
119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
நிஜாமாபாத் பகுதி பாராளுமன்ற உறுப்பினராக முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் ஆட்சி செய்யும் தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இதுபோல் பா.ஜ.க. ஆட்சி நடக்கும் எந்தவொரு மாநிலத்திலாவது வழங்கப்பட்டுள்ளதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் தெலுங்கானா மாநில அரசு முதலிடத்தில் உள்ளது. தெலுங்கானாவில் மின்சாரப் பற்றாக்குறை என்பதே இல்லை. ஆனால், மோடி அவர்களே.., தெலுங்கானாவில் மின்சாரம் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவைப்போல் நான் யாருக்கும் பயந்தவனல்ல. ஒரு முதல் மந்திரிக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை நீங்கள் சுமத்த முடியாது. இப்படிப்பட்ட பொய்யை நீங்கள் எப்படி சொல்லலாம்?
பொறுப்புள்ள பிரதமர் பதவியில் இருக்கும் நீங்கள் ஓட்டுக்காக இப்படி பொய் சொல்ல கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
