செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு இரண்டு மாநிலத்தில் வாக்காளர் அட்டை…?! வைரல் ஆகும் பரபரப்பு !

திருப்பதியில் வாக்காளர் அட்டை வைத்திருக்கும் சத்ய நாராயணன் அதிமுகவின் தி.நகர் எம்.எல்.ஏ. ஆனது எப்படி ?

தி.நகர் அதிமுக எம்.எல்.ஏவாக இருக்கும் சத்யா என்கிற சத்தியநாராயணன் 2011-16ல் சென்னை மாநகராட்சியின் 130 வார்டு கவுன்சிலராக இருந்தார். சி.எம்.டி.ஏவில் நியமன குழு உறுப்பினராகவும் இருந்தார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்த போது, தி.நகரில் மட்டுமே வாக்குரிமை உள்ளதாக அபிடவிட்டில் கூறியுள்ளார்.

ஆனால் ஆந்திரா மாநிலம் சித்தூர் தொகுதியில் திருப்தியில் 257/பிளாட்405, 4வது மாடி, பத்மாவதி டவர்ஸில் வீடு இருக்கிறது. இந்த முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை எண்.AYM 2119387..ஆனால் பிறந்த தேதி மாறியுள்ளது..10.6.1963 என்று உள்ளது. உண்மையான பிறந்த தேதி 27.2.1963..
13.10.2016 சத்யாவுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது..

இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், வேட்பு மனு தாக்கலில், தவறான தகவல் மற்றும் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள காரணங்களை குறிப்பிட்டு சத்யாவின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க சட்டத்தில் இடம் உண்டு.
அதிமுக அரசின் இப்போதைய நிலை ஒவ்வொரு எம்.எல்.ஏவும் அவர்களது ஆதரவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிக அவசியம்.
அப்படி இருக்கும் போது தகவல் உண்மையாக இருந்தாலும் நடவடிக்கைகள் எதுவும் இருக்காது.

376 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன