ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து வழங்கும் படம் “ திருப்பதிசாமி குடும்பம் “
இந்த படத்தில் ஜே.கே,ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இயக்கம் - சுரேஷ்சண்முகம். இவர் வெற்றிபெற்ற அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கியவர்.
படம் பற்றி தயாரிப்பாளர் பாபுராஜா கூறியதாவது...
சூப்பர் குட் பிலிம்ஸில் 25 வருடம் தயாரிப்பு நிர்வாக...
தமிழ் சினிமா ரசிகர்களின் 'டார்லிங்' என அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி இன்று தனது பிறந்தநாளை, விமர்சையாக இல்லாமல் , தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடவுள்ளார். காலையில் தன் தாயார் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பிறகு தான் தத்தேடுத்து வளர்க்கும் ஆதரவற்ற குழந்தைகளோடு தனது பிறந்தநாள் பரிசுகளையும் கேக்குகளையும் பகிரவுள்ளார். ''பகிருதலில் இருக்கும் சந்தோஷம் எதிலும் இல்லை. சின்ன வயதிலிருந்தே பகிரும் எண்ணத்தையும் பழக்கத்தையும் எனது தாயார் எனது மனதில் பதித்தார். எனக்கு கிடைத்துள்ள பரிகளையும் கேக்குகளையும் இந்த குழந்தைகளுடன் பகிர்வதில் எனக்கு கிடைக்கும் அளவற்ற சந்தோஷம் எனது பிறந்த நாளை மேலும் சிறப்பிக்கும். ''சந்தோஷமாய் இருப்பது, எளியோர்க்கு உதவுவது மற்றும் ஒழுக்கம் கடைபிடிப்பது'' என்ற எனது வாழ்க்கை தீர்மானத்தை இந்த வருடமும் பிறந்தநாள் தீர்மானமாக பின்பற்றவுள்ளேன்'...
கதை பிடித்துப்போன பிறகே இசையமைக்க ஒப்புக் கொண்ட இசைஞானி இளையராஜா!
கதை பிடித்துப்போன பிறகே இசையமைக்க ஒப்புக் கொண்டு இசைஞானி இளையராஜா ‘களத்தூர் கிராமம்’ படத்துக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.
கிராமம் அதன் மண் , மக்கள் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம் தான் ‘களத்தூர் கிராமம்’ . இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சரண் கே. அத்வைதன். ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார். டட்டூ சினிமா ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்.
கிஷோர் கதை நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக வருகிறார் யக்னா ஷெட்டி . இவர் ஏற்கெனவே சில கன்னடப் படங்களில் நடித்திருப்பவர். இவர்கள் தவிர ‘தகராறு
‘சுலீல் குமார், அஜய் ரத்னம் , தீரஜ் ரத்னம்ர...
ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின்
ஒன் ஹார்ட்
இந்த தலைமுறையின் ஒப்பற்ற இசை மேதை ஏஆர் ரஹ்மான். தமிழைத் தவிர வேறு மொழிகளை பேசும் இந்த உலகில் உள்ள அனைவர்களுக்கும் தமிழிசையின் இனிய சாற்றினையும், இந்திய இசையின் இனிமையையும் ஒரே சேர அளித்து தனித்துவமான அடையாளத்துடன் வலம் வருபவர். ஆஸ்கார் விருதை இந்திய திரையிசை அமைப்பாளர்களாலும் பெற முடியும் என்பதை தன்னுடைய திறமையால் நிரூபித்தவர். இவரின் சிந்தனையில் உருவான படம் தான் ‘ஒன் ஹார்ட் ’
ஒன் ஹார்ட்..!
தமிழ் சினிமா ரசிகர்கள் என்றைக்கும் புதுமையை ஆராதித்து கொண்டாடுபவர்கள். அவர்களுக்கு கான்சர்ட் ஜேனர் என்ற புதுவகையான சினிமாவை ‘ஒன்ஹார்ட் ’படத்தின் மூலமாக அறிமுகப்படுத்துகிறார் ஏஆர் ரஹ்மான்.
கான்சர்ட் ஜேனர் என்றால், ஒரு இசைகலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிக்கரமாக மேடையேற்றுகிறார் என்பதை ...
திரையரங்குகள் பராமரிப்பு இல்லை, GSTவரி விதிப்பால்டிக்கட் கட்டண உயர்வு, அதனால் சினிமா பார்க்க வருபவர்கள் குறைந்து வருகிறார்கள். இதனால் டிக்கட் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று கூறி வரும் சூழலில் GSTவரி விதிப்பால் தமிழ் சி னிமாவுக்கு வசூல் பாதிப்பு இல்லை என்றார் தமிழ் சினிமா சேம்பர், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்.
இன்றைய இளைய தலைமுைறையினரின் ரசனைக்கு ஏற்ப உலகம் முழுவதும் தியேட்டர்கள் நவீன தொழில் நுட்பங்களால் மாறுதல் செய்யப்பட்டு வருகிறது. வட இந்தியாவிலும், ஹைதராபாத், பெங்களுர் சென்னை போன்ற நகரங்களில் மால் தியேட்டர் வளாகம் அதிகரித்து வருகிறது, தமிழ் சினிமா ரசிகன் தமிழகத்தில் அதிகமாக படம் பார்க்க கூடிய தியேட்டர்கள் நவீனப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து திரைப்பட துறையினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.
சென்னை நந்தம்ப...
“அடி வாடி திமிரா!”
த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா உடன்
‘ஹாட்ரிக்’ ஹிட் கவிஞர் உமாதேவி!
தமிழ் திரைப்பாடல் உலகில் மிக முக்கியமான ஆளுமையாக, திறமையான பாடலாசிரியராக தனிப்பாதையில் பயணிப்பவர், கவிஞர் உமாதேவி.
Aramm | Pudhu Varalaare Song Making Video:
https://www.youtube.com/watch?v=DehjuJ3MzNs
‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘நான், நீ, நாம் வாழவே’ பாடல் உமாதேவிக்கு சிறப்பான அறிமுகத்தை தந்தது. அதன்பின், ‘கபாலி’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘மாயநதி’ மற்றும் ‘வீரத்துரந்தரா’ பாடல்கள் உமாதேவியின் எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன.
இப்போது, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாநாயகிகளான, த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா மூவருடன் கைகோர்த்திருக்கிறார், உமாதேவி. த்ரிஷா, விஜயசேதுபதி நடிக்கும் ‘96’, ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும், நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ ஆகிய 3 படங்களுக்கும் ஒரே நே...
நம்ம மூவீஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிக்க அன்பரசன் இயக்கத்தில் 'நம்ம விவசாயம்' என்ற பாடல் மற்றும் காட்சி தொகுப்பு உருவாக்கியிருக்கிறார்கள். சி.சத்யா இசையமைத்திருக்கும் இந்த பாடல் மற்றும் காட்சி தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இந்த அமைப்பின் அடுத்தடுத்த திட்டங்களை பற்றிய ஒரு அறிமுகமும் கொடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் குறு விவசாயிகள் மட்டும் 82 சதவீதம் இருக்கிறார்கள். சொந்த முயற்சியில் அரசின் ஆதரவு இல்லாமலேயே விவசாயம் செய்து வருகிறார்கள். அரசின் மானியமும் கிடைப்பதில்லை. நம்ம விவசாயம் சார்பில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விவசாயத்தையும், விவசாயிகளையும் ஆதரிப்போம் என்றார் ஷங்கர்.
விவசாயம் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. மூன்று போகம் விளையக்கூடிய தஞ்சையில், யாரும் காசு கொடுத்து அரிசி வாங்கியதே இல்லை. ஆனால் தற்போது நிலைமை தலைகீழ். தஞ்சை...
தொட்டிலை ஆட்டும் அதே பெண்களின் கைகள் உலகையும் ஆள முடியும் என்பதை பெண்கள் உணர்த்தியே வருகிறார்கள். அந்த வகையில் வீட்டில் இருந்தே சாதனை புரியும் பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் நேச்சுரல்ஸ் வழங்கும் சுயசக்தி விருதுகள். இந்த விருது வழங்கும் விழா சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள முத்தா வெங்கட் சுப்பாராவ் ஹாலில் நடந்தது.
விண்ணப்பித்திருந்த பல ஆயிரம் பெண்களில் இருந்து 150 பெண்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஸ்டெர்லின் நித்யா, உமா சுப்ரமணியம், பிரியா ஆகியோர் இணைந்து விழாவுக்கான தீம் இசையை அமைத்து கொடுத்திருக்கிறார்கள். ஸ்வாதி என்பவர் ட்ராஃபியை வடிவமைத்திருக்கிறார்.
விழா ஸ்டுடியோ 6 நடன குழுவினரின் ஃபியூஷன் நடன நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து இசைக்கலைஞர் அனில் ஸ்ரீநிவாசன், பாடலாசிரியர...
‘ஆளுக்கொரு வீடு கட்டுவோம்” என்று பாடிய புரட்சித்தலைவரின் வரிகளுக்கு உயிர் கொடுத்து, சொந்த வீடு வேண்டும் என்று கனவு காணும் தமிழக மக்களின் ஆசைக் கனவுகளை ஈடேற்றி, அனைவருக்கும் வீடு” என்னும் குறிக்கோளை நிறைவேற்றிட, ஜெயலலிதா, தொலைநோக்குத் திட்டம் 2023 ஆவணத்தில், தமிழக மக்கள் அனைவருக்கும் வீட்டுவசதி அளிப்பதையும், தமிழ்நாட்டை குடிசைப் பகுதிகள் அற்ற மாநிலமாக மாற்றுவதையும், தனது இலட்சிய நோக்காக பிரகடனப்படுத்தினார். ஜெயலலிதாவின் இந்த உயரிய எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்திட, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு சீர்திருத்தங்களையும், கட்டுமானத் தொழில் செய்வதை எளிதாக்கும் நடவடிக்கைகளையும் அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகின்றது.
மேலும் அகில இந்திய அளவில், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், மிக அதிக அளவிலான வீட்டுவசதி அலகுகள் ஒப்புதல் பெறப்பட்டு, மேலு...