்.. தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க. மாநாடு படத்தின் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நிம்மதியா வேலை செய்ய விடுங்கப்பா" என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்....
சூர்யாவை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி!

சூர்யாவை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சூர்யாவை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி! பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. முழுநீள காமெடி திரைப்படமான இது ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. இந்தப் படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிப்பதோடு இயக்கவும் உள்ளார். இந்நிலையில், இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் சத்யராஜ், ஊர்வசி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு ‘வீட்ல விசேஷங்க’ என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது....
ஐஸ்வர்யா ராயை குடும்பத்தினருடன் சந்தித்த வரலட்சுமி சரத்குமார்!

ஐஸ்வர்யா ராயை குடும்பத்தினருடன் சந்தித்த வரலட்சுமி சரத்குமார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஐஸ்வர்யா ராயை குடும்பத்தினருடன் சந்தித்த வரலட்சுமி சரத்குமார்! ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாக்கி வருகிறார். இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, விக்ரம் பிரபு, திரிஷா, ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் புதுச்சேரியில் தொடங்கி உள்ளது. ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புதுச்சேரியில் ஷூட்டிங்கில் இருக்கும் சரத்குமாரை பார்ப்பதற்காக அவரின் மகள்களான வரலட்சுமியும், பூஜாவும் சென்றுள்ளனர். அங்கு ஐஸ...
தந்தை பட டைட்டிலை கைப்பற்றிய சூர்யா!

தந்தை பட டைட்டிலை கைப்பற்றிய சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தந்தை பட டைட்டிலை கைப்பற்றிய சூர்யா! நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ளனர். இதுவரை சூர்யா 40 என்று அழைத்து வந்த இப்படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதற்குமுன் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற தலைப்பில் நடிகர் சிவக்குமார் நடித்த படம் 1976 ஆம் ஆண்டு வெளியாகி இருக்கிறது....
எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்!

எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்! பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அவன் இவன்’. இப்படத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில், எனிமி படத்தின் டீசரை ஜூலை 24 ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி!

சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி! குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்த ஷாலினி, கடந்த 1997- ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரவேண்டும் என பல திரைப்படங்களில் நடித்தார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினிக்கும் அஜித்துக்கு இடையே காதல் மலர்ந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு அனோஷ்கா என்ற பெண் குழந்தையும் ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். திருமணம் முடிந்த பிறகு நடிகை ஷாலினி படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஷாலினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மண...
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்!

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்! மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதில் முக்கிய காட்சிகளை படமாக்க இயக்குனர் மணிரத்தினம் திட்டமிட்டிருக்கிறார். இதனால் நடிகர்கள் கார்த்திக், பார்த்திபன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பாண்டிச்சேரி சென்று உள்ளனர். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராயும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளர். இங்கு நடைபெறும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அனைவரும் ஐதராபாத் செல்ல இருக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் படத்தின் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது....
பிரபல நடிகரின் படத்தில் நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்!

பிரபல நடிகரின் படத்தில் நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல நடிகரின் படத்தில் நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்! ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தெலுங்கில் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘விராட பருவம்’. வேணு உடுகுலா இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ், நக்சலைட்டாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக...
நடிகர் கார்த்தி விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு தளத்துக்கு திடீர் விசிட்!

நடிகர் கார்த்தி விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு தளத்துக்கு திடீர் விசிட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் கார்த்தி விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு தளத்துக்கு திடீர் விசிட்! விஜய் நடிக்கும் பீஸ்ட், கார்த்தியின் சர்தார் ஆகிய 2 படங்களின் படப்பிடிப்புகளும் சென்னை பூந்தமல்லி அருகே ஒரே ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. சர்தார் படத்தில் கார்த்தி வயதான தந்தை மற்றும் மகனாக இரு வேடங்களில் நடிக்கிறார். அவர் வயதானவராக நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. சர்தார் படத்துக்காக போடப்பட்ட முதியவர் கெட்-அப் உடன் நடிகர் கார்த்தி திடீரென்று விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு அரங்குக்கு  சென்றுள்ளார். முதியவர் கெட்-அப்பில் இருந்ததால், அங்கு கார்த்தியை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையாம். இதனால் சில நிமிடங்கள் ஓரமாக நின்று படப்பிடிப்பை பார்த்துக்கொண்டு இருந்த அவர், பின்னர் நடிகர் விஜய் அருகில் சென்று நான்தான் கார்த்தி என்று தன்னை அறிமுகம் செய்துள்ளார். கார்த்தியின் தோற்றத்தை பார்த்த வியந்து போ...
“அருள்நிதி 15”  படத்தின் மொத்த உரிமைகளையும் கைப்பற்றிய சக்தி பிலிம் பேக்டரி!

“அருள்நிதி 15”  படத்தின் மொத்த உரிமைகளையும் கைப்பற்றிய சக்தி பிலிம் பேக்டரி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "அருள்நிதி 15"  படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றியது, B.சக்திவேலன் அவர்களின் Sakthi Film Factory நிறுவனம் !  MNM Films நிறுவனத்தின் சார்பில் அரவிந்த் சிங் தயாரிக்க, YouTuber விஜய் குமார் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார் B. சக்திவேலன் அவர்களின் Sakthi Film Factory  நிறுவனம் தமிழ் திரைத்துறையில் ரிலீஸ் மற்றும் மார்க்கெட்டிங் மூலம் பல அற்புதமான வெற்றி திரைப்படங்களை தந்துள்ளது. அவர்களின் மிகச்சிறந்த மார்க்கெட்டிங் உத்திகள், ரிலீஸில் அவர்கள் கடைப்பிடிக்கும் புதுமையான நடைமுறைகள்,  பட்டி தொட்டி வரை, திரைப்படங்களை அவர்கள் கொண்டு சேர்க்கும் பாங்கு, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் நடிகர்கள் மத்தியில்  Sakthi Film Factory  நிறுவனத்திற்கு மிகப்பெரிய பெயரினை பெற்று தந்திருக்கிறது. திரைத்திறையில் புகழ்பெற்ற நிறுவனமாக மாறியுள்ள, Sakthi Film Factory நிறுவனம் முதல் முறையாக ஒரு திரை...