ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்!

தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்! தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவத்தொடங்கியது. சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருப்பூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு இருந்து வந்தநிலையில் இந்த மாதம் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும் தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் மேலும் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மதக்கூட்டங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள், பஸ்களில் நின்று பயணம் செய்ய...
ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’… அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’… அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு! பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தை ‘பானா காத்தாடி’ புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ரியோ நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ரோபோ ஷங்கர், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற ஏப்ரல் 30-ந் தேதி ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ...
‘தமிழ் படம்’ இயக்குனருடன் இணையும் விஜய் ஆண்டனி!

‘தமிழ் படம்’ இயக்குனருடன் இணையும் விஜய் ஆண்டனி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘தமிழ் படம்’ இயக்குனருடன் இணையும் விஜய் ஆண்டனி! திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தற்போது பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி, அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர மேலும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். அதன்படி, தமிழ்படம் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாக உள்ளது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதா...
தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா பாதிப்பு!

தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா பாதிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், தனுஷின் மாரி-2 படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் டொவினோ தாமசும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ‘கள’ என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பில், கலந்துகொண்ட டொவினோ தாமஸ், சண்டைக்காட்சியில் நடிக்கும்போது விபத்தில் சிக்கினார். இதில் அவரது வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பிறகு ஆபரேஷன் செய்து, காயம் குணமாகி தற்போது படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....
மீண்டும் இணையும் மதயானை கூட்டம்!

மீண்டும் இணையும் மதயானை கூட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் இணையும் மதயானை கூட்டம்! விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் கதிர், ஓவியா நடிப்பில் வெளியான படம் `மதயானை கூட்டம்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்குப் பிறகு விக்ரம் சுகுமாறன் `இராவண கோட்டம்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், விக்ரம் சுகுமாறன் அடுத்ததாக மீண்டும் கதிரை வைத்து புதிய படம் இயக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த புதிய படத்தை லிப்ரா புரொடக்‌ஷன் ரவீந்தர் தயாரிக்க இருக்கிறார். விரைவில் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியலை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்....
ஆர்யா படத்தில் நடித்த அரவிந்த் சாமி!

ஆர்யா படத்தில் நடித்த அரவிந்த் சாமி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஆர்யா படத்தில் நடித்த அரவிந்த் சாமி! தமிழில் ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான இவர், சில வருடங்களாக நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். தற்போது அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, ‘கள்ளபார்ட்’, ‘தலைவி’ ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படங்களை நடிகர் அரவிந்த் சாமி தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வந்தார். தற்போது இந்த படத்திற்கு தமிழில் ‘ரெண்டகம்’ என்றும் மலையாளத்தில் ‘ஒட்டு’ என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்த...
மகத் காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்!

மகத் காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மகத் காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்! ‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடனும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடனும் சேர்ந்து நடித்தவர் மகத். இவர் சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். இந்நிலையில், மகத் நடிப்பில் உருவாகி வரும் ‘காதல் ConditionsApply’ என்ற படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரையும் நடிகர் சிம்பு வெளியிட்டிருக்கிறார். லிப்ரா புரொடக்‌ஷன் ரவீந்தர் தயாரிக்கும் இந்த படத்தை அரவிந்த் இயக்குகிறார். தற்போது இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை!

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை! கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு , இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது.தற்போது தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகத்தால் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- படைகள் பின்வாங்கினாலும் இந்தியா-சீனா எல்லை பதற்றங்கள் அதிகமாகவே இருக்கின்றன. எல்லை மோதலை அமெரிக்கா நெருக்கமாகப் கண்காணித்து சீனாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக கண்டித்துள்ளது. இந்தியா கோரிய சில ராணுவ தளவாடங்களையும் வழங்கி உள்ளது. இந்தியாவுக்க...
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு! சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோவுகள் மே 4-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டு இருந்த  நிலையில், டெல்லியில் மத்திய கல்வித்துறை மந்திரி  மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகலில் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பிறகு, மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா 2-வது அலை காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. வரும் 4ந் தேதி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.  சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. வரும் 4ந் தேதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க இருந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1ஆம் தேதி ஆய்வுக...
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு!

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு! அஜித்குமார் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி ஆகிய படங்கள் மூலம் மேலும் பிரபலமானார். விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததன் மூலம் நட்சத்திர இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார். இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு 1947 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இணை தயாரிப்பு ஓம் பிரகாஷ் பட். பொன் குமரன் இந்தப் படத்தை இயக்குகிறார். தற்போது படத்தின் முன்னணி பணிகள் தொடங்கியுள்ளது. விரைவில் இப்படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து முறைப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க...