தியேட்டர் கட்டணம் உயர்வு: கேளிக்கை வரி பிரச்சினையில் பெரும் பேரம் நடந்துள்ளது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
தியேட்டர் கட்டணம் உயர்வு: கேளிக்கை வரி பிரச்சினையில் பெரும் பேரம் நடந்துள்ளது - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசுடன் போராடி கோரிக்கையில் வெற்றி பெற முடியாத திரையரங்க உரிமையாளர்கள், இப்போது திரையரங்க நுழைவுச் சீட்டுக் கட்டணத்தை 18 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. இது கண்டிக்கத்தக்கதாகும்.
கேளிக்கை வரி குறித்து முடிவெடுப்பதற்காக இரு தரப்பு பிரதி நிதிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக திரையரங்க உரிமையாளர்களே தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழுக்களுக்கு இடையிலான பேச்சுக்கள் அடுத்த சில நாட்களில் முடிவடைய வாய்ப்பிருக்கிறது. ...









