மூத்த ஆய்வாளர்களுக்கு பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகள்
மூத்த ஆய்வாளர்களுக்கு பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகள்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 10.9.2021 அன்று “மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்த மூத்த ஆய்வாளர்களான மறைந்த பெரியசாமித்தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி. ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும் மூத்த ஆய்வாளர்களான சீனி விசுவநாதன், பேராசிரியர் முனைவர் மணிகண்டனுக்கும் தலா 3 லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டு சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மகாகவி பாரதியார் மூத்த ஆய்வாளர்களான சீ...









