செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

ஒருபால் திருமணத்தை அங்கீகரிக்கும் 377 சட்டப்பிரிவு காட்டுமிராண்டித்தனமானது – துரைமுருகன் சர்ச்சை பேச்சு

ஆணும், ஆணும் பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்வது காட்டுமிராண்டித்தனமானது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் தன் பால் ஈர்ப்பில் ஈடுபடுவது குற்றமல்ல கூறி சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அண்மையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பிற்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது.
இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் திருநெல்வேலியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்வது காட்டுமிராண்டித்தனம். காட்டுமிராண்டித்தனத்திற்கு சட்டமும் சிலரும் துணைபோகிறார்கள் என பேசினார். அவரது இந்த பேச்சு தற்போது விவாதமாகி இருக்கிறது.
399 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன